சிறு வயதில் அந்த Fridgeயை திறந்து அந்த light எப்படி எரிகிறது என்று பார்ப்போம். சில நேரங்களில் நாம் ஏமாறுவதும் உண்டு. அம்மாக்கள் ஐஸ் கிரீம் டப்பாவில் கொத்தமல்லியை வைப்பது என்பது அனைத்து நடுத்தர வீட்டில் நிகழும் ஒன்று.
இன்னும் ஒரு சிலர் வீடுகளில் fridgeயை திறந்தால் ஒரு வித வாடை அடிக்கும். plastic coverயில் அழுகிய கருவேப்பில்லை, அழுகிய உருளைக் கிழங்கு போன்றவை. அதனால் அந்த வீட்டிற்கு சென்றாலும் எதுவும் சாப்பிட மாட்டீர்கள்.
இது என்னடா பெரிய விஷயமா? என்று கேட்காதீர்கள். வீட்டில் சமைக்கும் இடம் மற்றும் சாப்பிடும் இடம் இரண்டையும் எந்த அளவிற்கு சுத்தமாக வைப்பது முக்கியமோ அந்த அளவிற்கு சமைக்கும் பொருட்கள் வைக்கும் இடமும் சுத்தமாக இருப்பது அவசியம்.
சாம்பார் மீதமாக இருக்கிறதா? எடுத்து fridge யில் வை,சூடு செய்து சாப்பிடேலாம். தோசை மாவு fridgeயில் இருக்கிறது எடுத்து சுட்டு சாப்பிடு. எதற்கெடுத்தாலும் fridge தான். நானும் நீங்களும் தான் உள்ளே இல்லை. இடம் இருந்தால் என் அம்மா அதையும் செய்திருப்பார் என்று நாம் கேலிசெய்வதுண்டு. ஆனால் அதை எப்படி பராமரிப்பது என்று சொல்லிக்கொடுக்க முன் வரவில்லை.
உங்கள் fridge யை கீழ்கொண்ட குறிப்புகளை வைத்து பராமரித்தால் நன்றாக இருக்கும் என்று இதை பின்பற்றியவர்கள் கூறியுள்ளனர்.
fridge யை பராமரிப்பது எப்படி? Tips to maintain Fridge
ஒரு ஒரு fridgeயின் அமைப்பு வேறு பட்டாலும் பொதுவாக அனைத்து Fridgeயில் செய்யக்கூடிய பராமரிப்பு பற்றி தான் இந்த கட்டுரை.
உங்களது fridge யின் வெப்ப நிலையை சரியாக வைக்கவும். உங்களது fridgeயின் குளிர் நிலை 40கும் கீழே இருக்க வேண்டும். அப்பொழுதான் நாம் மீதம் வைத்திருக்கும் சாப்பாட்டில் வளரும் நச்சு தரும் bacteria வை மெதுவாக வளர செய்து மேலும் அந்த சாப்பாட்டை சாப்பிட பாதுகாப்பாக வைக்கிறது. இந்த குளிர் நிலை உங்களது ஐஸ்கிரீம்யையும் பாதிக்காமல் அதே நேரத்தில் உங்கள் fridgeயின் மின்னோட்டத்தையும் பாதுக்காகிறது.
மாதம் ஒரு முறை fridge யில் இருக்கும் அந்த சீல் (மூட உதவும் magnet போன்றது) அதை சுத்தமாக வைக்க வேணும். பின் ஒவ்வொரு முறை மூடியவுடன், சரியாக மூடியுள்ளதா என்று சரிபார்க்கவும். ஏனென்றால் சில நேரங்களில் அது சரியாக மூடாமல் திறந்து இருக்கும், அதன் வழியே வெளி காற்று உள்ளே சென்று சாப்பாடு, பூ, காய் என அனைத்தையும் நாசமாகிவிடும். அதனால் இதை சரியாக பராமரிப்பது நல்லது.
கதவை திறந்த உடன் கண்ணுக்கு தெரியும் இடம் என்பது சூடான காற்றை உடனே உட்கொள்ளும் இடம் அதனால் அந்த இடத்தில் முட்டை, பால் போன்று எளிதில் கெட்டு போகும் விஷயங்களை வைக்கக்கூடாது. அதுக்கு பதிலாக மேல் sectionனில் வைப்பது நல்லது. அதே போல் அழுகிய பொருட்களை உடனே நகற்றுவது நல்லது. ஒரு பழம் தானே அழுகி இருக்கு அல்லது அழுக துடங்கியுள்ளது என்று எண்ணாதீர்கள். அழுகிய ஒன்று அப்படியே மீதம் இருக்கும் காய்கறிகளையும் அழுக வைக்கும். அதனால் உடனே அகற்றுவது நல்லது. மேலும் காய்கறிகளை ஓட்டையுள்ள பையில் வைத்தால் , காற்றுச்சுற்று இருக்கும். அதனால் எளிதில் அழுகும் நிலைக்கு செல்லாது.
fridge யில் எதை வைக்க வேண்டுமோ அதை மட்டும் வையுங்கள். தேவையற்ற பொருளை உள்ளே வைப்பது தவிர்த்துக்கொள்ளுங்கள். மேலும் fridge யை சுத்தம் செய்ய bakingsoda lime மற்றும் தண்ணீர் போன்ற மிதமான பொருளை வைத்து சுத்தம் செய்யுங்கள். மாதம் ஒரு முறை செய்தால் நல்லது.
மாமிசம் ஏதும் வாங்கினால் அதை அடி தட்டில் வைத்து சேகரிக்கவும் ஏனென்றால் ஏதோ ஒரு சிறிய சேதம் அந்த coverயில் இருந்தால், அந்த மாமிசம் இருந்து வெளி வரும் தண்ணீர் மீதம் இருக்கும் காய்கறிகள், பழங்கள் மேல் விழுந்து அழுக தொடங்கும். அதனால் அடி தட்டில் வைப்பது சிறப்பு.
ஏற்கனவே நமது fridge யில் நிறைய இடம் இருக்கிறது. தேவையற்ற organisersகளை வாங்கி இருக்கும் இடத்தை குறைக்க வேண்டாம். முக்கியமாக சாப்பாட்டை வீண் அடிக்காதீர்கள். மீதம் இருந்தால் தன fridge யில் வைக்க வேண்டும் என்று தோன்றும். மீதம் இல்லை என்றால் fridgeயும் சுத்தமாக இருக்கும்.
மேலே குறிப்பிட்டுள்ளதை நினைவில் வைத்து பின்பற்றினால் உங்களுக்கே மிகவும் பிடித்து விடும்.
Suggested Reading:
கவனச்சிதறல் இருக்கிறதா உங்களுக்கு? அப்போ இதை படியுங்கள்!
Suggested Reading:
BPயை control செய்ய Simple Tips!!
Suggested Reading:
Morning சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்!!
Suggested Reading:
உங்கள் வீட்டில் இந்த First Aid Kit அவசியம்!!!!