Advertisment

உடல் ரீதியாக வரும் கஷ்டங்கள் தான் அதிகம் - Tailors | Interview

புதுசா design தைக்க சொல்றது கூட ஏதோ ஒரு விதத்தில் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் மறுநாளே வேண்டும் என்று கூறுவது தான் பொறுத்துக்கொள்ள முடியாது. உடம்பை வறுபுறுத்தி கொள்வதை தாண்டி ஏற்கனவே கொடுத்தவர்களுக்கு என்ன பதில் சொல்வது? - tailors யிடம் நடத்திய நேர்காணல்

author-image
Nandhini
New Update
 tailor penquuen

Image is used for Representation purposes only.

இவர்கள் நாம் அன்றாட பார்க்கும் நபர்கள். நமக்கு இவரது தேவை, ஏதாவது பண்டிகை காலங்களிலோ அல்லது கல்யாணம் போன்ற சுப தினங்களுக்கு தான் தேவைப்படும். எப்போதாவது இந்த alterationsக்கு தேவைப்படுவார்கள். இதை சொல்ல கடினமாக இருந்தாலும் அதன் உண்மை. அப்படி ஒரு நாள் எனக்கு தெரிந்த tailor அக்காவிடம்  ஒரு சில துணிகளை தைக்க கொடுக்க சென்ற பொது அவரிடம் பேச தொடங்கினேன். நல்லா இருக்கீங்களா? என ஆரம்பித்த உரையாடல் அப்படியே அவரது மனதில் இருக்கும் ஆசை வரை தெரிந்தது.

Advertisment

இவர்களது கடைகள் ஒட்டி ஒட்டி குட்டியாக ஒரு அறை  போல் இருக்கும். அதனால் அனைவருக்கும் ஒருவது கடையில் என்ன நடக்கிறது என்று தெரியும். அனைவரையும் வைத்து எடுக்கெல்லாம் என்று தோன்றியது. 

Life of tailors

வாழ்க்கை முறை எப்படி இருக்கும்?

Advertisment

வீடு ஒரு ஐந்து நிமிடம் தொலைவில் இருக்கும் . ஒரு சிலருக்கு, வீடு மேலே கீழே கடை என்று இருக்கும். அதுவும் ஒரு சில பேர் வீட்டின் வாசலில் ஒரு தையல் machine வைத்து தைத்து கொண்டிருக்கார். வாழ்க்கை காலை ஒரு 11 மணிக்கு தொடங்கினால் இரவு 9 வரை போகும். இதற்கு நடுவில் டி குடிக்க செல்வதும் போவதுமாய் இருக்கும்.  பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு அமர்ந்தால் அவர்கள் tuition எல்லாம் முடித்துவிட்டு வரும் வரை இங்கையே அமர்ந்து இருப்போம். நமது வீடு பக்கத்தில் இருக்கிறது மேலும் நமது நேரத்தில் வேலை செய்வதால் பெரிதாக Pressure இல்லை. இங்க இருக்கும் அனைவரும் சகோதரிகள் போல். ஒருவருக்கு வருகின்ற customer என்ற போட்டி இல்லாமல் அப்படி அப்படியே பிரித்து கொடுப்பது வழக்கம். 

மனரீதியாக நிரைய கஷ்டங்கள் இருந்தாலும் இந்த உடல் ரீதியாக வரும் கஷ்டங்கள் தான் அதிகம். தைக்கும் பொது குனிந்தே இருப்பது முதுகு வலியை தரும். பின் பக்கம் வலிக்கும். மேலும் இந்த முட்டி, முழங்கால் வலி இருக்கும். அந்த வலி normal ஆக இருக்கும் போல் இருக்காது. உயிரை பிடுங்கி எடுக்கும். சுத்தமாக முடியாது ஆனாலும் நம்மை நம்பி வந்தவர்களை ஏமாற்ற கூடாது என்பதற்காக அந்த வலியை பொறுத்துக்கொண்டு இருப்போம்.

tailore.jpg

Advertisment

விடுமுறை நாட்களில் தான் அனைத்து orderகளும் வரும். அதனால் sundayவே கிடையாது எங்களுக்கு. வாரநாட்களில் ஒரு நாள் எடுத்து அதை நாங்கள் compensate பண்ணுவோம். அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் அவ்வளவு தான் எங்கள் வீட்டிற்கு நாங்கள் bye bye கூற வேண்டும். அதெல்லாம் தான் கடினமாக இருக்கும். அவர்களுக்கு இருக்கும் அதே பண்டிகை தான் எங்க எல்லோருக்கும் இருக்கும். அதை புரிந்துக் கொள்ளாமல் உடனே வேணும் என்று இரவு வந்து கொடுத்து அடுத்த நாள் காலையே வேண்டும் என்று நிப்பார்கள் இன்னும் சிலர் அங்கே இருந்து வாங்கி கொண்டு போவோம் என்று நிப்பார்கள். நாங்கள் free ஆக இருந்தால் கண்டிப்பாக செய்துகொடுத்திடுவோம். ஆனால் புரிந்துகொள்ளுங்கள்.

குடும்பம்?

பெரும்பாலோர் கணவர்கள் வேலைக்கு செல்வதுண்டு. வீட்டில் குழந்தை மற்றும் மாமியார், மாமனார் என சின்ன குடும்பம் தான். வீட்டில் இவரது வேலையை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்துகொள்கிறார்கள். சில சமயம் அது பெரிய பிரச்சனையாக மாறும் . முக்கியமாக இந்த பண்டிகை தினத்தில் தான் இந்த பிரச்சனை வரும் வீட்டில் வந்து ஒன்றாக இரு என்று. அது கால போக்கில் சரிஆகிவிடும்.  என்னுடைய சம்பாத்தியம் வீடு செலவிற்கு சரி ஆகி விடும். கணவர் சம்பளம் வாடகை குழந்தை படிப்பு தேவை மருத்துவமனை போன்றவைக்கு சரியாக இருக்கும்.

Advertisment

ஆசை?

அனைவரும் ஒரே ஆசை தான் கூறினார்கள். சொந்தமாக ஒரு கடை நடத்தி இந்த பெரிய கடைகள் செய்வது போல் செய்ய வேண்டும் என்று. எங்களுக்கு நீங்கள் கேட்கும் aari design செய்ய தெரியும் ஆனால் ஆனால் எங்களை நம்பி தர யாரும் முன் வரவில்லை. பெரிய கடையை தான் அணுகிறார்கள். எங்களிடம் வெறும் மேல் தையல் போன்று சிறு சிறு தேவைக்காக வருகிறார்கள். இதிலும் எங்களுக்கு மன திருப்தி இருக்கிறது ஆனால் அதுவும் நாங்கள் experiment செய்ய வேண்டும் அல்லவா என்று அவர்கள்  கூறும் பொது அவர்களிடம் திறமை இருந்தும் அதை வெளிகாட்ட முடியாமல் இருப்பதை நினைத்து வருத்தம் தான்.

 

Advertisment

Suggested Reading: 

Advertisment
Advertisment
Life of tailors
Advertisment