Advertisment

பண்டிகை நாளில் Diet Maintain செய்ய Tips!!

வந்தாச்சே பண்டிகை மாதங்கள். பண்டிகை என்றாலே சந்தோஷம் தான். குடும்பத்தில் அனைவரும் அலுவலத்திற்கு விடுமுறை விட்டு வந்து ஒன்றாக இருந்து மகிழ்ச்சையாக இருக்கும். அதுவும் புது படங்கள் டிவியில் போட்டு அதை ஒன்றாக அமர்ந்து பார்ப்பதும் ஒரே கூத்தாக இருக்கும்.

author-image
Nandhini
New Update
anushka size zero 1

Image is used for Representation Purposes only.

இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் பிடித்த உணவுகளை சமைத்து வைத்து அம்மாக்கள் , பாட்டிகள் எல்லாம் சாப்பிடு சாப்பிடு என்று வறுபுறுத்தி சாப்பிட வைக்கும் தருணமும் இருக்கும். இதில் என்ன இருக்கிறது? வகை வகையான சாப்பாடு வாழை இலையில் பாயாசம் முதல் அப்பளம் வரை ஒரு full கட்டு கட்டிவிட்டு தூங்கும் பொது வரும் சுகம் இருக்கே. யப்பா கோடி ரூபாய் கொடுத்தாலும் வராது. ஆனால் Diet இருபர்களுக்கு இந்த மாறி பண்டிகை நாட்கள் வந்தால் சந்தோச படுவதா? அல்ல கண் முன் வகை வகையாக செய்து விட்டு எப்படி கட்டுப்பாடாக இருக்க முடியும் ? என்ற யோசனையிலையே அந்த பண்டிகை முடிந்து விடும்.

Advertisment

சாப்பிட்டால் உடல் எடை ஏகிரும், சாப்பிடாமல் இருந்தால் வீட்டில் அனைவரும் "ரொம்ப scene போடாத " என்று கிண்டல் செய்யும். இதில் இருந்து எப்படி தப்பிப்பது ? எப்படி விழாக்காலங்களில் நமது உடல் ஏறாமலும் இருக்கும், அதே சமயத்தில் சாப்பிடவும் செய்யலாம் என்பதை இந்த கட்டுரையில் கூறியிருக்கோம்.

Diet during festivals

இந்த விழாக்காலங்களில் பெரும்பாலும் நாம் எடுக்கும் உணவுகள் வறுக்கப்பட்டாவை அல்லது பொறிக்கப்பட்டவையே. உதாரணம் அப்பளம், வடை, வாழைக்காய் வறுவல், மீன், கறி போன்றவை. இதெல்லாம் நிறைய Calories கொண்டவை. இதை சிறிதளவு நீங்கள் உட்கொண்டாலும் வயிறை மந்தமாகும். அதனால் இதை மிக சிறிதாக எடுத்துக்கொண்டு அதை சமம் படுத்த நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம் கீரை போன்றவை எடுத்துக் கொண்டால் அதில் நார்சத்து இருப்பதால், உங்களது சரிமானதிற்கு நன்றாக இருக்கும்.

Advertisment

கண்டிப்பாக நம்மை மீறி ஏதோ ஒரு வகையில் நாம் சாப்பிட்டு விடுவோம் அதை சரி செய்ய உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். தினம் ஒரு மணி நேரம் செய்யும் நீங்கள், விழாக்காலத்தில் ஒன்றரை நேரம் செய்தால் சாப்பிட வடையின் calories யை ஏறிக்கெல்லாம். உடற்பயிற்சி செய்ய முடியாத தருணத்தில் ஒரு 30 நிமிட நடை உதவும்.

ஒரு நாள் cheat day செய்யலாம் என்று அப்படியே பாயும் மனம் நம் அனைவர்க்கும் இருக்கிறது. அப்படி செய்வது தவறு. எப்போதும் போல Portion control மிகவும் அவசியம். காரமான மற்றும் வறுத்த உணவுகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள.. நீங்கள் வீட்டில் நபர்களுக்கு விருந்து செய்யும் போது, ​​உணவை வறுக்காமல்,வேகவைத்த உணவுகள் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளை முயற்சிக்கவும்.

ஒரு வேலை யாராவது வீட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் சிறிது உணவை நீங்கள் உங்கள் உடல் எடையை பராமரிக்க உண்ணும் சாப்பாடை சாப்புடுங்கள். இதன் விளைவு நீங்கள் உணவு உண்ணும் பொழுது ஏற்கனவே சாப்பிட்டதால் வயிறு full ஆகியிருக்கும் அதனால் இந்த உணவை அளவு கம்மியாக எடுத்துப்பீர். இந்த trick follow செய்து பாருங்கள்.

Advertisment

நம் மனதிற்கு பசிக்கும் தாகத்திற்கு வித்தியாசம் தெரியாது. பசித்தாலும் சாப்பிடச்சொல்லும் தாக்கம் எடுத்தாலும் சாப்பிட சொல்லும். அதான் ஆய்வு என்ன கூறுகிறது என்றால், உங்களுக்கு முதலில் பசி எடுப்பதுபோல் இருந்தால் தண்ணீர் குடியுங்கள். உங்களது பசி அடங்கினால் அது தாக்கம், அதையும் மீறி உங்களுக்கு பசித்தால் அது தான் பசி என்று . அதனால் சாப்பிடும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிட சென்றால் நீங்கள் automaticஆ உணவை குறைவாக தான் சாப்பிடுவீர்கள். 

இந்த விழாக்களில் நிறைய நேரம் செலவிடுவதால் நேரம் போவதே தெரியாமல் இருக்கும். அப்போது பார்த்தீர்கள் என்றால் இரவு உணவையே ஒன்பது மற்றும் பத்து மணிபோல் தான் சாப்பிடுவோம். இதை தவிர்க்க முடிந்தால் எப்போதும் சாப்பிடும் உணவு நேரம் அதாவது ஏழு மணிக்கு சாப்பிடுவதை போல் சாப்பிடுங்கள். அந்த நேரத்தில் உங்களால் சாப்பிட முடியவில்லை என்றால் தண்ணீரை குடித்து அன்று இரவு உணவை தவிர்த்து விடுங்கள். மேலும் சக்கரை திண்பண்டங்களை தவிர்த்து விடுங்கள்.இதை எதிர்கொள்வோம்.

உடல் எடையை குறைக்க இது சிறந்த நேரம் அல்ல, ஒவ்வொரு நாளும் யாராவது உங்களுக்கு இந்த மாறி வட பாயாசம் வழங்கும்போது அல்ல. உங்கள் தற்போதைய எடையை பராமரிப்பதை நோக்கமாகக் கொள்ளுங்கள் - அதுதான் இப்போது சாத்தியமான ஒரே பணி!

Advertisment

 

Suggested Reading: 

Advertisment
Advertisment
Advertisment
Diet during festivals
Advertisment