Advertisment

அதென்ன "கருப்பு" என்ற வார்த்தையை பயன்படுவது? - Teja Venkatesh | Actor

இந்த கட்டுரையில் Influencer மற்றும் actor Teja Venkatesh அவர்களின் media பயணம் மற்றும் அதில் அவர் கண்ட இன்னல்கள் மற்றும் அவர் எப்படி அதை எதிர் கொண்டார் என்பதையும் எழுதியுள்ளோம். நேர்காணலை கட்டுரை மாற்றியுள்ளோம்.

author-image
Nandhini
New Update
Teja venkatesh

Teja Venkatesh - Actor | Influencer

Journey of Teja Venkatesh

Advertisment

உங்களது  மீடியா பயணம் எப்படி தொடங்கியது?

சிறு வயத்தில் இருந்தே நான் நடிகர் விஜய் அவர்களை பார்த்து தான் mediaகுள் வர வேண்டும் என்று ஆசை பட்டேன். அவரை மிகவும் admire செய்தேன். சிறு வயதில் எனது தந்தை ஏதாவது புதிதாக படம் வெளிவந்தால் உடனே எங்களை அழைத்து செல்வார். இதுவும் எனக்கு media மேல் ஈர்ப்பு வந்ததற்கு காரணம். நான் mediaக்குள் செல்ல வேண்டும் என்று கூறிய பொது அனைவரும் சொல்லும் அதே வாக்கியம் தான்"எதற்கு? ஏன்?" என்று தான் வந்தது . நான் மறுபடி மறுபடி கூறிய போதும் என்னை divert செய்ய என்னை Sports சேர்த்துவிட்டார்கள். volley ball யில் nationals வரை சென்றேன். ஆனாலும் ஏதோ ஒன்று miss ஆகிகொண்டு இருந்தது. உள்மனதில் இது என்னுடைய ஆசை அல்ல என் தந்தைகாக தான் செய்கின்றேன் என்று தான் இருந்தது. பள்ளி பருவம் முடித்த பிறகு நான் B.COMயில் படிக்கச் வேண்டும் என்றேன். ஆனால் அப்பக்காக hotel Management படித்தேன். அவர் என்ன நினைத்தார் என்றால் இந்த நான்கு வருடத்தில் என் மனம் மாறும் என்று ஆனால் மாறாது என்று அவருக்கு தெரியவில்லை.

கல்லூரி முடிந்த பத்தே நாட்களில் அவரிடம் நான் chennaiக்கு கிளம்புகிறேன் என்று கூறிய பொது இன்னும் நீ மறக்கவில்லையா என்று வியப்பாக பார்த்தார். நான் அப்போப்போ தந்தைக்கு தெரியாமல் நிறைய short films செய்து இருக்கேன். அவரிடம் பொய்கூறி collegeயை cut அடித்து அம்மாவுடன் நடிக்க சென்று இருக்கிறேன்.

Advertisment

Teja

அக்காதான் என்னுடைய Biggest support.அவரது support மூலம் என் தந்தை எனக்கு 6 மாதம் கால அவகாசம் கொடுத்தார். ஒரு வேலை ஏதும் நடக்கவில்லை என்றால் கிளம்பி வந்துவிட வேண்டும் என்று கூறினார். நான் chennaiக்கு வந்து கிடைத்த மிக பெரிய break  தான் Blacksheep youtube channel யில் "ஆஹா கல்யாணம்" என்ற webseries. அது அப்படியே Vijay டிவி "கனா காணும் காலங்கள்" முதல் இப்பொது ஒரு படத்தில் முக்கிய கதா பாத்திரம் நடிக்கும் வரை வளர்ந்து உள்ளது.  எல்லாம் அப்பாக்களுக்கும் இருக்கும் அந்த குணம் தான் என் முன் பெரிதாக பாராட்டமாட்டார். ஆனால் அனைவர்க்கும் என்னுடைய விடியோக்களை பகிர்வார் என்று மகிழ்ச்சியாக கூறினார். 

உங்களது struggles யை handle செய்யும் முறை?

