சீக்கிரம் settle ஆக வேண்டும் என்றால் இது வேண்டாம் - Doctor

இந்த கட்டுரையில் ஒரு மருத்துவரை நேர்காணல் எடுத்து அதை கட்டுரை வடிவில் மாறியுள்ளோம். இதில் அவருக்கு எப்படி இந்த துறையில் ஆர்வம் வந்தது மற்றும் அதில் இருக்கும் நன்மை மற்றும் இன்னல்கள் பற்றி விரிவாக பேசியுள்ளோம். ஒரு சில தொகுப்பை கட்டுரையாக எழுதியுள்ளோம்.

author-image
Nandhini
New Update
doctor.jpg

Image is used for representation purposes only.

அவர் வேலை செய்யும் organisation விதிமுறையை கருத்தில்கொண்டு அவரது பெயர் மற்றும் பணிபுரியும் இடத்தை mention செய்ய வில்லை.

Journey of a doctor

இந்த துறையை எடுத்ததிற்கு காரணம் ?

Advertisment

எந்த ஒரு particular reason கிடையாது. எனக்கு என்று ஒரு identity வேண்டும், தனியாக தெரிய வேண்டும் என்பதற்காக நான் இந்த மருத்துவ துறையை தேர்ந்து எடுத்தேன். மேலும் என்னுடைய தந்தைக்கு நான் அனைத்திலும் முதமைக இருக்க வேண்டும் என்பது ஒரு விஷயமாக இருந்தது. இதெல்லாம் சேர்த்து தான் நான் இந்த துறையை தேர்ந்து எடுத்தேன்.

medical filed மீது இருக்கும் myth எப்படி handle செய்கிறீர்கள்?

அணைத்து துறையிலும் இது தான் இருக்கிறது. நாங்கள் ஏதோ காசு பிடுங்கும் கூட்டம் என்று. அது கிடையாது. கண்டிப்பாக நன்கு விசாரித்து தான் செல்வோம். எங்களுக்கும் ethics இருக்கிறது. எந்த patient கு என்ன தேவையோ எது வேண்டுமோ அதை தான் செய்ய சொல்வோம்.

doctor 2.jpg

personal life professional lifeஎப்படி handleசெய்கிறீர்கள்?

Advertisment

Doctor என்றாலே கண்டிப்பாக எந்த நேரத்தில் அவரச தேவை வரும் என்று தெரியாது. நான் கண் மருத்துவர் என்பதினால் எனக்கு வேலை மாலையுடன் முடிந்துவிடும். என் கணவர் general physicianஅவருக்கு கண்டிப்பாக இரவு நேரத்திலும் phone கால் வரும். அதை தெரிந்து கொண்டு தான் கல்யாணம் எல்லாம் செய்வோம். மேலும் கணவரின் ஒத்துழைப்பு இல்லை என்றால் ஏதும் சாத்தியம் இல்லை. எனக்கு அப்படி ஒரு கணவர் கிடைத்ததில் மகிழ்ச்சி. எனக்கு ஏதும் நவரசம் என்றாலும் என்னுடைய பிள்ளையை பார்த்தும், வீடு வேலையில் பங்கு எடுத்துக்கொள்வதிலும் எந்த ஒரு முக சுழிப்பும் இல்லாமல் இருப்பார்.

Health maintain செய்ய tips ?

lifestyle அ மாற்ற வேண்டும். எவ்வளவு physical activity இருக்கிறதோ அவ்வளவு நல்லது. காலை 30 நிமிடம் நடை கூட நல்லது தான். உணவு பழக்கம் கூட கவனிக்க வேண்டும். எதையும் சாப்பிட வேண்டாம் என்று கூற வில்லை பார்த்து உட்கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறேன்.

இந்த துறையை எடுக்க நினைக்கும் பெண்களுக்கு உங்களது advice ?

சீக்கிரம் settle ஆக வேண்டும் என்று நினைத்தால் இந்த துறையை எடுக்காதீர்கள். இதற்கு உங்கள் பொறுமை அவசியம். பொறுமை இருந்தால் மட்டுமே இதை எடுங்கள் என்று உண்மையை கூறி அவரது நேர்காணலை முடித்துக்கொண்டார்.

Suggested Reading:

Advertisment

https://tamil.shethepeople.tv/health/benefits-of-plant-based-protein-1675010

Suggested Reading:

https://tamil.shethepeople.tv/news/types-of-stressors-1674722

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/interview/journey-of-blessy-arts-1674084

Suggested Reading: 

https://tamil.shethepeople.tv/society/how-generation-gap-affects-a-relationship-1673954

Journey of a doctor