ஒரு புத்தகத்தை எழுதி வெளியிடுவது சாதாரணமான விஷயம் அல்ல. பலருக்கு எழுத பிடிக்கும், ஆனால் அதை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் இருப்பார்கள். அபிலாஷினியிடம் இதைப் பற்றி கேட்ட பொழுது அவர் புதிதாக எழுத்தாளராக வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக சில பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
நம் எல்லோராலும் நினைத்த உடனே ஒரு புத்தகத்தை எழுதி விட முடியாது. நான் ஒரு மூன்று புத்தகங்களுக்கு co-author ஆக எழுதியிருக்கிறேன். ஒரு புத்தகத்தை எழுதுவதற்காக ஒரு வருடமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும் எழுதி முடிக்க முடியவில்லை. மிகவும் கம்மியான பக்கங்கள் தான் நான் எழுத முயற்சிக்கிறேன். அதனால் முதலில் புத்தகம் என்பதே நமது இலக்கு கிடையாது. நீங்கள் எழுதுவதை ஸ்டேட்டஸ்(status) போடுவதற்காக அமைப்பதாக கூட இருக்கட்டும் சின்ன சின்னதாக எழுத ஆரம்பியுங்கள். நீங்கள் சொல்லும் விஷயங்களை நீங்கள் முதலில் நம்புங்கள். அப்பொழுது தான் அதை பதிவிடுவதற்கு உங்களுக்கு தைரியம் வரும்.
உதாரணத்திற்கு, போன வாரம் இன்ஸ்டாகிராமில் "If you are not comfortable with sex you have all rights to tell that to your partner. எப்பயுமே ஒரு பொண்ணு பார்ட்னருக்கு(partner) என்ன விருப்பமோ அதன்படி தான் போகணும்னு அவசியம் கிடையாது" என்று பதிவிட்டேன். இதை நான் நம்பவில்லை என்றால் என்னால் அதை எழுதி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்க முடியாது. அதனால் முதலில் நீங்கள் என்ன எழுதுகிறீர்களோ, என்ன சொல்கிறீர்களோ அதை நம்ப வேண்டும். இப்பொழுது IPL மேட்ச் பற்றி நான் பதிவிட்டால் எனக்கு நிறைய லைக் வரும், நிறைய கமெண்ட் வரும் என்று ட்ரெண்டோடு(trend) போவதை இந்த தலைமுறையினர் முதலில் நிறுத்த வேண்டும். நீங்கள் ட்ரெண்டுக்கு(trend) எதிராக கூட இருக்கலாம். ஆனால், நீங்கள் நம்புவதை பற்றி பேசுவதற்கு தைரியமாக இருங்கள். இதுதான் என்னை பொறுத்தவரை முதல் படி.
நான் எடுத்த உடனே புத்தகம் எழுதவில்லை, கவிதைகள் எழுதவில்லை. மிகவும் போர் அடிக்கிறது என்று கணக்கு வகுப்பில் ஹைக்கூ மாதிரி எழுத ஆரம்பித்தேன். சும்மா TR மாதிரி ரைமிங்காக ஒவ்வொரு வரியும் முடியும்படி எழுதினேன். எனது நண்பர்களுக்கு அனுப்பினேன். அவர்கள் பரவாயில்லையே இந்த வார்த்தைகள் எல்லாம் மேட்ச் ஆகுது என்று சொன்ன கான்ஃபிடன்ஸ்(confidence) தான் இன்று நான் எவ்வளவு எழுதுகிறேன்.
நீங்கள் உங்களை சுற்றி நேர்மறையான மனிதர்களை உருவாக்குங்கள். நீ எழுதுவதெல்லாம் நன்றாக இருக்கிறது, ஆனால் இதை உன்னால் முழுநேர வேலையாக எடுத்துக் கொள்ள முடியாது என்று யாராவது சொன்னால் முதலில் அவர்களுடன் நட்புக் கொள்வதை நிறுத்துங்கள். நீங்கள் எழுதுவது சின்னதாக இருந்தாலும் அதை ஆதரிப்பவர்கள் உங்களை சுற்றி இருக்க வேண்டும். நீ இது எழுதுவதால் உனக்கு என்ன கிடைக்கப் போகுது, நான் இதெல்லாம் பண்ணுவேன் தெரியுமா என்று யாராவது பேசினால் நாளையிலிருந்து அவர்களுடன் பேசுவதையும் நிறுத்தி விடுங்கள் இல்லை என்றால் அவர்களுடன் இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களுக்கு ஒரு விஷயம் மகிழ்ச்சி அளிக்கிறது என்றால் அதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் எழுதுவதை முதலில் நீங்கள் நம்புங்கள்.
