Advertisment

அறிவுரை சொல்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை - RJ Raghvi | Influencer

இந்த கட்டுரையில் Influencer, content writer RJ Raghvi அவங்களோட வாழ்க்கை பயணம் மற்றும் அவர்கள் எதிர்நோக்கிய கஷ்டங்கள் மற்றும் அதை எப்படி அவர் கடந்து இப்போது இந்த நிலைமைக்கு வந்துள்ளார் என்பதை பார்ப்போம்.

author-image
Nandhini
24 Sep 2023 புதுப்பிக்கப்பட்டது Sep 25, 2023 16:30 IST
New Update
Rj Raghvi

RJ Raghvi - Influencer | content creator

Journey of Rj Raghvi

Advertisment

உங்களது வாழ்க்கை எப்படி மீடியாக்குள் ?

LKG  முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை கோபாலபுரம் DAV பெண்கள் மேல்நிலை பள்ளியில்  தான் படித்தேன். என்னதான் coed பள்ளியில் படிக்கவில்லை என்றாலும் நல்ல பெண் தோழிகள் கிடைத்தது என்று கேலி செய்தே நேர்காணலை துடங்கினார். நான் படிப்பில் நன்கு தேர்ச்சி பெற வேண்டும் என்று நான் அதில் concentrate செய்து கொண்டு இருந்தேன். என்னதான் படிப்பு என்று ஒரு பக்கம் ஓடினாலும் extra curicular activities யில் ஆணவம் அதிகமாக இருந்தது. நான் பன்னிரெண்டாம் வகுப்பில் நன்கு தேர்ச்சிபெற்றதால் MOP காலேஜ்யில் வேற ஒரு பிரிவிற்காக பதிவு செய்யும் பொது எனது தாயார் இந்த "electronic Media " என்று ஒரு பிரிவு இருக்கு அதை எடுத்துக்கொள். உன்னிடம் திறமை இருக்கிறது. அதற்கான வலு உன்னிடம் இருக்கிறது என்று என்னை ஊக்கவித்து என்னை "electronic Media " எடுக்க சொன்னார். நானும் எடுத்தேன். கல்லூரியின் முதல் ஆண்டு என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்படியே "Go with the  flow "வாக தான் சென்று கொண்டிருந்தேன். 

சரி தொடங்கியதை முடிந்துவிடுவோம் என்று ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் தான் smile web radio  ( இப்போது blacksheep ) எங்களுக்கு Radio Internshipகாக எங்கள் வகுப்பிற்கு வந்தார்கள். அந்த Internship மூலமாக தான் மீடியாவில் என்னவெல்லாம் options இருக்கிறது என்று கற்றுக்கொண்டேன். ஆர்வமும் அதிகமாகியது. பின்னர் அவர்கள் நடத்திய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பொழுது நாங்கள் எதையெல்லாம் பாடமாக படித்தோமோ அதையெல்லாம் செயல்முறையாக நான் கற்றுக்கொண்டேன். அந்த நிறுவனத்தில் பெண்கள் சம்மந்தம் பட்ட ஒரு show செய்தேன் அதான் "girls zone". நான் இந்த விடீயோக்களில் முற்போக்கு சிந்தனைகளை வைத்து தான் ஆரம்பித்தேன் ஆனால் இந்த சமூகம் அதை ஏற்கவில்லை அதனால் நான் நமக்கு Relatable contents கு மாறிவிட்டேன். அந்த நிறுவனத்தில் ஒரு மூன்று நான்கு வருடங்களில் "நான் வேண்டாம் என்று நினைத்த மீடியாவின் ஆர்வம் வந்தது" . கல்லாரி முடிக்கும் பொழுது எனக்கு தனியார் ரேடியோ நிறுவனத்தில் ( ரேடியோ மிர்ச்சி ) RJ இடம் இருக்கிறது என்று அறிந்து அங்கு ஒரு வருடம்  அங்கு Filter coffee with Rj Raghvi என்ற show செய்தேன். 

Advertisment

rj raghvi

பின்பு வேற ஒரு நிறுவனத்தில் "iniyan minion" என்ற showவை செய்தேன். அது தான் என்னுடைய அடுத்த break. மக்கள் அனைவரும் அதை easy யாக relate செய்துக்கொண்டு இருந்தனர். மறக்க முடியதை தரணும் நான் உறங்கி கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் வீடியோ வெளியானது. எழுந்தவுடன் பார்த்தால் எனக்கு அவ்வளவு நல்ல reviews . ஒரு பையன் பெண் நட்பையா மையமாக வைத்து ஆரம்பித்தது தான் அந்தத் இனியன் minion. பின் கொரோனா வந்துவிட்டது. அந்த சமயத்தில் அனைவரும் இந்த youtube பக்கம் வந்துவிட்டார்கள். அந்த சமயத்தில் நான் தனியாக ஒரு channel துடங்கி சிறுது காலம் கழித்து என்னை அறியால் ஆர்வம் இழந்தேன். பின்பு RJ workshop துடங்கினேன். அதிலும் நன்கு response வந்தது. அதுவும் கொரோனவால் வலுவிழக்க ஆரம்பித்து. பின்னர் இன்று நான் ஒரு மீடியா நிறுவனத்தில் Creative producer ஆக வேலை பார்த்துக்கொண்டிருக்கேன் என்று பதிமூன்று நிமிடம் அவரை செய்ததை பற்றி மட்டுமே கூறினார். 

இத்தனை செய்து இருக்கீர்கள் கண்டிப்பாக நிறைய கஷ்டங்கள் Struggles இருக்கும் அதை எப்படி எதிர்கொண்டீர்கள் ?