Advertisment

சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் இந்த inferiority complex இருக்கிறது. ரொம்ப ஒல்லியாக மற்றும் ரொம்ப நிறம் குறைவாக இருப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை தரும். பள்ளியில் ஆண்டு விழாவில் நான் நன்றாக ஆடினாலும் என்னை பின்னாடி நிக்க வைப்பார்கள் காரணம் என்னுடைய நிறம் தான். எனக்கு மிகவும் பெயர் வாங்கிக்கொடுத்த "ஆஹா கல்யாணம்" வீடியோக்கு கீழ்  நிறைய comments "என்ன முகம் இது, ஏன் இவளை நடிக்க வைக்கிறீர்கள்" போன்று. ஆனால் ஒரு அளவிற்கு மேல் புரிந்து கொண்டது என்னவென்றால் இந்த உலகம், நான் வெற்றி அடைந்தாலும் இந்த பெண் ஏதோ செய்துவிட்டு தான் வெற்றி அடைந்து இருக்கு என்றும் அதே நேரத்தில் நான் தோற்றாலும் ஏதோ ஒன்னு பேசத்தான் போகிறது. என்னை பிடித்தவர்களை நான் focus செய்ய வேண்டும். யார் என்ன சொன்னால் என்ன எனக்கு தெரியும் நான் யாரு? என் வெற்றிக்கு காரணம் என்ன என்று இருந்துவிட்டேன், பழகி விட்டது. என்னதான் ஒரு வருத்தம் உள்ளே இருந்தாலும், இயற்கை என்பது வேற. சிறு வயதில் இதை மாற்ற நிறைய விஷயங்கள் பின்பற்றினேன் ஆனால் இப்போது அதெல்லாம் விட்டுவிட்டு எப்படி இருக்கிறோமோ அப்படியே இருப்போம் என்று எண்ணத்தில் ஓடி கொண்டிருக்கிறேன். என்னிடம் நிறைய பேர் கூறியுள்ளார், "கருப்பாக இருந்தாலும் கலையாக இருக்கிறீர்கள்" என்று. அது எனக்கு பிடிக்காது.  அதென்ன கருப்பு என்ற வார்த்தையை பயன்படுவது? கலையாக இருக்கிறீர்கள் என்று கூறுங்கள். இப்போது எனக்கு அந்த complex கிடையாது.  நான் self love செய்துகொண்டு இருக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

Teja

உங்களது inspiration?

Advertisment

கண்டிப்பாக "அம்மா"தான். என்னுடைய பெரிய support. அம்மாவின் இடத்தில் நான் இருந்திருந்தால் கண்டிப்பாக எனக்கு யாரும் வேண்டாம் என்று எண்ணி தனியாக இருந்து இருப்பேன். ஆனால் அவரோ எனக்காகவும் என் அக்காவும், அவரது வாழ்க்கையை sacrifice செய்து எங்களுக்காக இருக்கிறார். இப்போது ஏதாவது வேண்டுமா என்று கேட்டாலும், நீங்கள் இருவரும் சந்தோசமாக இருக்கிறீர்கள் அல்லவா அது போதும் என்று கூறுவார். அது அவர்கள் செய்யக்கூடாது தான் தெரியும் ஆனாலும் அவர் செய்வது எனக்கு inspire செய்யும். நன்றி என்ற வார்த்தை போதாது, அவருக்கு சுற்றி பார்க்க ஆசை அதனால் எப்போது முடியுமோ அதை அவருக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன்.

அப்பா அடிக்கடி ஒரு விஷயம் சொல்வதுண்டு " வேலை முக்கியம் தான் அதற்காக உனக்காகவும் வீட்டிற்காவும் நேரம் ஒதுக்காமல் இருந்தால் பத்து வருடம் கழித்து பார்த்தால் உனக்கு இந்த நொடி திரும்ப கிடைக்காது. அதனால் முடிந்த வரை வீட்டிற்காக நேரத்தை செலவழி" என்று அதை தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்.

மீடியாவில் ஒரு women யை எப்படி காட்டுகிறார்கள்?

Advertisment

முன்னர் இருந்ததை விட இப்போது பரவாவில்லை. ஆனால் ஒரு சில விஷயங்கள் மனதிற்கு வருத்தத்தை தரும். இந்த instagramலையே நமது வழக்கமான புகைப்படத்தை தாண்டி சிறிது மாறினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. சேலை கட்டினால் நன்றாக இருக்கிறீர்கள். அதுவே modern dress அணிந்தால் இது உங்களுக்கு நன்றாக இல்லை என்று கூறுவது ஏன் என்று தெரியவில்லை. அந்த விஷயம் மற்றும் மாறவில்லை.

ஒரு பெண்ணுக்கு எது important ?

யாரு மீதும் யாரும் dependent ஆக இருக்க கூடாது. finacial independent ஆக இருப்பது தான் ஒரு பெண்ணுக்கு முக்கியம் என்று நான் கருதுவேன்.

Advertisment

Teja

உங்களை பொருத்த வரை எது success ?

இப்பொது கூட ஒரு சில பெண்களால் அவர்கள் எண்ணுவதை செய்ய முடியவில்லை. ஒருவர் நினைப்பதை proper ஆக முழு ஆர்வத்துடன், மற்றும் முழு focus உடன் பின்பற்றுவது முக்கியமாக நிம்மதியாக மற்றும் சந்தோசமாக பின்பற்றுவது தான் என்னை பொறுத்த வரை success.

Advertisment

வருங்கால தோழிகளுக்கு உங்களது piece of advice?

Focus on your dreams always .நடுவில் எந்த ஒரு தடங்கல் வந்தாலும், அதை விட்டுவிடாமல் பின் பற்ற வேண்டும். எடுக்கும் முடிவுகளை நன்கு யோசனை செய்து எடுங்கள். வாழ்க்கை என்பது மிகவும் சிறிது, முடிந்த வரை சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருங்கள் என்று கூறி அவரது நேர்காணலை முடித்துக் கொண்டார்.

முழு epsiode link கீழே உள்ளது. 

Podcast link:

 

 

Suggested Reading: 

Suggested Reading: 

 

 

 

Journey of Teja Venkatesh
Advertisment