கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்த நபரோ ஏன், நீங்களாகவும் இருக்கெல்லாம். தொடங்கிய காரியத்தை அதே முறையில் முடிப்பதற்கு ஒரு சில tricks இருக்கிறது. இப்போதிருக்கும் கால கட்டத்தில், பிள்ளைகளுக்கு குறிப்பாக எடுத்த காரியத்தை முடிப்பது என்பது மிகவும் அரிதாக இருக்கிறது. முடிவதற்குள் மற்றொன்றை தொடங்கி விடுவர் அதனால் முதலில் தொடங்கிய வேலை அடிவாங்குகிறது. பெரியவர்கள் அல்லது அனுபவசாலிகள் இதற்கு வைக்கும் பெயர் "ஆரவ் கோலார்". உண்மைதான் ஒரு வேலை செய்து கொண்டே இருக்கும் பொது அந்த ஆர்வம் குறைவதற்கு காரணம் ஒன்று அதன் நமக்கு பிடிக்க வில்லை என்றும் மேலும் இன்னொரு வேலை மேல் நமக்கு ஆர்வம் கூடுவதினால் என்பதாலும்.
அப்படி இன்னொரு வேலையில் ஆர்வம் கூடினாலும் ஆரம்பித்த வேலையை எப்படி முடிப்பது என்று ஒரு சில குறிப்புகளை கொண்டு வந்துள்ளோம்.
How to finish things that we started
Decide What you wanted
நீங்கள் எதை தொடங்க வேண்டும் என்று முடிவு எடுத்து பின் அதை ஆரம்பிக்க வேண்டும். உங்கள் மனதிற்கு அனைத்தையும் பின்பற்ற வேண்டும், அனைத்தையும் தொடங்க வேண்டும் என்று தான் நினைக்கும்.ஆனால் உங்கள் மூளைக்கு தெரியும் எது நமக்கு தேவை தேவையில்லை என்று. அதனால் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறது என்பதினால் தொடங்க வேண்டாம். அதை நன்கு ஆராய்ந்து நமக்கு இது தேவையா? இதனால் நம் வாழ்க்கையில் ஏதேனும் மாற்றம் உண்டாக்குகிறதா? என்று பார்க்க வேண்டும். இந்த முறையிலும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒரு வாரம் அந்த விஷயத்தை மட்டுமே நீங்கள் சிந்தியுங்கள். ஒரு வாரத்தில் உங்களுக்கு அதே ஆர்வம் இருந்தால் அதை தொடங்குங்கள், இல்லையென்றால் உங்களுக்கே பதில் தெரியும்.
Resources
அந்த வேலையை தொடங்க உங்களுக்கு என்ன என்ன தேவை என்று மதிப்பிடுங்கள். உதாரணம்: இந்த கட்டுரை எழுத ஆரம்பிப்பதற்கு முன் என்ன தேவை என்பதை எடுத்துக்கொண்டேன். இதில் என்ன சொல்ல வேண்டும்? இதில் என்னென்ன தலைப்பில் எழுத வேண்டும் போன்று. இதனால் எனக்கு இந்த கட்டுரை விரிவாக எழுத உதவுகிறது. மேலும் இதற்கு ஏதும் ஆட்கள் தேவையா? எத்தனை நேரத்தில் இந்த கட்டுரை எழுத தேவைப்படுகிறது. இந்த மாதிரி தேவைகளை நாம் எழுதிக்கொள்ளவேண்டும்.
Time and Budget
நாம் தேவைகளை கண்ணகிடும் பொது அனைவரும் சொதப்பும் இடம் இது தான். இதற்கெல்லாம் எவ்வளவு நேரம் ஆக போகிறது என்று நாம் யோசிப்போம். அது மிக பெரிய தப்பு மற்றும் ஆபத்தானதும் கூட. நீங்கள் உங்கள் ideas யை வைத்த பிறகு, அதற்கு உங்களால் எவ்வளவு நேரம் செலவிட முடியும் என்பதையும் சேர்த்து கணக்கிடுங்கள். வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் அதிகாமாக வைப்பதும் நல்லது. நல்ல திட்டமிடல் உங்கள் ஆற்றலையும் எதிர்பார்ப்பையும் திட்டமிட உதவுகிறது. எனவே நீங்கள் விரும்பிய முடிவை அடைய உங்களை நீங்களே வேகப்படுத்தலாம். இது அதிக வெற்றிக்கு வழிவகுக்கும்.
