வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்? - Interview

எது காதல் ? கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து உனக்காக நான் கடைசி வரை இருப்பேன். உனக்காக உயிரையும் கொடுப்பேன் என்று சொல்லிக்கொண்டு , public இடங்களில் கைகளை பிடித்தபடி நகர்ந்து செல்வதா? இதுவும் ஒரு வரை காதல் தான் தவிர "இது தான் காதல்" என்று கிடையாது.

author-image
Nandhini
New Update
k town newly wed

எல்லோரும் ஒரு வித எதிர்பார்ப்புகள் வைத்து இருப்போம். இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆனால் reality அப்படியில்லை. இந்த காலத்தில் ஒரே மாறி நடிகர் பிடித்து இருந்தால் பேச ஆரம்பித்து ஒரே மாதத்தில் இருவருக்கு காதல் வருகிறது. ஒரே மாதத்தில் அப்படி என்ன இருவருக்கும் புரிதல் ஏற்பட்டிருக்கும் என்ற குழப்பம் எனக்கு வெகு நாட்களாக இருக்கிறது. 

Advertisment

இந்த குழப்பத்தை தீர்க்க ஒரு சின்ன நேர்காணல் நடத்தினோம் அதில் உங்களுக்கு வருங்கால கணவர் எப்படி வர வேண்டும் என்றும் கேட்டறிருந்தோம். அதை கட்டுரை வடிவில் மாற்றியுள்ளோம். 

வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும்? | husband expectations  

ஒருவருக்கு ஒருவர் நன்கு புரிந்துகொள்வது. கையில் காசு இருந்தாலும் இல்லையென்றாலும் நல்ல குணம் தான் தேவை. எங்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நாங்கள் குண்டோ ஒல்லியோ, கறுப்போ சிவப்போ, குட்டையோ நெட்டையோ எங்களை ஏற்றுக்கொள்ளும் படி இருக்க வேண்டும்.

கையில் காசு இல்லை என்று சொல்வதன் மூலம் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  மாதம் குறைந்தபட்சம் முப்பது முதல் நாற்பது ஆயிரம் சம்பாத்தியம் வேண்டும். அதற்கென்று நாங்கள் வெட்டியாக இருக்க போவதில்லை நாங்களும் சம்பாதிப்போம். இன்றைய காலகட்டத்தில் இருவரும் சம்பாதித்தால் தான் வந்து ஓடும்.

Advertisment

மேலும் ஒரு சிலர் அவர் எண்களின் சுந்திரத்தில் தலையிட கூடாது என்றும், எங்களுக்கு இடித்த ஆடையை  comment அடிக்க கூடாது. மேலும் மது போன்ற பழக்கங்கள் இருந்தால் அதையும் கேட்க கூடாது என்று கூறியது வியப்பாக இருந்தது.

atlee priya

ஒரு சிலர் அவரது மாத வருமானம் நிறையாக இருக்க வேண்டும், கல்யாணம் ஆனா பிறகு பெற்றோர்களிடம் இருந்தது தனியாக வர வேண்டும். நமது privacy யில் அவர்கள் தலையிட கூடாது என்று கூறியது சிறுது மனதிற்கு வருத்தம் தந்தது. ஏன் என்று வினவிய முற்போக்காக பேசுகிறோம் என்று கூறி யோசித்து பேச மாட்டீங்கிறார்கள் என்று தான் தோன்றியது. ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு சிந்திக்கும் முறை அதை நாம் தப்பு சொல்லவில்லை அதை தாண்டி அவர்கள் வளர்ந்த சூழல் இருக்கும் இடம் மற்றும் அவர்கள் முன் பார்த்த பெண்களின் தாக்கம் என பல உள்ளது.

என்னதான் முற்போக்காக அவர் மட்டும் போதும் , புரிந்து கொண்டால் போதும் என்றெல்லாம் பேசினாலும் reality யில் நாம் எதிர்பார்த்தது போல இருக்க மாட்டார்கள் , கிடைக்கவும் மாட்டார்கள் . அனைவரும் imperction தான். Mr perfect Ms .perfect  என எவரும் கிடையாது. ஒருவருக்கு ஏதோ ஒரு விதத்தில் இருவரும் adjust செய்துகொண்டு தான் இருப்பார்கள். 

Advertisment

ஆசை என்னதான் வரம் மேல் இருந்தாலும்கையில் கிடைப்பது என்னமோ கல் தான். என்ற வாக்கியத்தை மாற்றி அந்த கல்லை செதுக்க முடியும் என்று மாற்ற வேண்டும். நேர்காணலில் தெரிந்துகொண்டது என்னதான் இப்படி இருக்க வேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்று கூறினாலும், மனதளவில் அவர்களுக்கு தெரியும் எது சாத்தியம் என்று.

Suggested Reading: 

husband expectations