கோவாவை சேர்ந்த யாசிகா சோப்ரா பிரபலமான ஒரு விமான நிறுவனத்தில் விமான பணி பெண்ணாக ஆக பணியாற்றி வந்தார். ஊரடங்கு போடப்பட்ட சில வாரங்களில் அவர் வேலையில்லாமல் இருப்பதையும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் யோசிக்க ஆரம்பித்தார். அதே நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக அவர் தாயும் இறந்து விட்டார். இது போன்ற சவால்களை அவர் சந்தித்துக் கொண்டிருந்தபோது அதிலிருந்து தைரியமாக எழுந்து வர வேண்டும் என்று நினைத்தார். அவரின் தாய் இறந்த சில மாதங்களுக்குப் பிறகு அவர் Circa என்ற பெயரில் ஒரு ஊறுகாய் தொழிலை தாயின் நினைவாக ஆரம்பித்தார்.
"நான் என் தாயின் கனவை நிறைவேற்றும் வகையில் ஆரோக்கியமான ஊறுகாயையும், சுவையூட்டிகளையும் தயாரிக்க நினைத்தேன். அவர் ஒரு புத்தகம் முழுக்க அவரின் ஊறுகாய் மற்றும் சுவையோட்டிகள் செய்யும் செய் முறையை எழுதி வைத்திருந்தார். அதை தான் நான் இப்பொழுது Circa பொருட்களை செய்ய பயன்படுத்துகிறேன்" என்று சோப்ரா கூறுகிறார்
தொழில் முனைவு பயணம்:
Circa என்பது ஹிந்தி வார்த்தையான Sirka என்பதிலிருந்து வந்தது. அதற்கு அர்த்தம் வினிகர். "நான்விற்கும் அனைத்து பொருளும் கையால் செய்யப்பட்டது மற்றும் 100% சைவமாகும். நான் எனது பொருட்கள் புதிதாக சுத்தமாக இருப்பதையும் மற்றும் அவை உள்நாட்டில் பெறப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்கிறேன்" என்று கூறுகிறார்.
நான் செய்த முதல் சில பொருளை நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் பகிர்ந்து கொடுத்தேன். அவர்களிடமிருந்து நேர்மறையான பதில் வந்தவுடன், இந்த யோசனையை பெரிய அளவில் எடுத்து செல்லலாம் என்பதை உறுதி செய்து கொண்டேன்.
அது சுலபமாக இருந்ததா? "நான் வணிகம் செய்யும் குடும்பத்தில் இருந்து வரவில்லை. அதனால் வணிகம் பற்றியும், அதை எப்படி கையாள்வது, பணத்தை எப்படி கையாள்வது என்பதெல்லாம் எனக்கு தெரியாத ஒன்றாக இருந்தது. ஆனால் நான் சவால்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தேன் மற்றும் கற்றுக் கொள்ளலாம் என நம்பினேன்" என்று கூறுகிறார். அவர் என்ன செய்ய வேண்டும் என்பதில் உறுதியாகவும், ஒரு தீர்மானத்துடனும் இருந்ததால் திரும்பி அவரை விமான பணிப்பெண் வேலைக்கு அழைத்த போது அவர் "நான் ஒரு தொழில் முனைவராக இருக்க விரும்புகிறேன்" என்று கூறிவிட்டார்.
சாதித்த விஷயங்கள்:
சாதனைகள் பற்றி பேசும்பொழுது Circa ஆரம்பித்ததில் இருந்து ஒவ்வொரு நாளும் மிக முக்கியமான நாளாக உள்ளது என்று கூறுகிறார். "ஆரம்பத்தில் நாங்கள் இரு பொருட்களை தான் விற்று வந்தேன். ஆனால், தற்பொழுது பல வகையான ஊறுகாய்களை விற்க தொடங்கியுள்ளேன். இந்தப் பயணம் சுவாரசியமாக உள்ளது" என்று கூறுகிறார்.
அவர் மேலும் முழு பாராட்டையும் Circaவில் உள்ள இரண்டு பெண்மணிகளுக்கு அர்ப்பணிக்கிறார். அவர்கள் தான் அனைத்தையும் பார்த்துக் கொள்கின்றனர். எப்படி இவ்வளவு சிறிய ஒரு குழுவை வைத்து அவர் அனைத்தையும் பார்த்துக் கொள்கிறார்? "Google Docs அனைத்து விவரத்தையும் ஒரே இடத்தில் வைத்திருக்க உதவுகிறது. அதனின் பயன்பாடு தனித்துவமாகவும், சுலபமாகவும் இருப்பது மட்டுமின்றி மனித தவறுகள் ஏற்படுவதை அது குறைகிறது" என்ற விளக்குகிறார்.
சோப்ரா ஆரம்பத்தில் 20 ஆயிரம் ரூபாயை முதலீடாக செலுத்தியுள்ளார் தற்போது அவருக்கு 700 முதல் 900 ஆடர்கள் மாதம் வருகிறது. அது மட்டும் இன்றி மாதம் 80 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பெறுகிறார்.
கற்றுக்கொண்ட பாடங்கள்:
யாசிகா தொழில் முனைவு பற்றி நிறைய கற்றுக் கொண்டுள்ளார். "தொழில் முனைவராக விரும்பும் ஒருவர் ஒரு குண்டும் குழியுமான பெரிய பயணத்திற்கு தயாராக இருக்க வேண்டும். உடனே பலன்களை பெற வேண்டும் என நினைக்க கூடாது. கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் தினம்தோறும் அதில் போட வேண்டும்" என்று பகிர்ந்து கொள்கிறார். அதனுடன் உங்கள் மீதும், உங்களின் பொருள் மீதும் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வையுங்கள் என்றும் கூறுகிறார்.
எதிர்காலத் திட்டங்கள்:
யாசிகா சமூகம் அவருக்கு கொடுப்பதை திருப்பி சமூகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளார். இந்த நோக்கத்திற்காக அவர் பல பெண்களை தனது இந்த பயணத்தில் சேர்த்துக் கொண்டு அவர்களுக்கு வேலை அளிக்க நினைப்பதாக கூறியுள்ளார். மேலும் எதிர்காலத்தில் அவரின் ப்ரொடக்ஷன் யூனிட்டையும், அதற்கான பொருட்களை சொந்தமாக விளைவிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறார்.
Suggested Reading: இந்திய கலைகளுக்கு உயிர் தருகிறார் ஜக்ஜ்யோத்
Suggested Reading: கைவினைப் பொருட்களுடன் சேர்ந்த கவிதைகள்: மாதுரி பலோடி