Advertisment

Mondayவும் Sunday ஆகும் இதை செய்தால்!!

வாரத்தில் ஆறு நாள் வேலை பார்த்து விட்டு எப்போடா இந்த sunday வரும் என்று நினைப்பதுண்டு. அன்று நாம் நிதானமாக எழலாம், அனைத்து வேலையையும் பொறுமையாக செய்யலாம் என்று எண்ணி அன்று தினமும் போல் காலை ஐந்து மணிக்கே எழ வேண்டாம்.

author-image
Nandhini
New Update
trisha working

Image is used for representation purposes only.

அன்று ஒரு நாள் மட்டும் எட்டு மணி அல்லது பத்து மணிக்கு தான் விடியலே. ஆனால்  அன்றும் நம்மில் பலருக்கு எப்பொழுதும் போல காலை ஐந்து மணிக்கே முழிப்பு வந்துவிடும். உண்மைதானே? முன்னர் கூறிய படி இந்த sunday எப்போடா வரும் என்று ஒரு பக்கம் நினைத்தாலும், sundayவை முழுதாக நாம் enjoy பண்ணுவோமா? கிடையாது. sunday வந்தால் அய்யய்யோ அடுத்த நாள் Monday திரும்பவும் முதலில் இருந்து என்று feel செய்து உக்கார்த்து இருப்போம். இது Loophole மாதிரி.

Advertisment

எப்படி sunday ஆனால் காலையில் சீக்கிரம் எழுறோமோ அதே மாதிரி monday ஆனால் ரொம்ப தாமதமாக எழுவோம். இதை மறுப்பு சொல்லவே முடியாது. சரி எழுவது மட்டும் தான் late ஆ கிடையாது office க்கு late , சமைக்க late, school க்கு lateனு அன்று நாளே ஒரு மணி நேரம் தாமதமாக தான் செல்லும். இதை மாற்ற முடியாது. நமது உடல் அந்த அளவிற்கு tired ஆகி இருக்கிறது.

இப்படி tension இல்லாமல் ஒரு monday அச்சும் நான் கிளம்ப வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஒரு சில விஷயங்கள் செய்தால் இந்த ஆசை நடக்கும் என்று ஆய்வு கூறுகிறது. sunday ஒரு நாள் தான் free அன்றும் வேலை பார்க்க வேண்டுமா என்று நீங்கள் எண்ணுவது புரிகிறது. ஆனால் இதை நீங்கள் sunday evening க்கு மேல் செய்ய ஆரம்பிக்கெல்லாம்.

How to make my monday feel better 

Advertisment

முன்னாடி நாளே அதாவது sundayவே அடுத்த நாளைக்கு என்ன என்ன வேலைகள் இருக்கிறது என குறித்துவைத்துக்கொள்ளுங்கள். இதன் மூலம் உங்கள் மனதில் இத்தனை வேலை mondayவில் இருக்கிறது என்று ஞாபகம் வைத்துக்கொள்ளும். அதை தாண்டி, எந்த வேலைக்கு எத்தனை நேரம் தேவைபடுகிறது என்பதையும் கணக்கிட உதவும். நீங்களும் அதற்கேற்ப உங்களது வேலையை align பண்ணிக்கொள்ளலாம்.

scheduling

நேரத்தையும் உங்களது energy யையும் இழுக்கும் வேலை எதுவென்று உங்களுக்கு தெரியும். அதை நீங்கள் முதலில் வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். அது மீதம் இருக்கும் நாளையை கெடுக்கும். அதற்கு பதிலாக குட்டி மற்றும் easy ஆக முடியும் வேலையை முதலில் வைத்தால் "அடடே வேலையெல்லாம் முடித்து விட்டோமே" என்று உங்களை நீங்களே அறியாமல் ஊக்க படுத்திகொண்டு அடுத்த வேலையை நோக்கி செல்வீர்கள்.

Advertisment

அலுவகத்திற்கு செல்லம் பெண்கள் மற்றும் home makers  இருவருக்கும் இந்த ஒரு விஷயம் என்பது Mondayவை காட்டிலும் பயம் அதிகம். "இன்று என்ன சமைக்கெல்லாம்"என்பது, இதற்கு தீர்வே கிடையாது. முன்னாடி நாளே உங்கள் குடும்பத்தாரிடம் கேட்டு ஆலோசனை வகுத்து அடுத்த நாள் என்ன வேண்டுமோ அதற்கான basic preparation செய்வது நம் வேலையை சுலபம் ஆக்குகிறது. காய்கறிகளை வெட்டி வைப்பது, தேவையான மசாலாவை அரைத்து வைத்துக்கொள்வது போன்றதை முன்னாடி நாளே செய்து விட்டால், அடுத்த நாள் நீங்கள் தாமதமாக எழுந்தாலும், சட்டென்று சமையல் முடியும்.

sunday முழுக்க உங்களின் comfortable ஆடையை அணிந்து இங்கும் அங்கும் சுட்டுவீர்கள். ஆனால் monday காலை அலுவலகத்திற்கு எதை அணிவது என்ற யோசனை வரும். குளித்து முடிந்து சுமார் ஒரு 15 நிமிடம் இந்த process போகும். இந்த ஆடை வெள்ளிக்கிழமை தானே போட்டோம். இந்த சட்டை சூப்பர் ஆனால் இதற்கேற்ற pant துவைக்க கிடக்கு என்று நாமே பேசிக்கொண்டே இருப்போம். இந்த 15 நிமிட proess யை தவிர்க்க முன்னாடி நாளே தேவையான ஆடையை எடுத்து iron  செய்து வைத்தால், மறுநாள் காலையில் குளித்து சட்டென்று iron செய்த ஆடையை அணிந்து officeக்கு செல்லலாம்.

நமது நேரம் monday காலையில் நாம் கிளம்பும் நேரத்தில் தான் Id card  காணாமல் போகும், தேவையான file கிடைக்காது. அதை தேட ஒரு 30 நிமிடம் காணாமல் போகும். இதை தவிர்க்க முன்னாடி நாள் இரவே அடுத்த நாளுக்கு தேவையான பொருட்களை நமது பையில் வைத்துகொள்வதில் இருக்கும் நன்மை tension free monday.

Advertisment

favourite food

ஆய்வின் படி இந்த ஒரு குட்டி tip நிறைய பேருக்கு work ஆகியிருக்கு. அது என்ன வென்றால், monday உங்களுக்கு பிடித்த உணவை சமைத்தால் கண்டிப்பாக நம் ஆழ் மனதில் அதை யோசித்துக்கொண்டே இருக்கும். Monday காலையில் சீக்கிரமாக எழுவீர்கள். ஒரு மனிதரை சாப்பாட்டை தாண்டி எதுவும் கட்டியிழுக்காது. இது இல்லாமல் உங்களுக்கு பிடித்த நபரையோ அல்லது பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்று plan செய்தால் அதற்காவே monday நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள். அன்று நாளும் happyயாகவும் நிதானமாகவும் செல்லும்.

இதெல்லாம் basic ideas , இதெல்லாம் பின்பற்றினால் உங்களது monday வும் sunday போல் தோன்றும். 

Advertisment

 

Suggested Reading: 

Advertisment
Advertisment
how to make my monday feel better
Advertisment