ஆண்கள் நட்பு தான் அதிகம். அவர்கள் தான் நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். நண்பனுக்காக தோல் கொடுப்பான் தோழன் என்றெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அவர்கள் பெண்களின் நட்பை பெரிதாக எண்ணுவதில்லை. பெண்கள் நட்பில் பொறாமை, Back stabbing , புறணி பேசுதல் போன்றவை இருக்கும் என்று தான் எண்ணுவார்களே தவிர அதில் இருக்கும் அழகையும், புரிதலையும் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் இது மட்டும் தானா பெண்களின் நட்பில் இருக்கும். கண்டிப்பாக கிடையாது. அதையும் தாண்டி ஒரு அழகான பந்தம் இருக்கிறது. அந்த பந்தம்க்கு நீண்ட நாட்கள் பழக்கம் வேண்டும் என்றெல்லாம் கிடையாது. ஒரு sanitary napkin கொடுப்பதில் ஆரம்பிக்கும். ஒரு பேருந்தில் இடம் தருவதிலும் ஆரம்பிக்கும். அது மெல்ல மெல்ல பார்க்கும் போதெல்லாம் சிரிப்பதும், அது அப்படியே நாளைடைவில் ஒன்றாக சாப்பிடுவதல் தொடங்கி நம் சுக துக்கங்களில் பங்குபெறும் அளவிற்கு வளர்ந்து விடும்.
யாருக்காச்சும் மன உடைச்சல் ஏற்பட்டாலோ, மன அழுத்தமாக இருந்தால் உடனே நாம் அவர்களைத்தான் தேடுவோம். அவர்கள் நமக்கு ஒரு Mentor போன்று. மனதில் ஒரு குழப்பமா அவளிடம் கூறினால் தீர்வு கொடுப்பாள். ஒருவருடன் சண்டையா எனக்காக வந்து அவள் நிற்பாள்.
இப்படி இருக்கும் தோழிகளிடம் ஏதோ ஒரு காரணத்தினால் ஒரு பிரிவு ஏற்படுகிறது. அதை தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் கூறி இருக்கிறோம்.
what is Sis Code?
அவர்களை முதன்மை இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் பத்து ஆண்டுகள் கழித்து உங்கள் கணவரையோ அல்லது காதலனையோ பார்க்க சென்றிருக்கும் பொது, உங்கள் தோழி ஒரு பிரச்சனை என்று அழைத்தால் உடனே செல்ல வேண்டும். அது உங்களுக்கு சாதாரண விஷயமாக இருந்தால் கூட அது அவளுக்கு பெரியது. அதனால் உடனே செல்ல வேண்டும்.உங்கள் சுக துக்கங்களில் பங்குக்கேற்ற அவருக்காக இதுகூட செய்ய கூடாதா?
அவளின் முதுகில் குத்தாதே. அவளை உங்கள் உண்மையான தோழி என்று நினைத்தால் இதை செய்யாதீர்கள். அவள் தவறு செய்தால் அதை அவள் முகத்திற்கு நேராக கூறிவிடுங்கள். கண்டிப்பாக தவறாக எண்ணமாட்டார். அதே மாதிரி அவள் முன் நன்றாக பேசிவிட்டு அவள் சென்ற பின் அவளை பற்றி அவதூறாக பேசாதீர்கள். கண்டிப்பாக இது நன்மையில் முடியாது.
என்னதான் தோழி என்றாலும் கண்டிப்பாக Personal Space அவசியம். அதனால் ஏதோ ஒரு விஷயம் யார் மூலமாக உங்கள் காதுக்கு வந்தாலும் அதை பொருட்படுத்தாமல், அவளாக கூறும் படி நீங்கள் கேட்டகாதீர்கள். ஏதோ ஒரு காரணத்திற்காக தான் உங்களிடம் இருந்து மறைத்து வைத்திருக்கிறார். அதை மதியுங்கள்.
எது நடந்தாலும் அவளை Judge செய்யாதீர்கள். அவள் மதுவிற்கு அடிமையாகிறாளோ, அல்லது தவறான பாதியில் செல்கிறாளோ Judge செய்யாதீர்கள். அவளுடன் இருந்து அவளை அதிலிருந்து மீட்க முயற்சி செய்யுங்கள். அதை விட்டுவிட்டு நீங்களும் ஊரு போல judge செய்யாதீர்கள்.
இது போக தோழிடம் யாராவது flirt செய்து கொண்டு இருந்து அது அவளுக்கு discomfort ஆகா இருக்கிறது என்று உங்களுக்கு அறிந்தால் உடனே பொய் அவளை ஏதோ ஒரு காரணம் சொல்லி அங்கிருந்து அழைத்து செல்வது. யாரவது அவளிடம் வம்பு இழுத்தால் , அவளுக்காக வருவது இதுவும் "sis code" தான்.
சுருக்கமாக கூறினால், "அவளுக்காக நீங்கள் வருவதும், உங்களுக்காக அவள் வருத்தும் தான்" Sis code!!
Suggested Reading:
தொடங்கிய வேலையில் ஆர்வம் குறைந்து விடுகிறதா? This is for You!
Suggested Reading:
Instant Happiness கிடைக்க இதை செய்து பாருங்கள்!!
Suggested Reading:
வேலையை தள்ளிப்போடும் பழக்கம் இருக்கிறதா? Please Read this
Suggested Reading:
Fridgeயை Maintain செய்ய Simple Tips!!