Three most handsome men

நந்தினி ஆகிய நான், சுமார் ஒரு பத்து வருடத்திற்கு முன் என்னை கண்டு நானே பரிதாப படுவேன். ஒரு maturity இல்லாமல், வாழ்க்கையில் எதை நோக்கி செல்வது என்று ஒரு திட்டம் இல்லாமல் இருந்த சமயத்தில் என் வாழ்வை சீராக்க வந்த மூன்று handsome men பற்றி தான் கூற போகிறேன்.

author-image
Nandhini
New Update
three men

இன்று தெளிவாகவும், தைரியமாகவும் இருத்தற்கு இந்த மூன்று பேரின் வழிகாட்டல் ஒரு பக்கம் இருந்தாலும் , அந்த வழிகாட்டல் மூலம் நானே சென்று இந்த வாழ்க்கையை வாழும் பொது கிடைத்த அனுபவம், அதனால் நேர்ந்த பிரச்சனைகள் கையாண்ட விதம் ஒரு பக்கம்.

Advertisment

The most handsome men

The Most handsome person no:1

abhiyum naanum

அப்பா. எல்லோருக்கும் இவர் ஹீரோ என்றால் பெண்களுக்கு இவர் தான் முதல் காதலன் கூட. இவரை போல் பக்குவமாகவும் நிதானமாகவும் ஒரு விஷயத்தை கையாள வேண்டும் என்றால் அதற்கு ஒரு தனியாக course செய்திருக்க வேண்டும் போல. நான் என் தாயாரை ஒரு விபத்தில் இழந்தேன். அப்போது எனக்கு வயது பன்னிரெண்டு இருக்கும். அவருக்கு தன் மனைவியை இழந்த சோகம் இருந்தாலும் என்னை எப்படி வளர்ப்பது என்ற கவலை தான் இருந்துஇருக்கும் என்று நான் நம்புகிறேன். அவரு மட்டும் தான் அந்த நேரத்தில் சம்பாதித்தார். வேலையை பார்த்துக்கொண்டு எங்களையும் பார்த்துக்கொண்டு, தனது நாற்பது வயதிலும், எங்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டும்  உழைத்துக்கொண்டும்  இருந்தார். மனைவி இருக்கிறார் நாம் முடிந்த அளவிற்கு ஓடி வீட்டுக்காக ஓடுவோம் என்று இருந்தார், மனைவியின் திடீர் மரணம் அவரையும் ஆட்டிவைத்தது. என்னை எப்படி வளர்பது , எனக்கு என்ன தேவை, வயதிற்கு கூட வர வில்லை வாந்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். வேலைக்கு செல்வார் பின் வீட்டிற்கு வந்த சிறு நேரம் எங்களுடன் இருப்பார் பின் சாப்பிட்டு தூங்கி விடுவார். Manpower அதிகமாக இருக்கும் வேலை, அவருக்கு ஒய்வு மட்டும் தான் தேவை. எங்களை நன்கு  படிக்கச் வைத்தார். பின்பு மாரடைப்பு காரணமாக அவர் வேலையை விட்டு வீட்டில் இருக்கிறார். இன்று நான் இந்த துறையில் சம்பாதித்தாலும் நல்ல நிலையில் இருந்தாலும், என்னுடைய works யை பிறரிடம் காட்டி மகிழ்வது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த துறைக்கு நான் வந்தது அவருக்கு இஷ்டமில்லை. அதற்கு காரணம் அவரு கிடையாது அவர் வளர்ந்த சூழல். இவர் தான் நான் சந்தித்தThe Most handsome person no:1

The Most handsome person no:2

namba veetu pillai

நான் மேலே "எங்களுடன்" "எங்களையும் " என்ற வார்த்தைகள் பயன்படுத்திருப்பேன். அது என்னையும் என் "அண்ணனையும்" தான் குறிப்பிட்டுள்ளேன். மேலே தந்தை வெளியே சென்று எப்படி எங்களை கரைசேர்ப்பது என்று ஓடி கொண்டிருந்த நேரத்தில், எனக்கு தாய் இடத்தில் இருந்து ஆதரவும், அரவணைப்பும் அதே சமயத்தில் எனக்கு Proper guidance உடன் என்னை வளர்த்து தானும் வளர்ந்தான். எனக்கு அவனுக்கும் கிட்டத்தட்ட ஒன்பது வயது வித்தியாசம் இருக்கிறது. அதனால் அவுனுக்கு நிறைய maturity இருக்கு. நான் ஏதாவது தவறு செய்தால் என் முன் திட்டி, நான் இல்லாத நேரத்தில் எனக்காக support செய்து அழகான வழிநடத்தினார். கல்யாணம் ஆகி குழந்தை பெற்றாலும் நான் இன்னும் அவனுக்கு முதல் குழந்தை.என் அண்ணண் தான்  நான் சந்தித்தThe Most handsome person no: 2

The Most handsome person no: 3

nayan and vikki

எனக்கு தெரிந்த அழகான ஆண்கள் வரிசையில் கடைசி என்று சொல்ல முடியாது தற்சமயம் கடைசி நபர் என் இணையவர். வீட்டில் எப்படி இருக்க வேண்டும், பெரியவரிடம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்த அப்பா அண்ணா, வெளி உலகத்தை பற்றி சொல்லிக்கொடுக்கவில்லை. என் இணையவர் சொல்லிக்கொடுத்தார். உனக்கு ஏதும் பிரச்சனை என்றால் அதை எப்படி அணுக வேண்டும் என்பதையும், வெளி உலகம் இப்படி தான் இருக்கும் என்று நீ மனதில் இருக்கும் பிம்பத்தை உடைத்து என்னுடைய comfort zone யிலிருந்து  என்னை அழைத்து சென்றது இவருதான். அப்போது தான் வாழ்க்கையில் எவ்வளவு பார்க்காமல் இருக்கிறோம் என்று நான் அறிந்தேன். எனக்கு மன அழுத்தமாக இருந்தால் மனம் விட்டு பேசி அதற்கு ஒரு தீர்வும் கொடுப்பார். அண்ணன் இருந்தாலும் அவர்கள் emotional ஆக அதை அணுகுவர். இவர் அதை Practically அணுகுவர். எனக்கு ஒரு உருவம் கொடுத்த என் இணையவர் தான் நான் சந்தித்தThe Most handsome person no: 3.

Advertisment

எப்போதும் சொல்வதுண்டு வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறார் என்று ஆனால் எனது வெற்றிக்கு பின்னாடி ஆண்கள் மட்டுமே இருக்கிறார்கள். அழகு மட்டும் தான் Handsome யை குறிக்க வேண்டுமா என்ன ? குணம் இருந்தால் அவர்கள் மிகவும் அழகான நபராக மாறுவர் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

Suggested Reading:

கோவத்தை control செய்யும் வழிகள்!!

Suggested Reading:

 Suggested Reading:

The most handsome men