Advertisment

கஷ்டங்கள் என்பது எங்கு சென்றாலும் இருக்கும். அது மீடியா உலகில் கண்முன் தெரியும். என்னை சுற்றி இருக்கும் நண்பர்க்ளுக்கு நான் என்ன மாதிரியான கஷ்டங்களை எதிர்கொண்டேன் என்று தெரியும். நான் எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை விட்டு வேற ஒரு காரியத்தை செய்ய தொடங்குவேன். இதனால் நான் தேர்கொள்ளும் கஷ்டங்களை விட என்னை சுற்றி இருப்பவர்கள் இதனால் எதிர்கொண்டதது தான் அதிகம். பெரிதாக ஏதும் பார்த்ததில்லை ஏதோ ஒரு விதத்தில் என்னைய நான் occupied ஆக வைத்துக்கொண்டிருப்பேன். விட்டு வந்ததை பற்றி யோசிக்க மாட்டேன்.

negativity handling?

கண்டிப்பாக இருக்கும். நான் அதை handle  செய்யும் முறை " மற்றவர்கள் கூறும் opinions யை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீங்கள் நன்கு கவனித்தால் நான் கிட்டத்தட்ட ஒரு இரண்டு வருடத்தில் நிறைய விஷயங்கள் நிறைய வேலை மாற்றங்கள் என்ன நிலையில்லாம் இருந்துஇருப்பேன். அதுவே ஒரு பெரிய negativity என்னை சுற்றி உருவாகியிருக்கும். ஆனால் நான் அதை பொறுப்படுத்த மாட்டேன். சுற்றி இருப்பவர்கள் நிரைய அறிவுறை கூறுவதுண்டு ஆனாலும் அவர்களுக்கு தெரியும் நான் Creative person என்று. அதனால் நான் மற்றவர்கள் கூறும் opinions யை மண்டைக்குள் ஏற்க மாட்டேன்.

Advertisment

rj raghvi

உங்களது complex யை எப்படி overcome செய்தீர்கள்?

நான் உயரம் குறைவாக இருப்பதை பெரிய complex ஆக நினைத்தேன். அதுவும் இந்த சமூகம் தான் காரணம். எங்கு சென்றாலும் எந்த வகுப்பு படிக்கிறாய் என்று கேப்பதுண்டு ஆனால் எப்போது இனியன் minion செய்தேனோ அன்றிலிருந்து இந்த உயரம் postive ஆகா மாறியது. எனது அடையாளமாக மாறியது.

Advertisment

உங்களை பொறுத்தவரை ஒரு பெண்ணுக்கு எது மிகவும் அவசியமானது?

self respect சுய மரியாதை என்பது மிகவும் அவசியம் என்று கூறினார். உங்களுக்கு சம்மந்தம் இல்லாத ஒரு விஷயத்தில் உங்களை யாராவது கீழே தள்ளினார்கள் என்றால் நீங்கள் அதை மேற்கொள்ளவேண்டும் என்று அவசியம் இல்லை. அந்த இடத்தில் உங்களது சுய மரியாதை விட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டும். நிறைய trigger இருக்கும் ஆனாலும் விட்டுக்கொடுக்க கூடாது. அது மட்டுமில்லாமல் சுய சம்பாத்தியம் மிகவும் அவசியம். ஐந்தாராம் என்றாலும் அது கண்டிப்பாக தேவை என்று அழுத்தமாக கூறினார்.

உங்களை பொறுத்த வரை எது வெற்றி ?

Advertisment

நீங்கள் செய்யும் வேலையில் உங்களுக்கு மன திருப்தி இருந்தால் அது தான் வெற்றி. நான் இருக்கும் வேலை, இருக்கும் இடம் அனைத்தும் எனக்கு மன நிம்மதி இருந்தால், அதுவே வெற்றி என்னை பொறுத்த வரை.

கஷ்டம் என்று வந்தால் நீங்கள் செய்வது?

முன்னாடி எல்லாம் நான் அதற்கு உடனே react செய்து விடுவேன். உதாரணத்திற்கு என் தயார் என்னை திட்டிவிட்டால் நான் உடனே அழுது, அடுத்த நாளில் இருந்து நீ எனக்கு அம்மாவே இல்லை என்று கூறி பேச மாட்டான். ஆனால் காலம் செல்ல செல்ல இப்போதெல்லாம் ஏதாவது வந்தால், உடனே React செய்யாமல்,அதை நன்கு உள்வாங்கி அந்த பிரச்சனைக்கு respond செய்கிறேன். மேலும் இது ஒருவர் மூலமாக நடந்தால் அவர்களிடம் கூறிவிடுவேன் உங்களால் தான் நான் hurt ஆகிருக்கேன் என்று. மேலும் இதை audience யையும் பின்பற்றுமாறு கூறினார்.

Advertisment

rj raghvi

Young girls க்கு ஏதும் அறிவுரைகள்?

அறிவுரை சொல்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லை நானும் கற்றுக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால் ஒரு suggestion கூறவேண்டும் என்றால் அது முடியும். உங்களது தனிப்பட்ட விஷயங்கள் அதாவது Personal things  உங்களை ஆட்கொள்ள கூடாது , அது உங்களை அடக்க கூடாது. உங்கள் வாழ்க்கையில் யாரு இருக்கிறாரோ இல்லையோ ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். strong ஆக இருக்க வேண்டும். யாரையும் dependent ஆக இருக்க கூடாது என்று கூறி அவரது நேர்காணலை முடித்துக்கொண்டார்.

முழு epsiode link கீழே உள்ளது. 

Podcast link: 

 

Suggested Reading: 

Suggested Reading:

 Suggested Reading:

 

#Journey of Rj Raghvi #girls zone #Filter coffee with Rj Raghvi #minion
Advertisment