பயணங்கள் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்ட சுபா தனது வீட்டில் உள்ள பல தடைகளை தாண்டி பயணம் செய்து வருகிறார். வார நாட்களில் வேலை செய்து கொண்டு வார இறுதியில் தனது பயணங்களை மேற்கொள்ளும் சுபா SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் நேர மேலாண்மை பற்றியும் நமக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
நீங்கள் வேலை செய்து கொண்டே வீடியோக்களும் பதிவிடுவதால் நேர மேலாண்மை(time management) பற்றி சில குறிப்புகளை கொடுங்கள்
"நான் காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலை செய்வேன். வீட்டு வேலை செய்யவில்லை என்றால் எனது வீட்டில் திட்டுவார்கள். முதலில் என்னவாக இருந்தாலும் நமது வேலையை நாம் முடித்துக் கொள்ள வேண்டும். நான் இன்ஸ்டிட்யூட்டில்(institute) வேலை பார்ப்பதால் எனக்கு மாணவர்கள் தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நான் கரெக்க்ஷன் செய்ய வேண்டும். ஏதாவது சந்தேகங்கள் கேட்டால் அதை தீர்த்து வைக்க வேண்டும். அப்பொழுது இடை இடையே எனக்கு கொஞ்சம் நேரம் கிடைக்கும். அப்பொழுதுதான் நான் வீடியோக்களை எடிட்(edit) செய்வேன்.
கொஞ்ச நேரத்தில் சிறிது சிறிதாக எடிட் செய்வேன். அதை முழுமையாக செய்து முடிக்கும் அளவிற்கு நேரம் கிடைக்காது. அதேபோல் இரவு நேரங்களில் வாய்ஸ் ரெக்கார்ட்(voice record) செய்து விடுவேன். அல்லது தூங்கும் நேரங்களில் கொஞ்சம் நேரம் இருந்தால் அப்பொழுதும் எடிட் செய்வேன். Institute-ஐ முழு நேரமாக நான் பார்த்துக் கொள்வதால் இரண்டையும் கிடைக்கும் நேரத்தில் தான் என்னால் செய்து முடிக்க முடியும்.
யாருமே நமக்கு எக்ஸ்ட்ரா(extra) நேரம் கொடுக்க மாட்டார்கள். அதை நாம் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அம்மா என்னை எதற்காவது கூப்பிட்டால் என்னுடைய நேரத்தை நான் கொடுக்க மாட்டேன். எனக்கான நேரத்தை நான் எடுத்துக் கொள்வேன். அனைவருமே அவர்களுக்கென ஒரு நல்ல distraction வைத்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல் நமக்கு ஒரு வேலை இருக்கிறது என்றால் அதை முடிக்காமல் எழுந்திருக்கக் கூடாது. ஒரு விஷயத்தை பாதியில் விட்டு விட்டால் கண்டிப்பாக அதை நாம் செய்யவே மாட்டோம். எனக்கும் அந்த பழக்கம் இருக்கிறது. நான் ஆரி ஒர்க், டெய்லரிங் கற்றுக் கொண்டேன். ஆனால் அதை கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொண்டு அப்படியே விட்டு விட்டேன். நேரம் மேலாண்மை என்பது எனக்குமே தேவைப்படுகிறது.
நேரம் என்பது பெண்களுக்கு பெரிதாக கிடையாது. ஆண்களெல்லாம் உனக்கு என்ன நீ சும்மா தான வீட்ல இருக்க என்று சொல்லுவார்கள். ஆனால் பெண்கள் வீட்டில் எவ்ளோ வேலை செய்கிறார்கள் என்பது அவர்களுக்கு தான் தெரியும். அதனால் நமக்கு கிடைக்கும் நேரத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்"
ஒருவர் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?
உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கிறது என்றால் எல்லார் இடமும் அதை சொல்ல ஆரம்பியுங்கள். இப்பொழுது உங்களுக்கு பைக் ஓட்ட பிடிக்கும் என்றால் நீங்கள் பார்க்கும் எல்லோரிடமும் எனக்கு பைக் ஓட்ட பிடிக்கும் என்று சொல்ல வேண்டும். அப்பொழுது தான் யாராவது ஒருவனுக்காவது அது காதில் விழுந்து உங்களுக்காக நிற்பார்கள். நீங்கள் சொல்வதை யாருமே கேட்கவில்லை என்று நிறுத்தி விட்டீர்கள் என்றால் அதன் பிறகு அந்த கனவு எப்பொழுதுமே நடக்காது. நாம் தான் அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
நமக்கு பைக் ஓட்ட வேண்டும் என்ற ஆசை இருந்தால் நாம் தான் ஒரு நான்கு பேரிடம் கேட்க வேண்டும். அவர்கள் உங்களை அசிங்கப்படுத்துகிறார்களா பரவாயில்லை, இன்னொரு நாலு பேரிடம் கேளுங்கள். ஆனால் நாம் இறங்கி அதை செய்தால் மட்டும் தான் அது நடக்கும். மற்றபடி யாரும் உங்களிடம் வந்து உனக்கு இது வேண்டுமா நான் செய்து தருகிறேன். நான் உனக்கு உதவி செய்கிறேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.
Thuglife Thalaivi என்ற podcast-இல் சுபா தனது பயணங்கள் பற்றியும் மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click Here: Tips for women to travel - Subha Maastha | Travel Vlogger | Influencer
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content