Advertisment

தனியாக வாழ்வதை Adapt செய்வதற்கு Tips!!

பிறந்ததில் இருந்து பள்ளிக்கூடம் வரை அம்மா அப்பாவுடன் இருந்து கல்லூரிக்கோ அல்லது வேலைக்காகவோ இருக்குமிடத்தில் இருந்து வெளியே செல்வது அவர்களை பிரிவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக தான் இருக்கும்.

author-image
Nandhini
New Update
Raja rani nayanthara

Image is used for Representation purposes only.

ஒரு பக்கம் புது வாழ்க்கை புது துவக்கம் என்று ஒரு excitement இருந்தாலும். 18 வருடம் இருந்த ஒரு இடத்தை விட்டு விலகி போகிறோமே என்ற வருத்தமும் இருக்கும். அதெல்லாம் இல்லை நானெல்லாம் செம jolly ஆக  இருப்பேன். எப்போ பார்த்தாலும் இதை செய்! அதை செய்! என்று நச்சரிக்கும் அம்மாவிடம் இருந்து, ஏன்?எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கும் அப்பாவிடம் இருந்து, நான் எதை செய்கிறேனோ அதையே என் சகோதர்கள் செய்வதிலிருந்து தப்பித்து எப்போடா போவேன் என்று தான் இருப்பேன். இப்படி கூறும் நாம், இவர்களை எல்லாம் விட்டு செல்ல வேண்டும் என்று ஆசை படுகின்றோமோ அங்கு சென்று ஒரே வாரத்தில் "அம்மா உன்னை மிகவும் miss செய்கின்றேன்" என்று கூறி வருத்தப்படுவோம். இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும் இதான் உண்மை. 

Advertisment

ஒரு சிலர் பேர் இதை ஏன் வெளிப்படையாக Express செய்ய மாட்டார்கள் ஏன் என்று கேட்டால், "எங்கே நான் வருத்தப்படுவதை என் பெற்றோர்களுக்கு தெரிந்தால் அவர்கள்  வருத்தப்படுவார்கள்" என்று தான் நாங்கள் வெளிக்காட்ட மாட்டோம்.

நம் feelings யை express பண்ணினாலும் பிரச்சனை வெளிக்காட்டாமல் மனதிற்குள் வைத்திருந்தாலும் மன அழுத்தம் கவலை போன்ற பிரச்னைகள் வரலாம். அப்படி நீங்கள் தனியாக இருக்கும் பொழுதில் ஒரு சில விஷயங்கள் செய்தால், உங்கள் mind மாறும் என்று ஆய்வு கூறுகிறது.

தனியாக வாழ்வதை ஏற்றுக்கொள்வதற்கு வழிகள் | Ways to adapt to living independently

Advertisment

தனியாக வருவதற்கு முன் நாம் நமது free time யை நண்பர்களுடன் வெளியில் செல்வது, பெற்றோர்களிடம் குடும்பத்தாரை பற்றி புறணி பேசுவது, அம்மா வேலை செய்யும் பொது அவரை disturb செய்வது போன்று நாம் அந்த நேரத்தை கழிப்போம். ஆனால் வெளியே தனியாக வந்த பிறகு இதெல்லாம் இருக்காது. அப்போது நமது free time  எப்படி கழிப்பது என்று ஒரு யோசனை வரும். தூங்கலாம் ஆனால் எவ்வளவு நேரம் தூங்குவது? அப்போது என்ன செய்யலாம்? அதற்கு பதில் நிறையாக இருக்கிறது. நீங்கள் தனியாக இருக்கும் நேரத்தில், இன்டர்நெட்டில் படம் பார்ப்பது, உங்களது வீட்டை ஒழுங்கு படுத்துவது, உங்களுக்கு பிடித்த உணவை நீங்க செய்து சாப்பிடேலாம். பிடித்த இடத்திற்கு சென்று அங்கு சில நேரத்தை செலவழிக்கெல்லாம். முக்கியமாக  Self care  பின்பற்றலாம். அது உங்களுக்கு satisfaction னும் கொடுக்கும்.

