நம் பெற்றோரர்கள் எப்போதும் ஏதோ ஒரு வேலை பார்த்துக்கொண்டிருப்பார்கள் கேட்டால் "அந்த நாளின் வேலையை அன்றே முடிக்க வேண்டும்" என்று கூறுவார். இப்படி இருக்கும் பெற்றோர்களுக்கு பிள்ளைகளாய் நாம் எந்த வேலை எடுத்தாலும், அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிபோட்டுக்கொண்டே இருப்போம்.
இந்த தள்ளிப்போடும் பழக்கம் அதாவது "Procrastination" நல்லதா? கேட்டதா? என்றால் ஒரு கும்பல் "இது எப்படி நல்லதா இருக்கும்? சோம்பேறி தனத்தின் உச்சம் இது" என்றும், இன்னொரு பக்கம் "தள்ளிபோடுவதினால் அன்று அந்த நிமிடம் நிம்மதியாக தூங்கவோ அல்லது படம் பார்க்கவோ முடிகிறது அல்லவா" என்று இரண்டு பக்கம் நல்லது கெட்டது என வந்து கொண்டே இருந்தது. உண்மையில் இந்த தள்ளிப்போடும் பழக்கமினால் என்ன நடக்கும்? அதை எப்படி தவிர்க்கெல்லாம் என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.
How to overcome Procrastination?
இந்த தள்ளிப்போடும் பழக்கம் என்பது பெரிது இல்லை. இதன் மூலம் நமக்கு என்ன நடந்திட போகிறது என்று எண்ணுவதெல்லாம் வெறும் கற்பனை. நமக்கே தெரியாமல் நம்மிடம் ஒரு சோம்பேறி தனம் உருவாகி கொண்டிருக்கிறது. முன்னர் கூறிய படி சிலர் நினைப்பதுண்டு இந்த தள்ளிபோடுவதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. உதாரணம்: உங்களுக்கு ஒரு வேலை வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும் என்பதினால் நீங்கள் திங்கள் முதல் விழாயன் வரை அதை புறக்கணித்து விழாயன் இரவு அமர்ந்து அந்த வேலையை முடிப்பீர்கள். இதில் நல்லதும் இருக்கிறது கெட்டதும் இருக்கிறது. நல்லது : கடைசி நிமிடத்தில் உங்களது Productivity அதிகமாகும். நிறைய சிந்திப்பீர்கள். கெட்டது : திங்கள் முதல் விழாயன் வரை மந்தமாக இருப்பீர்கள். எந்த வேலையும் இல்லாமல் இருப்பீர்கள். கடைசி நிமிடத்தில் உங்களுக்கு Productivity அதிகமாகும் அதே சமயத்தில் உங்களுக்கு பதட்டமாக இருக்கும். முடிக்க முடியுமா என்று தேவையில்லா தலைவலி, இரத்த அழுத்தம் எல்லாம் ஏற்படும். என்னதான் கடைசி நிமிடத்தில் உங்கள் வேலையை முடித்து கொடுத்தலாலும் அது உங்களின் முழு திறனை வெளிப்படுத்துவது போல இருக்காது.
இந்த பழக்கம் எதனால் வருகிறது என்றால் ஒன்றின் மேல் நமக்கு ஈர்ப்போ அல்லது ஆர்வமோ இல்லாமல் இருந்தால் தான் இந்த பழக்கம் வரும் என்று ஆய்வு கூறுகிறது. மேலும் ஒன்றின் மேல் இருக்கும் பயமும் இதற்கு காரணமாக இருக்கும் எனவும் கூறியுள்ளது. இந்த இரண்டும் ஒன்றுக்கு ஒன்று ஈடாக இருக்கும். இன்னும் சுலபமாக கூற வேண்டும் என்றால் கணிதமில் Probability என்று ஒன்று இருக்கும் அது போல் தான் பிடிக்கவில்லை என்றால் அங்கு பயம் இருக்காது , பயம் இருந்தால் அந்த வேலை மீது ஆர்வம் இருக்காது.
இந்த பழக்கத்தை தடுக்கவோ அல்லது மாற்றவோ முடியாத?
கண்டிப்பாக முடியும் கீழ இருக்கும் ஒரு சில விஷயங்களை பின்பற்றினால் கண்டிப்பாக நம்மை மாற்றிக்கொள்ளலாம்.
நீங்கள் வேலை செய்ய விரும்பினாலும், நீங்கள் தள்ளிப்போடும் ஒன்றைக் கண்டறியவும். எந்த ஒரு விஷயத்திற்காக நாம் அதை தள்ளி போடுகின்றோம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு சில பதிகள் கிடைக்கும். அதை நீங்கள் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
பின் அதில் இந்த சோம்பேறித்தனம் lazy அதை விட்டுவிட்டு மீதம் இருக்கும் பதில்களை பார்க்க வேண்டும். அதில் இந்த "எனக்கு எப்படி என்று தெரிய வில்லை" "ஆர்வம் பெரிதாக இல்லை "என்ற பதில்கள் தான் முதன்மை காரணம்.
இந்த காரணங்களுக்கு மீண்டும் ஏன் என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். ஒரு நல்ல சரியான பதில் கிடைக்கும் வரை இந்த "ஏன் ?" என்ற கேள்வியை எழுப்ப வேண்டும். உங்களுக்கு இது தான் சரியான பதில் இதனால் தான் நான் செய்ய வில்லை என்று அறியும் வரை கேட்க வேண்டும்.
பதில் கிடைத்த உடன் அதை எப்படி தீர்க்கெல்லாம் என்று ஆராய வேண்டும். உதாரணம்: எனக்கு இந்த வேலையில் இருக்கும் ஆட்கள் பிடிக்கவில்லை என்றால், அதன் தீர்வு அவர்களை Ignore செய்து விட்டு உங்களது வேலையை செய்ய பாருங்கள். இது முதலில் கடினமாக தான் இருக்கும். ஆனால் கால போக்கில் இது பழகிவிடும்.
இந்த உலகத்தில் எதும் நாம் எதிர்பார்க்கும் படி இருக்காது. அனைவரும் Imperfection ஆக தான் இருப்பார்கள். பிடிக்கவில்லை என்று அதை புறக்கணிக்கவோ அல்லது தள்ளிபோடுவதோ தீர்வு கிடையாது. மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் அடிப்படை என்றாலும் அது தான் நாம் இதுவிலிருந்து மீண்டு வருவதற்கு ஒரே வழியாகும்.
Suggested Reading:
Fridgeயை Maintain செய்ய Simple Tips!!
Suggested Reading:
கவனச்சிதறல் இருக்கிறதா உங்களுக்கு? அப்போ இதை படியுங்கள்!
Suggested Reading:
BPயை control செய்ய Simple Tips!!
Suggested Reading:
Morning சீக்கிரம் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்!!