Advertisment

குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க சில குறிப்புகள் - Psychologist Aisha

எல்லா பெற்றோர்களும் குழந்தைகளை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என்று தான் நினைக்கின்றனர். ஆனால் பலமுறை குழந்தைகள் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்றும் வருந்துகின்றனர். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று Psychologist Aisha கூறியதை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
gentle parenting

Image is used for representational purpose only

குழந்தைகளை வளர்ப்பது சாதாரண விஷயம் அல்ல. பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதில் நிறைய சிரமங்களை அனுபவிக்கின்றனர். அதேபோல் பல பெற்றோர்கள் அவர்கள் சொல்வதை குழந்தைகள் கேட்பதில்லை என்றும் கூறுகின்றனர். SheThePeople Tamil உடன் நடந்த நேர்காணலில் Psychologist Aisha குழந்தைகளை நல்லபடியாக எப்படி வளர்க்க வேண்டும் என்று பகிர்ந்து கொண்டார்.

Advertisment

நல்லவிதமாக குழந்தையை வளர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லாதீர்கள், நீங்கள் அதை செய்யுங்கள் குழந்தைகள் தானாகவே உங்களை பின்பற்றுவர். உங்களுக்கு உங்கள் குழந்தை புத்தகம் படிக்க வேண்டும் என்றால் நீங்கள் புத்தகம் படியுங்கள், குழந்தை சீக்கிரமாக தூங்க வேண்டும் என்றால் நீங்கள் சீக்கிரமாக தூங்குங்கள், குழந்தைகள் நீங்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்றால், உங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றால் நீங்களும் இவர்கள் சொல்லுவதை கேட்க வேண்டும், அதேபோல் நீங்களும் குழந்தைகளை மரியாதையோடு நடத்த வேண்டும்.

Wonder Human Psychologist Aisha

இப்பொழுது குழந்தைகள் ஏதாவது சொல்ல வந்தால் பெற்றோர்கள் தங்களின் கைபேசியை பார்த்துக் கொண்டே எனக்கு டென்ஷனாக இருக்கிறது, அப்புறம் பேசிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுகின்றனர். அல்லது கைபேசியை பார்த்துக் கொண்டு சொல்வதை ஒழுங்காக காது கொடுத்து கேட்காமல் இருக்கின்றனர். இதேபோல் குழந்தைகள் பெற்றோர்கள் சொல்வதை கவனிக்கவில்லை என்றால் குழந்தைகளை குறை சொல்கின்றனர். நீங்கள் தான் அவர்களுக்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை காட்ட வேண்டும்.

Advertisment

குழந்தைகள் அப்படி என்ன பெரிதாக பேசி விடப்போகிறார்கள், பள்ளியில் நடந்த சிறு சிறு விஷயங்களை தான் பகிர்வார்கள் அதை கேட்டுவிட்டு தான் போலாம் அல்லவா? நீங்கள் அவர்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டீர்கள் ஆனால் அவர்களிடம் இருந்து அதை எதிர்பார்க்கிறீர்கள். குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்க மறுத்ததை உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது அன்பு, மரியாதை, நேரம் என எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் அதைக் கொடுத்தால் அவர்களும் உங்களுக்கு தருவார்கள்.

child and parent

குழந்தைகளுக்கு பழங்கள் சாப்பிடுவது பிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள் என்றால் நீங்கள் பழங்களை உண்ணும் போது "ஐ சூப்பர்! ஃப்ரூட் சாப்பிட போறோம்" என்று சாப்பிட்டால் அவர்களுக்கும் அது ஆர்வத்தை ஏற்படுத்தும். நீங்கள் "இப்ப வாய தொற, இதை சாப்பிட்டே ஆகணும்" என்று அதை திணித்தால் அவர்களுக்கு அது பிடிக்காமல் போகலாம். பழங்களில் சாதாரணமாகவே நல்ல சுவை கொண்டது தான், இருப்பினும் நீங்கள் அதை அவர்களுக்கு தரும் விதத்தில் தான் இருக்கிறது. நீங்கள் நல்ல விஷயங்களை செய்தீர்கள் என்றால் அவர்களும் அதையே செய்வார்கள்.

Advertisment

குழந்தைகளிடம் பேசுவது அவசியம், நீங்கள் கட்டளை இடுவதை மட்டும் அவர்கள் கேட்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது வேலைக்கு ஆகாது. வருங்காலத்திலும் உங்கள் குழந்தைகளை பலர் தவறாக பயன்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. மற்றவர்களுக்கு பிடிக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் தாங்கிக் கொள்வார்கள். நல்ல குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்றால் அந்த எதிர்பார்ப்பை நிறுத்திவிட்டு நீங்கள் அதுபோல நடந்து கொண்டால் அவர்களும் அதை பின் தொடர்வார்கள்.

குழந்தைகளை நல்லபடியாக எப்படி வளர்க்க வேண்டும் என்று Psychologist Aisha பகிர்ந்து கொண்ட விஷயங்களை கண்டோம். இதே போல் பலரும் குழந்தைகள் பெற்றோர்களின் சொற்களை விட, பெற்றோர்கள் நடந்து கொள்ளும் விதத்தை மிகவும் கூர்மையாக கவனிக்கின்றனர் என்றும் கூறியுள்ளனர். எனவே, குழந்தைகளுக்கு சொல்லி புரிய வைப்பதை விட அவர்கள் பார்க்கும் விஷயங்களை வைத்து தான் அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற பல பயனுள்ள தகவல்களையும், மிகவும் கண்டிப்பாக குழந்தையை வளர்ப்பதினால் ஏற்படும் விளைவுகளையும் பற்றி Psychologist Aisha பகிர்ந்து கொண்டார். அதனை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Advertisment

Click Here: Wonder Human Aisha | Psychologist | First Media Psychologist

 

Suggested Reading: காதல் உறவில் இருக்கும் சிவப்பு கொடிகள் Psychologist Aisha

Advertisment

Suggested Reading: சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் Swati Jagdish (Mayas Amma)

Suggested Reading: Life Coach Priya Dhandapaniயின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: Anupama's Vriksham பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!

Advertisment

 

Psychologist Aisha gentle parenting
Advertisment