IB Makeover ஸ்டுடியோவில் நிறுவனர் மஞ்சு பாரதி தனது பேஷனுக்காக(passion) தனது எட்டு வருட MNC வேலையை விட்டு முழு நேரமாக தனது அழகு கலை தொழிலில் கவனம் செலுத்தினார். அவரிடம் மக்கள் அவர்களின் பேஷனை பாலோ செய்வதற்காக சில குறிப்புகளை கேட்ட பொழுது அவர் கூறிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
"நம்மை சுற்றி இருப்பவர்கள் நிறைய பேர் நம்மை தாழ்த்துவார்கள். இது உனக்கு செட் ஆகாது என்று கூறுவார்கள். இது எனக்குமே நடந்திருக்கு. எனக்கென்ன நடந்து இருக்கிறது என்பதை வைத்துதான் இதை நான் சொல்லுகிறேன். உனக்கு இதெல்லாம் வராது, இதுல என்ன நீ பெருசா சம்பாதிச்சிட போற, நீ படித்து முடித்து இவ்வளவு நாள் ஆகிறது இன்னும் ஒரு ஆர்டர் கூட உனக்கு வரல, உனக்கு செலவு பண்ண பணம் அனைத்துமே வீண் தான் என்று கூறுவர்.
ஊக்குவிப்பதற்கு யாருக்கும் வாய் வராது. பொதுவாக மக்களின் குணமே அப்படித்தான். ஒரு நூறு விஷயங்களில் 90 விஷயங்கள் நாம் நன்றாக செய்திருப்போம். அதை நல்லா இருக்கு, சூப்பரா இருக்கு இத விட்றாத என்று சொல்வதற்கு யாருக்கும் வாய் வராது. மனிதர்கள் தவறு செய்வது இயல்பான விஷயம்தான். ஆனால் நாம் சிறியதாக ஏதாவது செய்தாலும் என்கரேஜ்(encourage) பண்ண வராத அவர்கள் தான் நம்மை தாழ்த்துவதற்கு ஓடி வருவார்கள். மிகவும் குறைவானவர்கள் மட்டும்தான் நன்றாக இருப்பதை நன்றாக இருக்கு என்று சொல்லுவர். ஆனால் பெரும்பாலானோர் நல்லா இல்லை என்று சொல்வதற்கு மட்டும் தான் வருவார்கள். அவர்களுக்கு அதில் ஒரு சந்தோஷம்.
யார் வேண்டுமானாலும் நமது பின்னாடி பேசட்டும், நீங்கள் எதை ஆசைப்படுகிறீர்களோ அதற்கு நீங்கள் கண்டிப்பாக போராட வேண்டும். அனைவருமே ஒரு கஷ்டத்தில் இருந்து தான் வந்திருப்பார்கள். பணரீதியான பிரச்சினைகள், குடும்பத்தில் பிரச்சனை இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் இருக்கும். எனக்கும் ஆரம்பத்தில் பணரீதியான ஆதரவு எதுவும் இல்லை. நான் லோன் எடுத்து தான் படித்தேன். நகையை அடகு வைத்து தான் நிறைய விஷயங்கள் செய்தேன். அதேதான் நான் மற்றவர்களுக்கும் சொல்லுவேன். உங்களிடம் பணம் இல்லை என்று நினைத்தீர்கள் என்றால் அதை சரி செய்ய என்னென்ன வழிகள் இருக்கு என்பதை பார்க்க வேண்டும். சிறு தொழில்களுக்கு உதவுவதற்காக நிறைய விஷயங்கள் ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் மூலமாக கூட நீங்கள் லோன் வாங்க முயற்சிக்கலாம். இப்போதைக்கு நகை உங்களிடம் இருந்தால் அதை அடகு வைத்து கூட உங்களின் பேஷனுக்காக நீங்கள் உழைக்கலாம். அதை எப்படி மீட்பது என்பது உங்களுடைய கடினமான உழைப்பில் தான் இருக்கிறது.
