Periods Time'ல செய்ய கூடிய exercises

அய்யய்யோ இந்த ஐந்து நாள் வந்துவிட்டால் போதும் ஒண்ணுமே பண்ணமுடியாமல் போகிவிடும். ஒரு மாறி கடுகடு என்று இருக்கும். இது எல்லாம் தாண்டி இந்த வயிறு வலி வேற தாங்க முடியாது. என்னதான் ஓத்திடம் கொடுத்தாலும் அது சரி ஆகாது.

author-image
Nandhini
New Update
exercises

Image is used for Representation purposes only.

அப்போது தான் இந்த உடற்பயிற்சி என்பது உங்களுக்கு கைகொடுக்கும். வயிறு வலியை போக்க இந்த உடல்பயிற்சி செய்தால் குறைந்து விடும் என்று ஆய்வு கூறுகிறது. "கண்ணாடி திருப்பினா எப்படி ஜீவா வண்டி ஓடும் " என்ற காமெடி போல உடற்பயிற்சி செய்தால் எப்படி இந்த வலி போகும் என்று அனைவர்க்கும் ஒரு கேள்வி வரும். மாதவிடாய் நேரத்தில் நமக்கு நிறைய இரத்த இழப்பு இருப்பதினால் கண்டிப்பாக Tired ஆகி விடும். அதனால் bedயில் படுத்தால் போதும் என்ற எண்ணம் தான் வரும். ஆனால் படுத்தே கிடந்தால் வலி சரியாகாது. அதற்கு ஏதாவது Physical Activity முக்கியம். அந்த சமயத்தில் கண்ட உடற்பயிற்சி செய்வதை விட்டுவிட்டு கீழே இருக்கும் உடற்பயிற்சியை செய்தால் உங்கள் வலி குறையும்.

Advertisment

ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது மாதவிடாய் நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் அது இன்னும் உங்களுக்கு வலியை தான் தரும் என்று. அதெல்லாம் பொய். செய்வதினால் நன்மைகள் பல இருக்கின்றது. உங்களது PMS Symptonsயை குறைக்கும். வயிறு Bloating குறைக்கும், உங்களது Mood மாற்றுகிறது. அதனால் உடற்பயிற்சி செய்வது என்பது நல்லதே.

Exercises during Periods

உங்களுக்கு வலியை குறைக்க ஒரு சின்ன நடை நல்லது. அதுவும் பாடல்கள் கேட்டுக்கொண்டே நடந்தால் இன்னும் நல்லது. உங்கள் மனதை அது மாற்றும்.jogging செய்வதும் ஒரு நல்ல உடற்பயிரிச்சிதான்.Jogging உங்கள் வலியையும் எரிச்சலையும் உடனடியாகக் குறைக்கும். உங்களைHydrate ஆக வைத்திருக்க நினைவில் கொள்ளுங்கள்.

keerthy doing yoga

யோகா இது நல்ல பயன் தரக்கூடியது. பல யோகா Poses உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகின்றன மற்றும் உங்கள் தீங்கு விளைவிக்கும் ஏதாவது உடலில் இருந்தால் அதை எளிதாக நீக்குகிறது. யோகா உங்கள் உடலை ஓய்வெடுக்க உதவுகிறது மற்றும் பிடிப்புகள் மற்றும் வீக்கம் போன்ற உங்கள் மாதவிடாய் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மற்றும் சோதிக்கப்பட்டது.Cobra Pose , Cat cow stretch மற்றும் fish Pose இதுவெல்லாம் instant Relief தரக்கூடியது என்று ஆய்வு கூறுகிறது.

Advertisment

உங்களது உடலை stretch செய்வது வெறும் மெத்தையில் இருப்பதை விட சுகமே. உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு கடினமாக இருந்தால் stretching செய்யுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மாதவிடாய் வலியை குறைக்கும்.

zumba, aerobics மற்றும் நடனம் ஒரு முக்கியமான பங்கு அளிக்கிறது ஆடுவதினால் உங்கள் மனம் லேசாகுகிறது. மற்றும் உங்கள் வலிலையும் குறைக்கும். மேலும் swimming செய்வதும் நல்லது. பெண்கள் குளிர்ந்த நீரில் இருக்கும்போது இரத்த நாளங்கள் சிறிது நேரம் குளிர்ச்சியாக இறுக்கப்படுவதால் இரத்தப்போக்கு குறைவாக இருக்கும் என்று பல மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சரி இதெல்லாம் செய்வது நல்லது என்று கூறினீர்கள் ஆனால் எந்த மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது?

Advertisment

yoga not to do

கடுமையான உடற்பயிற்சிகளைத் தவிர்க்கவும்.நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கவும்.யோகாவுடன் தலைகீழ் pose பரிந்துரைக்கப்படவில்லை. உடற்பயிற்சி செய்ய உங்கள் உடலை கட்டாயப்படுத்த வேண்டாம். 

வழக்கமான உடற்பயிற்சி உங்கள் ஆரோக்கியத்திற்கும் உங்கள் மனதிற்கும் மிகவும் நன்மை பயக்கும். உங்களுக்கு கடுமையான அறிகுறிகள் இல்லாவிட்டால், உங்கள் மாதவிடாய் காலத்தில் உங்கள் தினசரி exercise தவிர்ப்பதற்கு எந்த அறிவியல் காரணமும் இல்லை. இந்த நேரத்தில் உடற்பயிற்சி உங்கள் உடலுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று பல மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். எனவே, உங்கள் உடலைக் கேட்டு, உங்கள் உடலையும் மனதையும் Relax செய்ய லேசான பயிற்சிகளைச் செய்யுங்கள்.

Suggested Reading: 

Exercises during Periods