NO to being Perfect!!
ஒரு வேலையை correct ஆக முடிக்க வேண்டும் என்பது தான் அனைவரது policy மற்றும் need. அதனால் நாம் பார்த்து பார்த்து ஒரு ஒரு கட்டத்தையும் கடப்போம். இதில் கண்டிப்பாக ஒரு கால அவகாசம் தேவை படுகிறது. அந்த நேரத்தில் நாம் மெதுவாக அந்த ஆர்வத்தை இழக்கின்றோம். ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்தால் கண்டிப்பாக bore அடித்துவிடும். அதனால் Perfect ஆக முடிக்க வேண்டும் என்பதை ஒதுக்கி வைத்து, முடிக்க வேண்டும் என்பதை மட்டுமே சிந்தியுங்கள். இது நிறைய பேருக்கு பிடிக்காது ஆனால் நீங்கள் ஆரம்பித்த வேலையை முடிப்பதற்கு "Perfect" என்ற வார்த்தையை தள்ளிவைக்க வேண்டும். பாதியில் நிறுத்துவதற்கும் , ஏதோ ஒரு மாறி முடித்துவிட்டோம் என்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
Finish It off
அதை முழுதாக முடிக்க பாருங்கள். உங்களிடம் "பாதியில் விட்டு போகவேண்டும்" என்ற எண்ணமே இருக்க கூடாது. இன்னொரு வேலை மீது உங்களுக்கு ஆர்வம் வந்தால் , முதலில் எடுத்த வேலையா இல்லை இதுவா என்ற எண்ணம் வேண்டும். அதில் உங்களுக்கு பதில் கிடைத்து விடும். இந்த மாறுதலுக்கான காரணம், உங்கள் Goal லை அவ்வப்போது நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அதை நீங்கள் அடிக்கடி ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் அப்போது தான் அதை நோக்கி ஓடி கொண்டிருப்பீர்கள். இதை எப்படி செய்யலாம் என்றால் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இடத்தில் அதை வைக்க வேண்டும். உங்கள் mobile கூட சிறப்பு தான். பார்த்துக் கொண்டே இருந்தால் நம் மனதில் அது ஓடிக்கொண்டே இருக்கும்.
Celebration
celebration க்கு காரணமே தேவைகிடையாது. அதனால் உங்களுக்கு எப்போதாவது உங்கள் வேலை மீது ஆர்வம் குறைந்தால் இது வரை நீங்கள் செய்த வேலையை கணிக்கிட்டு "அடடே இவ்வளவு செய்துஇருக்கிறோமா? ஒரு Cake சாப்பிடுவோம்" என்று உங்களை நீங்களே ஊக்க படுத்தினால் அது உற்சாகமாக இருக்கும். யாரையும் நம்பி இருக்காமல், உங்களை நீங்களே ஊக்க படுத்தினால் நன்றாக இருக்கும். அது முடிந்த பிறகு நீங்கள் அந்த வேலையை automatically தொடர ஆரம்பிப்பீர்கள்.
நீங்கள் ஆரம்பித்த வேலையை முடிக்க இதெல்லாம் ஒரு சில குறிப்புக்கள். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் உங்களால் அதை தொடர முடிவில்லை என்றால் உங்களை நீங்கள் வருத்திக்காதீர்கள். அது உங்களையும், உங்கள் உடல் ஆற்றலையும் பாதிக்கும்.
Suggested Reading:
Instant Happiness கிடைக்க இதை செய்து பாருங்கள்!!
Suggested Reading:
வேலையை தள்ளிப்போடும் பழக்கம் இருக்கிறதா? Please Read this
Suggested Reading:
Fridgeயை Maintain செய்ய Simple Tips!!
Suggested Reading:
கவனச்சிதறல் இருக்கிறதா உங்களுக்கு? அப்போ இதை படியுங்கள்!