Advertisment

திருமணத்திற்கு முன்பு பேச வேண்டிய ஐந்து விஷயங்கள்

ஒரு நபரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு அல்லது காதல் உறவுக்கு சம்மதம் சொல்வதற்கு முன்பு இந்த ஐந்து விஷயங்கள் பற்றி பேசிக் கொள்வது நல்லது. அந்த ஐந்து விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
marriage tips

Images are used for representational purpose only

திருமணத்திற்கு முன்பு அல்லது காதல் உறவுக்கு செல்வதற்கு முன்பு உங்கள் துணையிடம் இந்த ஐந்து விஷயங்களை நீங்கள் கலந்து பேசிக்கொள்வது அவசியமாகிறது. இந்த ஐந்தும் உங்களுக்குள் புரிதலை ஏற்படுத்துவதுடன் நிறைய பிரச்சனைகள் வருவதிலிருந்தும் தடுக்கிறது. எனவே, இந்த ஐந்து விஷயங்களை முன்பே பேசிக்கொள்வது நல்லது.

Advertisment

திருமணத்திற்கு முன்பு பேச வேண்டிய ஐந்து விஷயங்கள்

1. பணம்:

நமது அன்றாட வாழ்க்கைக்கு முக்கிய தேவையாக இருக்கும் ஒன்று பணமாகும். பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது ஆனால் வாழ்வதற்கு பணம் அவசியமாகும். அதனால், நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்றும் நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் நபர் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. அதுமட்டுமில்லாமல் உங்களுக்கு இருக்கும் கடன்கள், லோன்கள் பற்றி அவர்களுக்கு தெரிவிப்பதும் அவசியமாகிறது. அதேபோல் அவர்களின் லோன்கள் மற்றும் கடன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Advertisment

நீங்கள் இருவரும் சம்பாதிக்கும் பணத்தை எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதையும் கலந்து பேசுங்கள். மேலும் குடும்ப செலவுகள் மற்றும் மற்ற பொறுப்புகளுக்கு எப்படி பணத்தை செலவழிப்பது என்பதையும் பேசிக் கொள்வது நல்லதாகும். 

couple date

2. குழந்தைகள்:

Advertisment

உங்களுக்கு குழந்தை பெற விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை பேசிக்கொள்ளுங்கள். அப்படி விருப்பம் இருந்தால் எப்பொழுது குழந்தைக்கு பிளான் செய்ய வேண்டும் மற்றும் எத்தனை குழந்தைகள் வேண்டும் என்பதையும் தெளிவாக பேசிக் கொள்ளுங்கள்.

ஒருவேளை உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் இல்லை என்றால் அதை திருமணத்திற்கு முன்பு அல்லது ஒரு காதல் உறவுக்குள் செல்வதற்கு முன்பு நீங்கள் தேர்ந்தெடுக்க போகும் நபரிடம் கூறுவது அவசியமாகும். குழந்தை பெற்றுக் கொள்வதும் அதை வளர்ப்பதும் ஒரு பெரிய பொறுப்பாகும். அதனால் அதற்கு நீங்களும் உங்கள் துணையும் எந்த அளவிற்கு தயாராக உள்ளீர்கள் என்பதையும் கலந்து பேசிக் கொள்ளுங்கள்.

3. உடலுறவு:

Advertisment

நம் சமூகத்தில் உடலுறவு என்பது வெறும் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான ஒன்றாக தான் பார்க்கிறார்கள். ஆனால், உங்களுக்கு குழந்தை பெற விருப்பம் இல்லை என்றாலும் உடலுறவு கொள்வதில் தவறில்லை. எனவே, உங்களின் ஆசைகள் பற்றியும் விருப்பங்கள் பற்றியும் முன்பே தெளிவாக பேசிக்கொள்வது நல்லது. 

திருமணத்திற்கு முன்பு எப்படி உடலுறவு பற்றியும் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றியும் பேசுவது என்ற தயக்கம் கொள்ளாதீர்கள். ஒருவரை நீங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ளப் போகிறீர்கள் என்றால் இது அனைத்தும் உங்கள் வாழ்வில் முக்கியமான விஷயமாகும். அதனால் இதில் அசிங்கப்படுவதற்கும், கூச்சப்படுவதற்கும் எதுவும் இல்லை.

intimate relationship

Advertisment

4. வேலை/கனவு:

உங்கள் வேலை பற்றியும் உங்கள் கனவுகள் பற்றியும் பேசுவது அவசியம். இந்த உலகத்தில் எல்லோருக்கும் ஒவ்வொரு ஆசை இருக்கும். அதேபோல் வேலையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும், நல்ல பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும். குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பொழுது பெரும்பாலும் அனைவரும் வேலை மற்றும் கனவுகள் பாதிக்கப்படுகிறது என்று சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். 

ஆனால், நீங்கள் முன்பே இதைப்பற்றி பேசிக்கொண்டு உங்களின் கனவுகளையும், நீங்கள் செய்யும் வேலையையும் ஏற்றுக் கொள்ளும் ஒரு நபரை திருமணம் செய்து கொண்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது‌. இதனால் நீங்களும் உங்களின் இலக்கை நோக்கி உங்கள் துணையின் கூடுதல் ஆதரவோடு பயணிக்கலாம்.

Advertisment

5. உங்களின் வாழ்க்கை முறை பற்றி பேசுங்கள்:

பெரும்பாலும் அனைவரும் தற்பொழுது நம் வாழும் வாழ்க்கை முறையில் இருந்து மாறி இன்னும் நன்றாக ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் நினைப்போம். ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் விருப்ப வெறுப்புகளும் மாறும். நீங்கள் ஒரே உறவில் இருக்கப் போவதால் உங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான விஷயங்கள் அல்லது வாழ்க்கை முறை பிடித்திருக்கிறதா என்பதை பேசி புரிந்து கொள்ளுங்கள்.

மேல்குறிய ஐந்து விஷயங்களை திருமணத்திற்கு பிறகு பேசிக் கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால் இவை அனைத்தும் ஒரு உறவில் இருப்பதற்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். இதை முன்பே பேசிக்கொண்டு அதன் பிறகு முடிவு எடுப்பது நல்லதாகும். 

Advertisment

மேலும் ஒருவரை திருமணத்திற்குப் பிறகு அல்லது ஒரு காதல் உறவுக்கு சம்மதம் சொன்ன பிறகு மாற்றி விடலாம் என்ற எண்ணம் கொள்ளாதீர்கள். அதேபோல் ஒருவரை ஏமாற்றி அல்லது பொய்கள் சொல்லி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். நீங்கள் வாழ்நாள் முழுவதும் அவர்களுடன் வாழப்போவதால் எப்படியும் அந்த உண்மை தெரிந்த பிறகு நிறைய பிரச்சனைகள் வந்து உங்களுக்கு தான் அது மன அழுத்தத்தை தர போகிறது. அதனால் இதுபோன்ற விஷயங்களை முன்பே பேசிக் கொள்வது நல் வாழ்விற்கு வழி வகுக்கும்.

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)

Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

marriage relationship tips
Advertisment