மனிஷா சோப்டா அவரது தொழிலை சொந்தமாக வருமானம் வேண்டும் என்ற எண்ணத்தால் அக்டோபர் 2021யில் ஆரம்பித்தார். "நான் மிகவும் ஸ்டிக்கான(strict) ஒரு குடும்பத்திலிருந்து வருகிறேன். எனது பெற்றோர்கள் என்னை வேலையை விட சொல்லி, திருமணம் செய்து கொள்ள கூறினர். அப்பொழுதுதான் இந்த திருமண அழுத்தத்தில் இருந்து வெளிவர வழிகளை யோசிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகு எனது பொழுதுபோக்கை ஒரு தொழிலாக மாற்றிக் கொண்டேன்" என்று கூறுகிறார்.
இந்த Resin Artistics மூலம் அவர் நகைகள், புக் மார்க், அலங்காரப் பொருட்கள், பெயர் பலகைகள், கோஸ்டர், கீ செயின், பிராண்ட் பிலேட் போன்றவையை வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப செய்து தருகிறார். "ரெசினுடன் வேலை செய்வதில் எது சிறந்தது என்றால் அதை பலவகையில் நம்மால் பயன்படுத்த முடியும். ரெசினை வைத்து நம்மால் பல வடிவங்களை, டிசைன்களையும் செய்ய முடியும்" என்று பகிர்ந்து கொண்டார்.
திறமையை மேம்படுத்துதல்:
மனிஷா கூறுகிறார், அவர் பல மணி நேரங்களை YouTube இல் செலவிடுகிறார். இதைப்பற்றி பல்வேறு விஷயங்களை YouTubeயின் மூலம் கற்றுக் கொள்கிறார். இதுதான் அவருக்கு இந்த முயற்சியை தொடங்க நம்பிக்கையை அளித்தது. உண்மையான சவால்கள் எப்போது தொடங்கியது என்றால் அந்த பொருளை செய்து மக்களை அதை வாங்க வைப்பதில்தான் இருந்தது. அவரின் முழு நேர வேலையையும், இந்த முயற்சியையும் ஒன்றாக செய்ய முதலில் சில தடுமாற்றங்களை அவர் எதிர்கொண்டார். பிறகு படிப்படியாக நேரத்தை எப்படி பிரித்து எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டார்.
தொழில் முனைவு பாடங்கள்:
அவர் தனக்கு வந்த முதல் ஆர்டர் பற்றி நினைவு வைத்திருக்கிறார். "நான் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்து விட்டேன். அன்றிலிருந்து இன்று வரை நான் இந்த தொழிலில் இருந்து திரும்பி பார்ப்பதில்லை. இந்த தொழிலில் முதல் கட்டமாக எனது இன்ஸ்டாகிராம்(Instagram) பக்கத்தில் 500 பேர் என்னை பின்தொடர தொடங்கிவிட்டனர்" என்று கூறுகிறார்.
பொருளை உருவாக்குவதில் இருந்து அதற்கு எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டும், அதை எப்படி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், பேக்கேஜிங் மற்றும் அனைத்தையும் இவர் ஒருவரே தனியாக பார்த்துக் கொள்கிறார். "தொழில் முனைவு உங்களுக்கு நெகிழ்ச்சியையும், பொறுமையையும் கற்பிக்கிறது, அது மட்டும் இன்றி உலகத்தைப் பற்றிய சிறந்த புரிதலை உங்களுக்கு அது வழங்குகிறது" என்று கூறுகிறார்.
"உங்கள் முதல் படியில் தான் அனைத்துமே உள்ளது. நீங்கள் இன்று ஒரு நிபுணராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அது உங்களை முயற்சிப்பதிலிருந்து தடுக்கக்கூடாது. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அனுபவங்கள் தான் ஒருவரை அதில் நிபுணர் ஆக்குகிறது. எனவே, உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்பதையும், உங்களால் பல வருடங்களுக்கு அதை செய்ய முடியும் என்று நீங்கள் நம்பினால், அதற்கான வழியை கண்டுபிடித்து அதில் வெற்றி பெருங்கள்" என்று கூறி அவரது இந்தப் பயணத்தில் அவரது நண்பர்கள் முக்கிய பங்களிப்பு அளித்து அவரை சரியான முடிவை எடுக்க வைத்திருக்கின்றனர் என்றும் கூறினார்.
சமூக வலைத்தளங்களின் உதவி:
தொழில் முனைவர்களுக்கு சமூக வலைத்தளங்கள் பற்றி கற்றுக்கொள்வது அவசியம் என நம்புகிறார். சமூக வலைதளங்களை கையாள்வது ஒரு திறமை. மாறிவரும் டிஜிட்டல் உலகில் சமூக வலைதளத்தை ஒழுங்காக பயன்படுத்த கற்றுக் கொண்டால், அது பல நன்மைகளை அளிக்கும் என்றும் கூறுகிறார்.
எதிர்கால திட்டங்கள்:
மனிஷா அவரது சமூக வலைத்தளத்தின் வளர்ச்சியை சில சமூக வலைத்தள நிபுணர்களுடன் ஆலோசனை செய்து அதனை வளர்க்கவும் முடிவு செய்துள்ளார். அது மட்டும் இன்றி பல ஆப்லைன் இவென்டுகள் மூலம் அவரின் பொருட்களை மக்களுக்கு காண்பித்து வருகிறார். அவரைப் போல சிறு தொழில் வைத்திருப்பவர்களிடமும் பல விஷயங்களை அவர் கற்றுக் கொள்கிறார். இந்த மாதிரி சிறு தொழில் வைத்திருப்பவர்கள் அவர்களைப் போல மற்ற தொழில் முனைவர்களுக்கு உதவ எப்பொழுதும் தயாராக இருப்பார்கள். "இந்த பெரிய எக்கோ சிஸ்டத்தில்(eco system) எனக்கான இடத்தை கண்டுபிடித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறுகிறார்.
பணரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதே அவரை ஒரு தொழில் முனைவராக ஊக்கவித்துள்ளது என்பது சுவாரசியமாக உள்ளது. "பணரீதியாக சுதந்திரமாக இருப்பது உங்களுக்கு பல சக்தியையும், உங்கள் முடிவுகளை நீங்களே எடுக்கும் சுதந்திரத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. எனது பெற்றோர்கள் எனது எதிர்காலம் குறித்து தற்போது நம்பிக்கையுடன் இருக்கின்றனர்" என்று கூறி விடை பெற்றுக் கொள்கிறார்.
Suggested Reading: ஊர்மிளா தனது உணவுத் தொழிலை 77 வயதில் ஆரம்பித்துள்ளார்
Suggested Reading: தாயுடன் சேர்ந்து மகள் தொடங்கிய தொழில்
Suggested Reading: 4500 முதலீட்டில் ஆரம்பித்து, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை மாத லாபம்