படத்தில் கூறுவது போல ஒரு விஷயம் வேண்டும் என்றால் அதற்கு அடம் பிடிக்க கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்றது போல் கடின உழைப்பையும் போட வேண்டும். வெற்றி மட்டும் தான் நமக்கு வேண்டும் என்று நினைத்து அதை செய்யக்கூடாது. வெற்றியை அடைய வேண்டும் என்றால் அதற்கு நிறைய தோல்விகளை நாம் கடந்து வர வேண்டும். தோல்விகளை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். எந்த தொழிலாக இருந்தாலும் ஃபெயிலியர் இல்லாமல் வெற்றியடைவதற்கு வாய்ப்பே கிடையாது. நிறைய பேர் நம்மை அசிங்கப்படுத்துவார்கள். அதற்கெல்லாம் பெரிதாக கவலைப்படக்கூடாது. அவர்கள் அசிங்கப்படுத்தியதால் இது நமக்கு வராது என்று நினைத்து விடக்கூடாது.
அந்த விஷயத்தின் மீது 100 சதவீதம் விருப்பம் இருக்க வேண்டும். பணத்திற்காக எதுவும் செய்யாதீர்கள். பணமும் வேண்டும் தான், ஆனால் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து ஒரு விஷயத்தை செய்யாதீர்கள். இப்பொழுது உதாரணத்திற்கு அழகு கலை மீது உங்களுக்கு விருப்பமே இல்லை என்றால் மற்றவர்கள் அதில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அதை செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். அது உங்களுக்கு கை கொடுக்கவே கொடுக்காது. எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் முதலில் அதன் மீது நமக்கு காதல் வரவேண்டும். அந்த தொழில் நமக்கு என்ன கொடுத்தாலும் அதை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அது தோல்வியே கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேண்டும். அந்த தோல்வியில் இருந்து நீங்கள் என்ன கற்றுக் கொள்கிறீர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். இதை தான் நான் அனைவருக்கும் சொல்லுவேன்.
நானும் இந்த இடத்திற்கு சுலபமாக வரவில்லை. யாராக இருந்தாலும் சரி அவர்கள் சுலபமாக ஒரு விஷயத்தை செய்வதில்லை. கண்டிப்பாக அதற்கு பின்பு அவர்கள் நிறைய உழைப்பை தந்திருப்பார்கள், நிறைய அவமானங்களை சந்தித்து இருப்பார்கள், குடும்பத்தினர் நிறைய சொல்லி இருப்பார்கள். இது அனைத்துமே கடந்து இந்த இடத்திற்கு நான் வந்து காட்டுவேன் என்று தான் எல்லாருமே வருவார்கள். அதன் பிறகு நம்மை நிறைய பேர் வாழ்த்துவார்கள், உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், உங்களை நான் ஒரு ரோல் மாடலாக வைத்திருக்கிறேன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் கேட்க வேண்டும் என்றால் முன்பு சொன்னது போல நிறைய விஷயங்களை கடந்து வர வேண்டும்.
அதனால் சுலபம் என்பதை விட்டுவிட்டு நீங்கள் ஒரு விஷயத்தை ஆசைப்படுகிறீர்கள் என்றால் அதை அடைய வேண்டும் என்பதற்காக நேர்மையான ஒரு வழியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்த்து அதை செய்தால் நிச்சயமாக நீங்கள் வெற்றியடைவீர்கள். ஆனால் இதற்கெல்லாம் கடினமான உழைப்பு தேவை. அது இல்லாமல் எதுவும் கிடைக்காது"
SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் மஞ்சு பாரதி தனது வாழ்க்கை பயணம் பற்றியும் இதுபோன்ற பல பயனுள்ள தகவல்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
Click Here: "I left my IT job to follow my passion" - Manju Bharathi | IB Makeover Studio | Bridal Makeup Expert
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content