Advertisment

கன்டென்ட் கிரியேட் செய்ய நினைப்பவர்களுக்கான சில குறிப்புகள் - Influencer Srinidhi

தனித்துவமான கன்டென்டுகளை உருவாக்கி தனது பேஷனை பாலோ செய்வது மட்டுமில்லாமல் அதன் மூலம் சமூகத்திலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி. அவர் Thuglife என்ற பாட்காஸ்டிர்காக பகிர்ந்து கொண்ட விஷயங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
18 Apr 2023
கன்டென்ட் கிரியேட் செய்ய நினைப்பவர்களுக்கான சில குறிப்புகள் - Influencer Srinidhi

Images of Srinidhi

Style with Srinidhi என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் மக்களுக்கு ஸ்டைலிங் டிப்ஸ் தருவதோடு சமூக பாகுபாட்டினையும், பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் தனது வீடியோக்களின் மூலம் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி. அவருடைய இந்த பயணம் எப்படி தொடங்கியது என்பது முதல் பல பயனுள்ள தகவல்களையும் Thuglife Thalaivi என்ற podcastஇல் அவர் பகிர்ந்துள்ளார். அவர் கூறிய சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

கன்டென்ட் கிரியேட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் என்ன டிப்ஸ் கொடுப்பீர்கள்?

முதலில் உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். இது செய்தால்தான் ரீச் ஆகும், அது செய்தால்தான் ரீச் ஆகும் என்று எண்ணாமல் உங்களுக்கு எது பிடிக்கிறது என்று தெரிந்து கொண்டு அதை செய்தாலே உங்கள் டார்கெட் ஆடியன்ஸை ரீச் செய்யலாம். ஆரம்பத்தில் collaboration பற்றி பெரிதாக எதுவும் யோசிக்காதீர்கள். உங்களுக்கான ஒரு பிளாட்பார்மை(platform) உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கான ஒரு ஆடியன்ஸை(audience) நீங்கள் உருவாக்க வேண்டும் மற்றதெல்லாம் தானாக நடக்கும்.

உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். ஏனென்றால் இதை நீண்ட நாட்களுக்கு செய்யப் போவதால் உங்களுக்கு பிடித்ததை செய்ய வேண்டும். நான் முதலில் ITயில் வேலை பார்த்தேன். எனக்கு அங்கு சேர்ந்த உடனே வேலை செய்ய பிடிக்கவில்லை என்று தெரிந்தது. ஆனால் ஒரு வருடம் அக்ரீமெண்ட்(agreement) இருந்ததால் நான் ஒரு வருடம் முடிந்த உடனே ரிசைன் செய்து விட்டேன். இப்பொழுது நான் செய்யும் வேலை எனக்கு பிடித்திருக்கிறது. அதைப்போல் உங்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை பாருங்கள்.

Advertisment

srinidhi fashion influencer

இதிலிருந்து என்ன நமக்கு கிடைக்கும் என்று பார்க்காமல் நாம் அதை செய்து கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் அதற்கான ரிசல்ட் வரும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கண்சிஸ்டெண்சி(consistency). சில சமயம் நமக்கு இதை விட்டு விடலாம் என்று தோணும். ஆனால் இந்த நேரத்தை மட்டும் நீங்கள் கடந்து விட்டீர்கள் என்றால் இன்னும் நல்ல பலன்களை சந்திப்பீர்கள்.

ஒருவர் தனது பேஷனை(passion) செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

Advertisment

நீங்கள் உங்கள் பேஷனை பாலோ செய்ய நினைத்தால் மற்றவர்கள் சொல்லுவதை கேட்காதீர்கள். உங்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்யுங்கள். இதெல்லாம் பண்ண தேவையில்லை, இதெல்லாம் சக்சஸ்(success) ஆகாது இந்த மாதிரி நிறைய விஷயங்களை சொல்லுவார்கள். அது வெற்றியடையவில்லை என்றாலும் பரவாயில்லை அதை நாம் முயற்சித்துப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், முதலில்  நாம் முயற்சிகளை எடுக்க வேண்டும். அப்பொழுதுதான் அது சரியாக முடியவில்லை என்றாலும் நாம் முயற்சித்து பார்த்தோம் என்ற திருப்தி ஆவது இருக்கும். மற்றவர்கள் சொல்வதற்காக நாம் செய்யாமல் இருக்க கூடாது. நமக்கு இருப்பது ஒரே ஒரு வாழ்க்கை தான், அந்த வாழ்க்கையில் உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை நீங்கள் தான் செய்ய வேண்டும்.

tamil fashion instagram influncer

பெண்கள் பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு முக்கியம்?

Advertisment

ஒருவர் பணரீதியாக சுதந்திரமாக இருந்தால் மட்டும்தான் அதனுடைய முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும். என் தோழிகள் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் அல்லது நான் அவர்களிடம் சொல்லி இருக்கிறேன் "ஏன், நல்லா தான் இருக்கு கணவர் சம்பாதிக்கிறார் இல்லையென்றால் அப்பா, அம்மா சம்பாதிக்கிறார்கள், நமக்கு செலவுக்கு பணம் தருகிறார்கள், வாழ்க்கை நன்றாக தானே இருக்கிறது. நான் ஏன் கஷ்டப்பட்டு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கும்".

ஆனால் ஒரு முறை நீங்கள் பணரீதியாக சுதந்திரமாக இருந்து விட்டீர்கள் என்றால் அந்த சுதந்திரம் உங்களுக்கு தரக்கூடிய பவர் மற்றும் சுதந்திரத்தை பணரீதியாக சுதந்திரமாக இருந்தால் மட்டும்தான் புரிந்து கொள்ள முடியும். இப்பொழுது நான் பணரீதியாக சுதந்திரமாக இருக்கிறேன். அதனால் எனக்கு பிடித்ததை நான் வாங்கிக் கொள்வேன். யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டியது இல்லை. எனது தாய் மற்றும் பாட்டிக்கு நான் பணம் அனுப்புகிறேன், அதை நான் யாரிடமும் கேட்கத் தேவையில்லை. என் பையனுக்கு பிடித்தது எல்லாம் நான் வாங்கி தருகிறேன். நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நாம் தான் பணரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும்.

ஸ்ரீநிதி இது போன்ற பல தகவல்களை Thuglife Thalaivi என்ற podcastஇல் பகிர்ந்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Breaking stereotypes along with styling tips - Srinidhi | Instagram Influencer | Style with Srinidhi

Advertisment
Advertisment