தமிழ் நகைச்சுவை கன்டென்ட் கிரியேட்டர் ஜெனிபர்(Jenni MJ)

ஜெனிபர் தனது YouTube பயணம் பற்றியும் அவரின் கருத்துக்கள் பற்றியும் பகிர்ந்துள்ளார். மேலும் புதிதாக YouTube சேனல் தொடங்க நினைப்பவர்களுக்கும் சில ஆலோசனை கூறியுள்ளார். அதனை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
18 Mar 2023 புதுப்பிக்கப்பட்டது Jun 06, 2023 21:48 IST
Jeni MJ

Image of Jennifer

சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை வீடியோக்கள் பதிவிடும் ஜெனிபர் Thuglife Thalaivi என்ற Podcastஇல் அவரது YouTube பயணத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அவர் அளித்த நேர்காணலில் கூறிய சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

YouTubeயில் வீடியோ பதிவிடலாம் என்ற யோசனை எப்பொழுது வந்தது?

கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் போது YouTube சேனல் ஆரம்பித்து விட்டேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது பப்ளிக் ஸ்பீக்கிங்கில்(Public Speaking) நான் கலந்து கொண்டு மேடைப்பேச்சுகளை தந்துள்ளேன். நான் நன்றாக பேசுவேன் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது. அதனால் அதை வைத்து என்ன செய்ய முடியும் என்று யோசித்தேன். ஊரடங்கின் போது என்னிடம் கைபேசி இருந்தது. அப்பொழுது தான் எதையாவது ஆரம்பிக்கலாம், மக்களுக்கு எதையாவது சொல்லித் தரலாம் என்று எண்ணி ஹேக்ஸ்(hacks) வைத்து ஒரு YouTube சேனல் ஆரம்பித்தேன். இப்படித்தான் என்னுடைய YouTube பயணம் தொடங்கியது.

இந்த பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

Advertisment

முதலில் நான் கைபேசி வைத்து தான் ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஒரு பூந்தொட்டியில் செல்பி ஸ்டிக்கை(selfie stick) வைத்து, அதில் கைபேசியை வைத்து அதைத்தான் ஸ்டாண்டாக பயன்படுத்தினேன். ஆரம்பத்தில் எடிட்டிங்(editing) சுத்தமாக தெரியாது. எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு YouTubeற்கு வரவில்லை. ஆரம்பத்தில் எல்லாமே புதிதாக தான் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இதையெல்லாம் கற்றுக் கொண்டேன். ஒரு வருடத்திற்கு பிறகு தான் கேமரா வாங்கினோம். அதிலும் பல செட்டிங் இருப்பதால் ஆரம்பத்தில் கடினமாக இருந்தது. இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொண்டுதான் இருக்கிறோம்.

Jenni MJ Jennifer

YouTube பற்றி மக்கள் தவறாக நினைக்கும் மூன்று கருத்துக்களை கூறுங்கள்?

Advertisment

முதல் வீடியோ பதிவிட்ட உடனே யாரும் பெரிய ஆளாக முடியாது. முதல் வீடியோவிலேயே ஒரு மில்லியன் தொட முடியாது. மக்கள் அதுக்குள்ள ஒரு லட்சம் பாலவர்ஸ் வந்துட்டாங்களா? என்று கேட்பார்கள். ஆனால் அதன் பின் உள்ள உழைப்பு அந்த Youtuberக்கு மட்டும் தான் தெரியும். எவ்வளவு உழைத்து இருக்கிறார்கள், எவ்வளவு நேரம் அதற்காக செலவிட்டிருக்கிறார்கள், எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள் என்று அந்த நபருக்கு மட்டும் தான் தெரியும். அதனால் YouTube மற்றும் கன்டென்ட் கிரியேஷன்(content creation) மிகவும் சுலபமானது என்று கூறாதீர்கள். அது மன வலியை ஏற்படுத்துகிறது.

இரண்டாவது விஷயம் நிறைய பணம் சம்பாதிக்கிறார்கள் என்று கூறுகின்றனர். லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கின்றனர் என்று மக்கள் கூறுகின்றனர். அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் அப்படி எதையும் பார்த்ததில்லை. ஒவ்வொரு சேனலுக்கு ஏற்றவாறு பணம் வரும். அவர்கள் எந்த மாதிரி வீடியோக்கள் பதிவிடுகிறார்கள் மற்றும் எவ்வளவு வீடியோக்கள் போடுகிறார்கள் என்பதை பொறுத்து வேறுபடும்.

மூன்றாவதாக நாங்கள் காட்டும் விஷயங்களை வைத்து நாங்கள் பணக்காரர்கள் என்று முடிவெடுத்து விடுகின்றனர். ஆனால் வாடகை வீட்டில் இருக்கிறார்களா, போன் அல்லது காரை EMI மூலம் வாங்கி இருக்கிறார்களா என்பது எல்லாம் அந்த YouTuberக்கு மட்டும்தான் தெரியும். அவர்கள் காண்பிக்கும் விஷயங்கள் சாதாரணமாக கிடைத்தது கிடையாது. அதற்கு பின்னாடி அவர்களுக்கு என்று ஒரு கதை இருக்கும். அவர்களால் சொல்ல முடியாத விஷயங்களும் இருக்கும். அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.

Advertisment

Jenni MJ characters in youtube shorts⁠⁠⁠⁠⁠⁠⁠

புதிதாக YouTube தொடங்க நினைப்பவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரை?

"Consistency is the key" அதை நான் ரொம்ப நம்புறேன். Jenni Hacksயில் நான் வாரத்திற்கு இரண்டு பெரிய வீடியோக்கள் மட்டும் தான் பதிவிடுவேன். ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை நான் அதை தான் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் Jenni MJ சேனலில் தினமும் ஒரு வீடியோ பதிவிடுவேன். தொடர்ந்து ஆடியன்ஸ் உடன் இணைந்திருக்கும் பொழுது சப்ஸ்கிரைபர்ஸ்(subscribers) அதிகரிக்கும். ஒரு வீடியோ நன்றாக சென்றுவிட்டால் மற்றொரு வீடியோவை சிறிது நாட்கள் கழித்து நான் போட மாட்டேன். வீடியோ சரியாக போனாலும், போகவில்லை என்றாலும் நான் தினமும் ஒரு வீடியோவை கண்டிப்பாக பதிவிடுவேன். பணத்திற்காக இதை செய்யாதீர்கள், உங்களுக்கு வீடியோ எடுக்க பிடிக்கும் என்றால் மட்டும் இதை செய்யுங்கள். அப்பொழுதுதான் கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

Advertisment

ஜெனிபர் Thuglife Thalaivi என்ற Podcastஇல் தனது வாழ்க்கையை பற்றி மேலும் நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Jennifer makes us laugh with highly relatable content | Tamil Comedy Content Creator | Tamil YouTuber

 

Suggested Reading: என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo

Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?

Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை

Suggested Reading: சுயமரியாதையை (self-esteem) அதிகரித்துக் கொள்வதற்கான ஐந்து பழக்கங்கள்

#Jenni Hacks #Comedy content creator #Jennifer #Jenni MJ