Passion-யை பின் தொடர சில குறிப்புகள் கொடுங்கள்?
Passion-யை பின் தொடர வேண்டும் என்றால் முதலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள் யார் சொல்வதையும் கேட்கக்கூடாது. நம்முடைய passion என்னவோ அதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்கள் நம்மை மாற்ற நினைத்தாலும் நாம் மாறிவிடக்கூடாது. நமது passion-இல் தான் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். முதலில் அனைவரும் நம்மிடம் வந்து "இதெல்லாம் வேண்டாம் விட்டுவிடு" என்று தான் சொல்லுவார்கள். அதற்கு நாம் சரி விட்டு விடலாம் என்று நினைத்தால் அவ்வளவுதான் அதன் பிறகு வாழ்நாள் முழுவதும் அதை ஏன் நாம் செய்யவில்லை என்று யோசித்து கொண்டே இருப்போம்.
நான் இப்பொழுது இதை செய்வதற்கே உடல்நிலை கொஞ்சம் சரியாக இருந்திருந்தால் இதை முன்பே செய்திருக்கலாம் என்று யோசித்து இருக்கிறேன். அதனால் நிச்சயமாக போக போக நாம் ஏன் அதை செய்யவில்லை என்று தோன்றி கொண்டே இருக்கும். சில ஆண்டுகளுக்குப் பிறகு இதை செய்வதற்கு நமக்கு பிடித்ததை செய்திருக்கலாமே என்று தோன்றும். அதற்காக நீங்கள் Passion-யை மிகவும் கண்டிப்பாக பின் தொடர வேண்டும். ஒரு வீடியோ செய்தால் போதும் அப்படி நினைத்தாவது அதை செய்ய வேண்டும். ஒரு வீடியோவாவது நாம் செய்து அதை பதிவிட வேண்டும் என்று ஒரு இலக்கு இருக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக நான் யாரிடமும் நான் இதை செய்யப் போகிறேன் என்று சொல்ல மாட்டேன். எனது அறையில் நான் கதவை சாத்திக்கொண்டு வீடியோக்கள் செய்து கொண்டிருப்பேன். யாருக்குமே முதலில் நான் இதை தான் செய்கிறேன் என்று தெரியாது. கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கே இன்ஸ்டாகிராமில் எனது வீடியோ வரும் பொழுது தான் கண்டுபிடித்தார்கள். "ஓ இத தான் நீ பண்ணிட்டு இருக்கியா நானும் ரொம்ப நாளா இவ ஏதோ பண்ணிட்டு இருக்காளே அப்படின்னு நினைச்சிட்டு இருந்தேன்" என்று என் அண்ணி சொன்னார். ஏன்னா நான் முதலில் சொல்லவில்லை. சொன்னால் ஏதாவது சொல்வார்கள் என்று நான் சொல்லவில்லை.
முக்கியமாக எனது தந்தையிடம் நான் எதுவும் சொல்லவில்லை. ஐம்பதாயிரம் பாலோவர்ஸ்(followers) வந்த பிறகு தான் என் தந்தைக்கு தெரியும். அவர் என்னை ஆதரிப்பாரா என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் அவருக்கு இதெல்லாம் பிடிக்காது என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். எனது அத்தை எனது வீடியோவை பார்த்து சிரித்து விட்டு எனது தந்தையிடம் உன் பொண்ணு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கா என்று சொல்லி விட்டார். "நல்லா இருக்கு பாத்தியா அத நான் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டு இருந்தேன்" அப்படின்னு சொன்னாங்க. எனது தந்தையும் என்னிடம் வந்து "நீ ஏதோ வீடியோ செஞ்சிருக்கியாமே" என்று கேட்க ஆரம்பித்தார். அப்பொழுதுதான் அய்யோ மாட்டிக்கிட்டோம் என்று நினைத்து அந்த வீடியோவை மட்டும் அனுப்பி விட்டேன். அதை அவர் பார்த்துவிட்டு நல்லா இருக்கே, சூப்பரா இருக்கே இந்த மாதிரி எல்லாம் வேஷம் போட்டு பண்ற என்று சொல்லி அதை பார்த்த உடனே WhatsApp-இல் status போட ஆரம்பித்தார். அதன் பிறகு தான் எனக்கு இவ்வளவு followers இருக்கிறார்கள் என்றெல்லாம் காண்பித்தேன். அதற்கு அவர் பரவாயில்லையே இதெல்லாம் என்னிடம் சொல்லிட்டு செய்திருக்கலாமே என்று கேட்டார். "எனக்கு தெரியாதுப்பா உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும் என்று எனக்கு தெரியவில்லை" என்று சொன்னேன்.
நான் மியூசிக்(music) சம்பந்தமான வீடியோக்களை தான் பதிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால் அதை மட்டுமே பார்த்தால் அனைவருக்கும் போர் அடித்து விடும் என்று எண்ணி எனக்கு பிடித்ததையும் போடுகிறேன் என்று தான் இதை ஆரம்பித்தேன். வீட்டிலும் நீ இதையே செய் என்று சொல்லி விட்டார்கள்.
நீங்கள் ஆரம்பத்திலேயே வீட்டில் சொல்லி இருந்தால் இந்த ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்குமா?
ஆரம்பத்தில் இதை நான் செய்ய போகிறேன் என்று சொல்லி இருந்தால் ஆதரித்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஏனென்றால், ஒரு விஷயம் செய்வதற்கு முன்பு யாரிடமாவது சொன்னால் அது நடக்காது என்பதை நம்மும் ஒரு பெண்தான் நான். யாரிடமும் சொல்லாமல் நாம் செய்து விட வேண்டும். ஏனென்றால் நாம் சொன்னால் அதை செய்யவே மாட்டோம். அதனால் செய்த பிறகு மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளலாம்.
உங்களின் passion-யை நீங்கள் பின் தொடருங்கள். எதையுமே எதிர்பார்க்காதீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு 100 வீடியோக்களை பதிவிடுங்கள். உங்கள் நண்பர்களிடம், குடும்பத்தினரிடம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களுக்கு நீங்கள் செய்வது மிகவும் பிடித்திருந்தால் பதிவிடுங்கள். உங்களுக்கே ஒரு மாதிரி நல்லா இல்லை என்று தோன்றினால் அதை பதிவிடாதீர்கள். அப்படி இருப்பது தான் சிறந்தது.
ரக்ஷனா ஆனந்த் அவரின் டிஜிட்டல் பயணம் பற்றியும் மேலும் பல பயனுள்ள தகவல்கள் பற்றியும் Thuglife Thalaivi என்ற podcast-இல் பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click here: Women should start supporting other women - Rakshana Anand | Content Creator
Suggested Reading: வாழ்க்கையின் நோக்கத்தை எப்படி கண்டுபிடிப்பது - Life Coach Priya
Suggested Reading: கண்டிப்பாக குழந்தை வளர்ப்பதினால் ஏற்படும் விளைவுகள்-Psychologist Aisha
Suggested Reading: Celebrity Designer Abarnaவின் வாழ்க்கை பயணம்
Suggested Reading: பெண்கள் பயணம் செல்லும் பொழுது இது இல்லாமல் செல்லக்கூடாது-Subha Maastha