Advertisment

MNC வேலையை விட்டு ஒப்பனை கலை நிபுணரான Manju(IB Makeover Studio)

IB Makeover Studio நடத்தி வரும் மஞ்சு பாரதியின் வாழ்க்கை பயணம் பற்றி இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது‌. SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் அவர் தனது வாழ்க்கை பயணம் பற்றி பகிர்ந்து கொண்டார்.

author-image
Devayani
New Update
IB Makeover Studio

Images are used from IB Makeover Studio's Instagram handle

IB Makeover ஸ்டுடியோவின் நிறுவனர் மஞ்சு பாரதி தனது 8 வருட MNC வேலையை விட்டு தன்னுடைய பேஷனை தொடர்வதற்கான முயற்சிகளை எடுத்துள்ளார். அவருக்கு சிறுவயதிலிருந்து தன்னை மெருகேற்றிக் கொள்வது பிடித்த விஷயமாக இருந்தது. ஆனால் வீட்டில் ஒப்பனை கலை பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாமல் இருந்ததால் இதைப் பற்றி கற்றுக் கொள்வதற்கு பெரிதாக ஆதரவளிக்கவில்லை. அதனால் B.Com படித்து முடித்துவிட்டு MNCஇல் வேலை செய்து கொண்டிருந்தார்.

Advertisment

எல்லோர் வீட்டிலும் நினைப்பது போலவே நல்ல சம்பளம் உடைய 9 to 5 வேலைக்கு செல்வது தான் நல்ல வேலை என அவர் வீட்டிலும் நினைத்தார்கள். ஆனால் இவர் ஒப்பனை கலை பற்றி கற்றுக் கொள்வதற்காக வீட்டில் கேட்ட பொழுது எது செய்தாலும் நீ சம்பாதித்து உன்னுடைய பணத்தில் செய்து கொள் என்று கூறினர். இதனால் YouTubeஇல் மற்றும் ஃப்ரீயாக எங்கெல்லாம் ஒப்பனை கலை பற்றி கற்றுத் தருவார்களோ அதில் பார்த்து கற்றுக் கொண்டார். இருப்பினும் இலவசமாக கிடைக்கும் விஷயத்தில் பெரிதாக எந்த ஒரு நுட்பமான அறிவும் கிடைக்காது என்பதை உணர்ந்து இதை professional ஆக கற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். எதார்த்தமாக ஒரு நாள் அவருடைய கணவருடன் இதைப் பற்றி பேசும்போது அவர் ஆதரவு அளித்தார். பணத்திற்காக இதை தேர்ந்தெடுக்காமல் தனக்கு இதன் மீது ஆர்வம் இருந்த ஒரே காரணத்தினால் அவர் இந்த தொழிலை தேர்ந்தெடுத்தார்.

IB Makeover Studio

ஆனால், ஒப்பனை கலை கற்றுக் கொள்வதில் ஆரம்பகாலம் என்பதால் அவர் தனது வேலையையும் விடாமல் செய்து கொண்டே கிடைக்கும் நேரங்களில் ஒப்பனை கலை பற்றி கற்றுக் கொண்டார். வார நாட்களில் வேலைக்கு செல்வதால் வார இறுதியில் ஒப்பனை கலை பயிற்சிகளை பெற்றார். அதை பற்றின முழு அறிவையும் பெற்ற பிறகு ஒரு அகாடமி ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்து அதை 2018ல் ஆரம்பித்தார். வீட்டில் சிறிய பகுதியில் தனது சொந்த அகாடமி ஆரம்பித்தார். அவரின் வேலை நைட் ஷிப் என்பதால் காலை 9 மணி முதல் மூன்று மணி வரை ஒப்பனை கலை பற்றிய பாடங்கள் எடுப்பார். பிறகு 4:30 மணியிலிருந்து அவரின் MNC வேலைக்கு செல்வார். நான்கு முதல் ஐந்து மணி நேரங்கள் மட்டுமே அவரால் ஓய்வெடுக்க முடியும்.  இப்படி இரண்டு batch எடுத்து முடித்த பிறகு ஒரு எதிர்பாராத சூழ்நிலையில் வேலையா அல்லது ஒப்பனை தொழிலா என்று தேர்ந்தெடுக்கும் அபாயம் வந்தது. அப்பொழுது தனது வேலையை விட இந்த தொழிலில் அவருக்கு ஆர்வம் நிறைய இருந்ததாலும், இதில் அவருக்கு ஒரு அடையாளம் கிடைக்கும் என்பதாலும் தனது இந்த ஒப்பனை தொழிலை தேர்ந்தெடுத்தார்.

Advertisment

அவர் வேலையை விட்டவுடன் கொரோனா ஊரடங்கு போடப்பட்டது. இதனால் அகாடமிக்கு யாரும் வந்து சேர வாய்ப்பில்லை என்பதால் ஆன்லைனில் வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தார். கொரானா ஊரடங்கு முடிந்த பிறகு பக்கத்தில் வசிப்பவர்களிடமிருந்து வீட்டில் இது போன்ற வகுப்புகள் நடத்தக் கூடாது என்று புகார் வந்தது. அதனால் தனியாக ஒரு இடத்தை வாடகைக்கு வாங்கி அங்கு தனது அகாடமியை ஆரம்பித்தார். தனது அகாடமி International Affiliated அகாடமி ஆன பிறகு சொந்தமாக இடத்தை வாங்கி தற்போது அதில் IB Makeover Studio நடத்தி வருகிறார். She Awards 2023ன் சிறந்த அகாடமி என்ற விருதை இவருக்கு அளித்து கௌரவித்துள்ளது.

SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் தனது வாழ்க்கை பயணம் பற்றியும் மற்றும் பல பயனுள்ள தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அதனை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: "I left my IT job to follow my passion" - Manju Bharathi | IB Makeover Studio | Bridal Makeup Expert

Advertisment


Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

IB Makeover Studio Manju Bharathi
Advertisment