என்னதான் தனியாக வாழ்வது மிகவும் பிடிக்கும் என்று excite ஆக இருந்தாலும் கண்டிப்பாக ஒரு point யில் தனிமை நம்மை ஆட்கொள்ளும். தனிமையாக feel செய்வது ஒன்றும் தப்பில்லை. அனைவரும் மனிதர்கள் தானே. அந்த சமயத்தில் நாம் நண்பர்களிடம் phone செய்து வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்று மாற்றி மாற்றி பகிர்ந்து கொள்ளலாம். நேரில் பார்க்க முடியும் நண்பரை நேரில் சந்திக்கெல்லாம். அரட்டைகள் என அன்று நாளே போய்விடும்.

கண்டிப்பாக இது தனிமைக்கு ஒரு நல்ல companion ஆக இருக்கும். செல்லப்பிராணி "pet". அதுவும் கைகுழந்தையும் ஒன்று என்று பலரும் கூறுவதுண்டு. அதை பற்றி Pet owners  களிடம் கேட்டால் கண்டிப்பாக ஒப்புக்கொள்வார். அதற்கு காலையில் சாப்பாடு , walking மற்றும் playtime  என்று உங்களை அது occupied ஆக வைத்துக்கொள்ளும். பிறகு நீங்களே உங்களுக்கு personal time வேண்டும் என்றால் கிடைக்காது.

Advertisment

நமக்கு இது செய்ய கடினம் தான் ஆனாலும் செய்தால் தனிமையை போக்கெல்லாம். ஒரு வரைமுறையிட்டு வாழ்வது. அதாவது scheduling. இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும். இந்த நேரத்தில் நாம் உடற்பயிற்சிக்கு செல்ல வேண்டும். இந்த நேரத்தில் நாம் இந்த அறையை சுத்தம் செய்ய வேண்டும் என்று நீங்களே ஒரு schedule create செய்தால் நன்றாக இருக்கும். இதையெல்லாம் நீங்கள் தனிமையாக உணரும் நேரத்தில் செய்யலாம்.

புது புது விஷயங்களை நாம் try செய்வதன் மூலம் நம் மனம் தனிமையை விட்டு விலகி வருகிறது. நமது மூளை அந்த விஷயத்தை கற்றுகொள்வதில் ஆர்வம் அதிகமாக காட்டுவதனால் நீங்கள் தனிமையாக இருகிறீர்கள் என்பதை மறந்து விடுகிறது. அது ஒரு drawing  ஆக இருக்கெல்லாம், ஒரு புது சமையல் ஆக இருக்கெல்லாம் ஒரு stitching  ஆக இருக்கெல்லாம். நீங்கள் இது வரை செய்யாததை செய்தால் நல்லது. அப்போது தான் ஆர்வம் அதிகமாக இருக்கும்.

நிறைய நல்ல விஷயங்கள் கூறினாலும், நம் மனம் கண்டிப்பாக ஏதோ ஒரு negativity தேடி தான் செல்லும். அப்படித்தான் நாம் வளர்க்க பட்டிருக்கிறோம். அதுவும் அமைதியாக மற்றும் தனிமையாக இருக்கும் நிலையில் கண்டிப்பாக நம் மனம் negativeயை நோக்கி தான் ஓடும் . அப்படி இருக்கும் நிலையில் நாம் தனியாக இருப்பதால் நமக்கு கிடைக்கும் நல்ல விஷயங்களை சிந்திக்க வேண்டும். உங்களை வலுவாக்குகிறது. உங்களுக்கு எது தேவையோ அதை நோக்கி மட்டும் அழைத்து செல்கிறது போன்று நல்ல விஷயங்களை சிந்திக்க வேண்டும்.

Advertisment

எவ்வளவு செய்தாலும் இயற்கை போல ஒரு நல்ல துணை நமக்கு கிடையாது. என்றாவது தனிமையாக இருந்தால் ஒரு நடை செல்லுங்கள். கடற்கரை, பூங்கா போன்ற இடத்திற்கு செல்லுங்கள். உங்கள் மனம் automatic ஆ மாறும்.

 

 

Advertisment

Suggested Reading:  

Advertisment
Advertisment
Ways to adapt to living independently
Advertisment