Advertisment

பெண்களே பெண்களுக்கு எதிரி - வழக்கறிஞர் திலகவதியின் கருத்து

பெண்களே பெண்களுக்கு ஆதரவளிக்காமல் இருப்பதை நாம் பார்த்திருப்போம். இதைப் பற்றின பல்வேறு கருத்துகளும் நம் சமூகத்தில் பரவியுள்ளது. SheThePeople தமிழுடன் நடந்த நேர்காணலில் வழக்கறிஞர் திலகவதி இதைப்பற்றிய அவரின் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

author-image
Devayani
New Update
women are women enemy

Image is used for representational purpose only

பல சமயங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரியென்று பலர் கூறிய நாம் கேட்டிருப்போம். நாம் அன்றாட வாழ்க்கையில் கூட பெண்களே பெண்களுக்கு எதிரியாக செயல்படுவதை நாம் பார்த்திருப்போம். இதைப் பற்றி வழக்கறிஞர் திலகவதியிடம் அவரின் கருத்துகளை கேட்ட பொழுது அவர் கூறிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

"பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்ற இந்த விஷயம் மிகவும் அதிகமாக பேசப்படுகிறது. மாமியார் கொடுமை பண்றாங்க, நாத்தனார் கொடுமை பண்றாங்க, சக பெண்களே பெண்களுக்கு எதிராக நிறைய விஷயங்கள் செய்கின்றனர் என்று நாம் கேள்விப்படுகிறோம். ஆனால் பெண்கள் பெண்களுக்கு எதிரியாக இருக்கக் கூடிய உரிமையே பெண்களுக்கு கிடையாது.

உதாரணத்திற்கு, இப்பொழுது வரதட்சணையை கேட்பது மாமியாராக இருக்கலாம், "உங்க பொண்ணுக்கு எவ்வளவு போடுறீங்க, இவ்வளவு போடுங்க" என்று அதைக் கேட்டு வாங்குவது மாமியாராக இருக்கலாம். ஆனால், வரதட்சணை என்ற ஒன்றை கொண்டு வந்தது யார்? வரதட்சணை வாங்கிக் கொண்டுதான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும், ஒரு பெண் வீட்டில் தான் இருக்க வேண்டும், சமைக்க வேண்டும், துணியை துவைக்க வேண்டும், குழந்தையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று இது மட்டும் தான் அவளது உலகம் என முடிவெடுத்தது யார்? அந்த மாமியாரா என்று கேட்டால் கிடையாது. அப்பொழுது இந்த மாமியார் யார் என்றால் இது போன்ற விஷயங்களை கடந்து வந்த இன்னொரு பெண். 

women enemy

Advertisment

இப்பொழுது ஒரு மாமியார் இருக்கிறார் என்றால் அவருடைய மாமியார் இதை எல்லாம் அவரை செய்ய சொல்லி இருப்பார். ஆனால், இப்படி செய்வதினால் யார் comfortable ஆக இருக்கிறார்கள்? அதனால் ஆணாதிக்கம் தான் பெண்ணுக்கு எதிரியே தவிர ஆணும் பெண்ணுக்கு எதிர் கிடையாது, பெண்ணும் பெண்ணுக்கு எதிரி கிடையாது. இதை தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள் ஆணாதிக்கத்தை பார்த்துக் கொள்ளும் உயிரினங்களாக தான் இருக்கிறார்களே தவிர அவர்களுக்கு மற்றொரு பெண்ணை அடிமைப்படுத்தவும், கொடுமை செய்யவும் உரிமை கிடையாது. காலம் காலமாக அவர்களே ஒரு குடும்பத்தில் அடிமையாக தான் இருந்திருப்பார்கள். 

பெண்ணே பெண்ணுக்கு எதிரி என்று இந்த சமூகம் பேசுகிறது என்றால், அதாவது அவர்களின் கேரக்டரை பற்றி தவறாக பேசுவது, ஆடைகளை பற்றி தவறாக பேசுவது, கட்டுக்கதை பேசுவது, வளர்ச்சியை அடையவிடாமல் தடுப்பது, இது மாதிரி எல்லாம் நிகழ்காலத்தில் இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதலில் இது மாதிரி எல்லாம் பெண்கள் பண்ணக்கூடாது என்பது தான் பெண்ணியத்தோட முக்கியமான அங்கம். ஏனென்றால், அனைவரும் அணாதிக்கத்தில் மாட்டிக் கொண்டு போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். அப்படி இருக்கையில் போராடும் மற்ற பெண்களை நாம் கைபிடித்து மேலே கொண்டு வர வேண்டும். அவர்கள் வேதனை அடைவதற்கு நாமே ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்பதுதான் பெண்ணியத்தின் முக்கியமான குறிக்கோள். பெண்ணுக்கு பெண் எதிரி என்பதை உருவாக்கியதே ஆணாதிக்கம் தான். பெண்கள் சக பெண்களை ஒரு மனிதராக மதித்து ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்றால் நாம் ஆதரவு கொடுக்க வேண்டுமே தவிர அந்த பெண்ணை இன்னும் தாழ்த்தக்கூடாது.

இதுபோன்று வழக்கறிஞர் திலகவதி நிறைய பயனுள்ள விஷயங்களை பகிர்ந்து கொண்டார். குறிப்பாக இந்தியாவில் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.

Advertisment
  • குடும்ப வன்முறை என்றால் என்ன?
  • பெண்களை காவல்துறையினர் எப்படி நடத்த வேண்டும்?
  • யாராவது உங்களை பிளாக்மெயில் செய்தால் என்ன செய்ய வேண்டும்? 

இது போன்ற பல விஷயங்களை அவர் Thuglife Thalaivi என்ற பாட்கேஸ்டில்(podcast) பகிர்ந்துள்ளார். அதைப்பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Women should know these basic rights - Advocate Thilagavathi | Personal Safety Trainer

Advertisment

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

ஆணாதிக்கம் Advocate Thilagavathi
Advertisment