நாமும் என்னதான் மன அழுத்தம் இருந்தாலும் அடுத்த வேலையை பார்க்க சென்று விடுவோம். உண்மையில் நாம் அதை முழுதாக கடந்து விட்டோமா? இல்லை மனதில் அது இருந்துகொண்டே தான் இருக்கும்.
How to become happy instantly
அமைதியாக உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு, உங்கள் breathing யில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் Distract ஆகும் போது, உங்கள் கவனத்தை உங்கள் சுவாசத்திற்கு திரும்ப கொண்டு வாருங்கள்.நீங்கள் முடித்ததும், நீங்கள் இன்னும் பொறுமையாகவும் உணரலாம். உங்கள் நாளின் ஆற்றலை மாற்றவும், மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கும் இதுவே உங்களுக்குத் தேவை.
வெளியில் சென்று உங்கள் மனதை மாற்றுங்கள். ஆய்வின் படி நீங்கள் வெளியில் சென்று Fresh air சுவாசிக்கும் பொது உங்கள் மனம் லேசாகிறது என்று. மேலும் கண்ணனுக்கு அழகாக இருக்கும் பொருளையோ இடத்தையோ நீங்கள் பார்க்கும் பொழுது உங்கள் மனம் லேசாகுகிறது. அதனால் நீங்கள் மன அழுத்ததுடன் இருந்தால் உடனே வழியில் சென்று பூக்கள், மரங்கள், கடற்கரை போன்ற இடங்களுக்கு செல்லுங்கள்.
சிரிப்பு உங்கள் மனநிலையை லேசாக்குகிறது. இது உங்கள் இதயம் மற்றும் தசைகளைத் தூண்டுகிறது. இது உங்கள் மூளையை அதிக நல்ல ஹார்மோன்களை வெளியிடுகிறது. அதனால் சிரிக்க உதவும் புத்தங்கள் அல்லது உங்களை எப்போதும் சிரிப்பூட்டும் நபரை அழைத்து பேசுங்கள். சிரித்து கொஞ்சம் நேரம் பேசுங்கள் நீங்கள் உங்கள் கவலையை மறக்க முடியும்.
நடந்து செல்வதும் நமக்கு ஒரு Relaxation தரும். நடந்து செல்லும் பொது நாம் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். சந்திக்கும் பொது நம்மை மீறி அவர்களை Observe செய்கின்றோம். செய்யும் பொது நம் மனம் automatically அவர்களை பார்க்கும், அவர்கள் மீது கவனம் செலுத்தும். நம் மனதில் இருக்கும் மன அழுத்தத்தை மாற்றும்.
பாடல் கேட்பது உண்மையிலே ஒரு பெரிய மாற்றத்தை தரும். உற்சாகம் ஊட்டும் பாடல்கள் இருந்தால் இன்னும் நல்லது. அது உங்களை மீறி உங்களை நடனம் ஆட வைக்கும். அது கவலை மற்றும் வலி குறைக்க முடியும்.
மனம் திறந்து உங்கள் சக நண்பரிடம் பேசினால் கண்டிப்பாக உங்களது பிரச்சனைகள் கூறினால் கண்டிப்பாக உங்கள் மனதில் இருக்கும் பாரம் குறையும். கண்டிப்பாக அதற்கு தீர்வு கிடைப்பது தாண்டி, அந்த தீர்விற்காக வழியை அமைக்கும். அதனால் மனம் விட்டு பேசுங்கள்.
ஒரு குட்டி snack சாப்பிட்டால் உடனே உங்கள் மனம் மாறும் என்று ஆய்வு கூறுகிறது. அதுவும் உண்மைதான் பெற்றோர்கள் எது நடந்தாலும் சாப்பிட்டு வேலை செய் சாப்பிட்டு பாரு என்று கூறுகிறார்கள் என இப்போதுதான் புரிகிறது. நம் வயிறு காலியாக இருப்பதினால் நம் மூளை மற்றும் மனம் கண்டதை யோசிக்கும். அதனால் சாப்பிட்டு வயிறை நிரப்பினால் நாம் நிதானம் ஆகுவோம். அதனால் உங்களுக்கு மன அழுத்தம் அல்லது கவலையாக இருந்தால் உடனே சாப்பிடுங்கள். உங்களுக்கு பிடித்த உணவு என்றால் இன்னும் சிறப்பு.
நீங்கள் Stretch செய்தால், உங்கள் உடலில் இருக்கும் அழுத்தங்கள் எல்லாம் போகும். அப்போது உங்களுக்கே தெரியாமல் ஒரு புத்துணர்வு கிடைக்கும். மேலும் வசூல் ராஜா படத்தில் வரும் கட்டிப்பிடி வைத்தியம் உண்மையிலே சிறந்த ஒரு ஆற்றும் குணம் உடையது. அதனால் நீங்கள் கவலையாகவோ அல்லது மன அழுத்தம் இருந்தாலோ உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் உங்களை கட்டிப்பிடித்து கொள்ளுங்கள்.
இதுவெல்லாம் முடிந்த வரை உங்களை instant ஆக மாற்றிக்கொள்ள உதவும் விஷயங்கள். நமக்கு தேவையானது அனைத்தும் நம்மிடம் தான் இருக்கிறது. நம்மை சுற்றி தான் இருக்கிறது. அதை நாம் பார்க்காமல் ஒரு சிறிய தவறோ அல்லது அசௌகரியம் ஏற்பட்டால் உடனே நீங்கள் தவறான முடிவை எடுப்பது சரியல்ல.
Suggested Reading:
வேலையை தள்ளிப்போடும் பழக்கம் இருக்கிறதா? Please Read this
Suggested Reading:
Fridgeயை Maintain செய்ய Simple Tips!!
Suggested Reading:
கவனச்சிதறல் இருக்கிறதா உங்களுக்கு? அப்போ இதை படியுங்கள்!
Suggested Reading:
Women's Cricket பிரபலமாகாமல் இருக்க இதான் காரணமா?