Advertisment

Belly fat - குறைக்க உதவும் Tips!

ஒரே வாரத்தில் belly fat யை குறைப்பது எப்படி? இதை நான் தேடி இருக்கிறேன், நீங்களும் தேடி இருக்க வாய்ப்பிருக்கு. ஒப்புக்கொள்ளுங்கள். என்னதான் shapewear slim wear அணிந்தாலும் இந்த தொப்பை என்பது வெளியே தெரிந்து கொண்டுதான் இருக்கும். அப்படித்தானா?

author-image
Nandhini
New Update
belly fat

Image is used for representation purposes only.

எது செய்தாலும் குறையாதா ? இல்லை. குறையும் ஆனால் உடனே அல்ல. நிறையே பெரு அவர்கள் பின் பற்றிய நிறைய Diet, exercise உங்களிடம் கூறி நீங்களும் அதை செய்யுங்கள் என்று வறுபுறுத்துவர். அதையும் செய்யலாம் தவிறில்லை. ஆனால் அடிப்படையாக ஒரு சில விஷயங்கள் இருக்கிறது. அது நாம் நம் மனம் வைத்தால் தான் முடியும்.  

Advertisment

இந்த உலகம் ஒரு stereotypic mindset யில் இருக்கிறது அதாவது ஒல்லியாக இருப்பவர்களுக்கு தொப்பை இல்லை என்று. யாரு சொன்னார்கள்? தொப்பை என்பது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். என்னுடைய சக தோழி ஒருத்தி மிகவும் ஒல்லியாக இருப்பார், அவருக்கு தொப்பை இருக்கிறது. என் இன்னொரு தோழி கொஞ்சம் பருமனாக இருப்பார் ஆனால் அவருக்கு தொப்பை பெரிதாக இருக்காது. அதனால் இந்த stereotypic thoughts யை விடுங்கள்.

இரண்டாவது தொப்பை அதுவாக வராது, நாம் செய்யும் ஏதோ ஒரு செயலால் தான் வருகிறது. நீங்கள் அதிக எடை அதிகரித்தால், உங்கள் உடல் உங்கள் கொழுப்பை அசாதாரண இடங்களில் சேமிக்கத் தொடங்குகிறது. உடல் பருமன் அதிகரித்து வருவதால், கொழுப்பைச் சேமிப்பதற்கான வழக்கமான பகுதிகள் நிரம்பியிருப்பதால், உறுப்புகளிலும் இதயத்தைச் சுற்றியும் கொழுப்பு படிந்துவிடும்.

samantha exercise

Advertisment

இவ்வளவு ஆபத்து இருக்கும் இந்த தொப்பை கொழுப்பை எவ்வாறு நீக்குவது? how to reduce belly fat

எப்படி திசைகள் நான்கோ அதே போல் இந்த நான்கு விஷயம் அடிப்படையாக செய்தாலே தொப்பை கொழுப்பு எளிதில் குறையும்.

முதலில் உடற்பயிற்சி. அட என்னப்பா எல்லாவற்றுக்கும் இதே கூறுகிறாய் இதை விட உனக்கு வேற எதுவும் தெரியாத? என்று கடுப்பாகாதீர்கள். உடற்பயிற்சி தான் முக்கியமான திறவுகோல். வாரத்தில் குறைந்தது 5 நாட்கள் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி செய்யுங்கள். உங்கள் இதயத் துடிப்பு வழக்கத்தை விட வேகமாக அதிகரித்து, வியர்வை சிந்தி, கடினமாக சுவாசிக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இருக்கும் வரை, நடைபயிற்சி கணக்கிடப்படுகிறது. அதுவே jogging சென்றால் இதில் பாதி அளவில் உங்களுக்கு பயன் அளிக்கும். உடற்பயிற்சி செய்ய gym க்கு தன செல்லவேண்டும் என்பதில்லை.

Advertisment

உடற்பயிற்சி ஒரு பக்கம் என்றால், diet இன்னொரு பக்கம். நீங்கள் எந்த diet எடுத்தாலும் உடல் எடையை குறைக்கும்போது, ​​பொதுவாக தொப்பை கொழுப்பு முதலில் செல்கிறது. போதுமான நார்ச்சத்து பெறுவது உதவும். உடற்பயிரிச்சி மற்றும் diet இரண்டையும் தீவிரமாக பின்பற்றுவோருக்கு அதிக பலன் கிடைத்து இருக்கிறது.

stress  இது ரொம்ப ஆபத்ததானது. நமக்கு stress வந்துவிட்டால் நம்மை நிதானம் படுத்துவது இந்த சாப்பாடுதான். அதுவும் அந்த நேரத்தில் நமக்கு பிடித்த உணவை தான் சாப்பிடுவோம். அது பதப்படுத்தப்பட்டதக தன இருக்கும். அது நம் உடலுக்கு தீங்கு மற்றும் உடல் எடை அதிகரிக்கும் என ஒரு பெரிய cycle உடையது . அதனால் நமக்கு ஏதும் கவலை இருந்தால் உடனே அதை சரி செய்ய ஏதாவது காமெடி scenes அல்லது நண்பர்களிடம் பேசுவது போன்ற விஷயங்கள் வைத்து உங்கள மனதை மாற்றுங்கள். அதிக stress எடுத்துக்கொள்ள வேண்டாம். 

samandha crying

Advertisment

இதற்கெல்லாம் best solution தூக்கம். நல்ல நிம்மதியான தூக்கம் சுமார் ஆறு முதல் எட்டு மணி நேரம் தூக்கம் இருந்தால் மன அழுத்தம் குறையும் நம் மூளை வேலை செய்யும் , mind நிதான நிலையில் இருப்பதினால் தேவையற்ற முடிவுகள் எடுக்க மாட்டீர்கள்.

அனைவருக்கும் வயிற்றில் கொழுப்பு உள்ளது, தட்டையான வயிறு உள்ளவர்கள் கூட. அது சாதாரணம். ஆனால் அதிக தொப்பை கொழுப்பு மற்ற கொழுப்பு இல்லாத வகையில் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். உங்கள் கொழுப்பில் சில உங்கள் தோலின் கீழ் உள்ளது. மற்ற கொழுப்பு உங்கள் இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளைச் சுற்றி ஆழமாக உள்ளது. அதனால் மேலே உள்ள அடிப்படை விஷயங்களை பின்பற்றுங்கள்.

 

Advertisment

Suggested Reading: 

Advertisment

ஓஓ ! இது தான் "Sis code"ஆ

Suggested Reading: 

Advertisment

 

how to reduce belly fat
Advertisment