இரண்டாவதாக நான் முதலில் எல்லோரையும் co-author ஆக எழுத சொல்லுவேன். பப்ளிகேஷன் கம்பெனி நமக்கு ஒரு தலைப்பு கொடுத்து விடுவார்கள், இந்தியாவில் இருந்து பத்து பேர் ஒவ்வொரு தலைப்பை எழுதுவார்கள். உங்களுக்கு கொடுத்திருக்கும் தலைப்பிற்கு மூன்று பக்கங்கள் கொடுப்பார்கள். அதை நீங்கள் எழுதி ஒழுங்காக கம்பையில்(compile) செய்து அவர்களுக்கு கொடுத்து விட்டீர்கள் என்றால் எல்லாருடைய தலைப்புகளும் சேர்ந்ததற்குப் பின்னால் அதை ஒரு புத்தகமாக வெளியிடுவார்கள். அதனால், ஒரு நூறு பக்கம் எழுதும் அளவிற்கு நம்மிடம் தைரியம் இல்லை என்றாலும் ஒரு மூன்று பக்கம் எழுதுவதற்காவது கண்டெண்டும் இருக்கும் தைரியமும் இருக்கும். அப்படி முதலில் எழுத ஆரம்பியுங்கள்.
இன்ஸ்டாகிராமில் பப்ளிகேஷன்ஸ்(publications) நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்கள் பப்ளிகேஷன் என்று தேடினாலே கிடைக்கும். இன்னும் நிறைய தகவல் வேண்டுமென்றால் kannammas_content என்ற என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு மெசேஜ் அனுப்பி கேட்டீர்கள் என்றால் அந்த பப்ளிகேஷன் பெயரையும் நான் உங்களுக்கு சொல்கிறேன். அவர்களுக்கு நீங்கள் மெசேஜ் செய்து என்ன புத்தகம் நீங்கள் compile செய்து கொண்டிருக்கிறீர்கள், என்ன தலைப்பு, நான் எவ்வளவு அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பப்ளிகேஷனுக்கும் இது போன்ற விஷயங்கள் வேறுபடும். சிலர் நீங்கள் எனக்கு 80 ரூபாய் கொடுத்தால் போதும் நீங்கள் எழுதிய புத்தகம் உங்களுக்கு e-book ஆக கிடைக்கும் என்று சொல்லுவார்கள். நீங்கள் இன்னும் நிறைய பணம் கட்டினீர்கள் என்றால் புத்தகங்கள் உங்களுக்கு ஹாட் காபியாக(hard copy) கிடைக்கும். சிலர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி வைத்து புத்தகங்களை வெளியிடுவார்கள். இந்த மாதிரி நிறைய பப்ளிகேஷன் இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் நிறைய எழுத்தாளர்களை சந்திக்க முடியும்.
பப்ளிகேஷனுக்கு நீங்கள் இன்ஸ்டாகிராமில் மெசேஜ் அனுப்பினீர்கள் என்றால் அப்பொழுது என்ன புத்தகம் இருக்கிறது, என்ன தலைப்பு இருக்கிறது, என்ன மொழியில் வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பிக்கலாம். எழுதி அவர்களிடம் ஒப்படைத்த பிறகு அவர்கள் அதை படித்து பார்த்து அதை புத்தகமாக வெளியிடுவார்கள். நீங்களும் ஒரு எழுத்தாளராகலாம்"
இதுபோன்று பல பயனுள்ள தகவல்களை Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில் அபிலாஷினி பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click Here: Clear view of feminism and stereotypes in the society - Abilashni Kamakshi | Kannammas_content | Author
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content