தமிழ் சினிமாவின் 4 best women characters!!

சினிமாவில் பெண்கள் கதாபாத்திரம் என்பது கவனிக்க வைப்பதுபோல் இருப்பது மிகவும் அரிது. தனிப்பட்ட women centric படங்கள் வந்தாலும் அதை மக்கள் அனைவரும் கவனிக்க வைக்கும் படி இருப்பது சிறிது தான். மாஸ் ஹீரோக்களின் கதையில் நாயகிகளின் screen space மிகவும் குறைவு.

author-image
Nandhini
New Update
4 best women characters

Actresses from the K town.

அதிலும் ஒரு சில கதாபாத்திரங்கள் மட்டுமே நம் மனதில் நீங்கா இடம்பிடிக்கும். அப்படி எனக்கு பிடித்த மற்றும் மக்களின் மனதில் இடம் பிடித்த நான்கு women characters பற்றி தான் இந்த கட்டுரை.

Advertisment

பின் குறிப்பு இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில்லை.

பொதுவாக முன்னர் ஹீரோக்களுக்கு தான் முன்னுரிமையாக தான் எழுதப்படும். பின்பு அதில் ஆங்காங்கே நாயகி வருவதும் போவதுமாய் இருக்கும். பின்பு பாலச்சந்திரன் பாலுமகேந்திரா அவர்களின் காலக்கட்டத்தில் பெண்கள் கதாபாத்திரங்கள் வலுவாக எழுதப்பட்டது. அந்த கதாபாத்திரம் நம் வாழ்வியலில் இருக்கும் ஒரு நபரின் பிரதிபலிப்பாக இருக்கும். அதனால் நாம் அதை எளிதில் உணரக்கூடியதாக இருக்கும். பின் அது மெல்ல மெல்ல குறைத்து மறுபடியும் back to square one ஆக மாற தொடங்கிக்குது.  அது மெல்ல dilute ஆகி அவ்வப்பொழுது women centric படங்கள் வர தொடங்கினர். இது இந்த காலத்தின் நிலைமை.

இப்படி இருக்கும் இந்த சினிமாவுலகில் எனக்கு மிகவும் பிடித்த நான்கு பெண்கள் கதாபாத்திரம் (பழையது முதல் புதியது வரை) இந்த கட்டுரையில் பார்ப்போம்.

4 Best women characterization in tamil cinema

ஆரண்ய காண்டம் - சுப்பு

subbhu

எனக்கு மிகவும் பிடித்த கதா பாத்திரம். சுப்பு . இந்த படத்தில் இந்த கதாபாத்திரம், மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. இந்த படத்தில் முதல் இந்த கதா பாத்திரம் ஒரு ஆணுடன் வரும். அந்த துணையின் நிழலில் இருக்கும் படி எழுதி இருக்கும். படம் பார்த்தவர்களுக்கு இந்த கதாபாத்திரம் ஏன் இப்படி அந்த துணையுடன் இருக்கும் என்று தெரியும். படத்தில் ஒரு scene யில் இந்த சுப்புவை ஒரு லாரி மோத வரும் போது அந்த துணை இவளை காப்பாற்றும், அதையே மாதிரி படத்தின் இறுதில் அதே மாறி ஒரு லாரி இவளை மோத வரும் பொது அவளே பின்னாடி சென்று அந்த விபத்தை தடுப்பாள். இதில் அழகாக ஒரு விஷயத்தை இயக்குனர் நமக்கு புரியவைத்திருப்பார். அது என்னவென்றால் ஒரு பெண்ணுக்கு ஆண் துணை தேவையில்லை என்று.

Advertisment

அருவி - அருவி

aruvi

அதிதி பாலன் நடித்த அருவிக்கு HIV  இருப்பது உறுதியானபோது அவரது வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். abuse மற்றும் harrasment க்கு ஆளாகி, உடைந்து போன அருவி ஒரு reality show மூலம் மீண்டும் பாணியில் வந்து சமூக நெறிமுறைகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார். அப்பாவின் சிறுமியாக இருந்து சுதந்திரப் பெண்ணாக வளர்வது வரை அருவி படத்தின் மூலம் பரிணமிப்பதைப் பார்க்கிறோம்.

தரமணி - அல்தியா

tharamani andrea

Andrea நடித்த அல்தியா, ஒரு கடுமையான சுதந்திரமான single mom , அவர் தனது குடும்பத்திற்கு ஆதாரமாக இருக்கிறார். அவள் தன் முன்னாள் கணவனின் change of gender மனதார ஏற்றுக்கொள்கிறாள், சமூகத்தில் இருந்து விரோதமான கேள்விகளை எதிர்கொண்டாலும் அவனது அனுமதியின்றி அவனை வெளியேற்ற வேண்டாம் என்று தேர்வு செய்கிறாள். ஆண்களின் பாதுகாப்பின்மையை சமாளிப்பது தன் பொறுப்பாக அவள் கருதுவதில்லை.தற்போதைய சுதந்திரமான பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றும் ஒரு சுதந்திரமான பெண்ணை காதலிக்கும் போது ஆண்களுக்கு எப்படி பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை படம் காட்டுகிறது.

மண்டேலா- தேன்மொழி

mandela sreeja.

ஷீலா ராஜ்குமார் நடித்த தேன்மொழி உள்ளூர் தபால் நிலையத்தை நடத்தி வருகிறார். சாதிவெறிக்கு எதிராக துணிச்சலுடன் நிற்கும் அவர், எந்த சாதியையும் சார்ந்தவர் அல்ல என்பதால் கிராம மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒரு குடியிருப்பாளரான மண்டேலாவுக்கு (யோகி பாபு) உதவுகிறார். பின்னர், மண்டேலா தேர்தல்களின் போது தனது அனைத்து முக்கிய வாக்குகளையும் பயன்படுத்திக் கொண்ட போது, ​​அவர் அவரை எதிர்க்கிறார். தேன்மொழி ஒரு கௌரவமான மற்றும் முற்போக்கான பெண்ணாக முன்மாதிரியாக சித்தரிக்கப்படுகிறார் இயக்குனர். மேலும் இந்த சிந்தனை உடைய பெண்களே இப்போது அதிகம்.

Advertisment

மேலும் இதுவெல்லாம் எனக்கு மிகவும் பிடித்த women characterஸ் .இதை விட இன்னும் நிறையாக இருக்கிறது. இன்னும் அதிகமாக பெண்களை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து எழுதுவார்கள் என்று நம்புவோம்.

Suggested Reading: 

Suggested Reading: 

4 best women characterization in tamil cinema