பலர் தற்போது வீட்டில் இருந்து வேலை பார்ப்பதை விரும்புகின்றனர். குறிப்பாக புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்கள் குழந்தையையும், வேலையையும் சமாளித்துக் கொள்வதற்காக வீட்டில் இருந்து வேலை பார்க்கலாம் என்ற முடிவை எடுக்கின்றனர். ஆனால் வேலை இடத்தை விட்டு வீட்டிலிருந்து வேலை பார்ப்பது மிகவும் சவாலான ஒன்றாகும். ஏனென்றால், வீட்டில் இருந்து வேலை பார்த்தால் பல விதங்களில் கவன சிதறல் ஏற்படலாம். நீங்கள் வேலையை முடிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது உங்கள் வீட்டிற்கு யாராவது வரலாம், வேறு வீட்டு வேலைகள் உங்களுக்கு ஞாபகம் வரலாம் அல்லது உங்கள் நாய்க்குட்டி உங்களை ஒரு நடை பயணம் கூட்டிச் செல்ல சொல்லலாம். மேலும், உங்கள் குழந்தை வீட்டில் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டு இருப்பதை சமாளிப்பதற்கே உங்கள் பாதி நேரம் செலவாகி விடும்.
இதுபோன்று நிறைய தடைகள் இருப்பதால் வேலையை சரியான நேரத்திற்கு முடிக்காமல், மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்புகள் நிறையவே உள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள 8 குறிப்புகள் உங்கள் நேரத்தை எப்படி மேனேஜ் செய்வது என்பதை குறிப்பிடுகிறது.
1. நீங்கள் செய்யும் வேலையை புரிந்து கொள்ளுங்கள்:
ஒரு வேலையை செய்ய ஒப்புக் கொள்ளும் பொழுது அந்த வேலை உங்களை ஊக்குவிக்கிறதா? அதை செய்ய உங்களுக்கு பிடித்திருக்கிறதா? போன்ற கேள்விகளை கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் அதற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை பொறுத்துதான் தான் அதன் விளைவு இருக்கக்கூடும். அதே நேரத்தில் உங்களுடைய எல்லைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நிறைய வேலை கொடுக்கப்பட்டால், உங்கள் நலத்திற்காக அதை நிராகரிப்பது தவறல்ல.
2. வேலை செய்யும் வடிவத்தை மாற்றவும்:
காலையில் சிறிது முன்பே எழுந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுக்கான நேரம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் அந்த நேரத்தில் நிதானமாக காபி குடிப்பது, செய்தித்தாள் படிப்பது மற்றும் உங்கள் மனதை சிறிது சாந்தப்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் கடைசி நேரத்தில் எழுந்தால் உங்களுக்காக நேரத்தை ஒதுக்காமல், உடனே வேலையை செய்ய தொடங்க வேண்டும் என்ற பதட்டம் ஏற்படும். அதனால் மன அழுத்தமும் அதிகரிக்க கூடும்.
3. உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்:
நீங்கள் பல வேலை செய்து கொண்டிருப்பதால் ஆரோக்கியமாக இருப்பது முக்கியமாகிறது. காலையில் சிறிது யோகாசனம் செய்து உங்கள் மூளையையும், உடைமையும் ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். தற்போது இது பற்றி நிறைய வீடியோக்கள் ஆன்லைனில் கிடைக்கிறது. அதை பார்த்து வீட்டில் தனியாகவே உடல் பயிற்சி செய்து கொள்ளலாம்.
4. வேலை செய்வதற்காக ஒரு தனி இடத்தை ஒதுக்குங்கள்:
நீங்கள் வேலை பார்ப்பதற்காக ஒரு தனி இடத்தை அமைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது தான் நீங்கள் வேலையில் கவனம் செலுத்த முடியும்.
5. உங்கள் மொபைலும், கணினியும் உங்களை திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள்:
உங்களை திசை திருப்பும் விஷயங்களை மற்றும் தேவை இல்லாத விஷயங்களை டெலிட் செய்து விடுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் எந்த ஒரு கவனம் சிதறலும் இல்லாமல் வேலையின் மீது முழு கவனத்தையும் செலுத்த முடியும். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
6. அவ்வப்போது இயற்கை காற்றை சுவாசியுங்கள்:
ஒரே இடத்தில் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியில் சென்று இயற்கை காற்றை சுவாசியுங்கள். இயற்கையுடன் சிறிது நேரத்தை செலவிடுவது மன அமைதியை தரக்கூடும்.
7. உங்களை பாராட்டி கொள்ளுங்கள்:
நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒரு வேலையை வெற்றிகரமாக செய்து முடிக்கும் போது உங்களை பாராட்டிக் கொள்ளுங்கள். அப்பொழுது சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு உங்களை ரிலாக்ஸ் செய்யும் விஷயத்தை செய்யுங்கள்.
8. இறுதியாக,
நீங்கள் எவ்வளவு மணி வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல எவ்வளவு வேலையை செய்து முடிக்கிறீர்கள் என்பதே முக்கியமானது.
Suggested Reading: மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஏழு வழி
Suggested Reading: எச்சரிக்கை பெண்களே: மாதவிடாயின் அதிக இரத்தப்போக்கு ஆபத்தானது
Suggested Reading: உருவ கேலி (body shaming) மனிதர்களை மனதளவில் பாதிக்கிறது
Suggested Reading: யார் இந்த fitsio_max சுமையா நாஸ்(Sumaiya Naaz)?