Advertisment

அபிராமி வெங்கடாசலம்(Abhirami Venkatachalam) எப்படி உருவ கேலியை கடந்தார்

அபிராமி வெங்கடாசலம் தனது படங்கள் பற்றியும் கடந்து வந்த பாதை பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பகிர்ந்துள்ளார். அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

author-image
Devayani
New Update
Abhirami Venkatachalam

Image of Abhirami Venkatachalam

இரு துருவம் சீசன் 2 என்ற இணைய தொடரில் நடிகை அபிராமி வெங்கடாசலம் கீதாவாக மீண்டும் நடிக்கிறார். இந்த கிரைம் திரில்லரில் விக்டர் தனது தொலைந்த மனைவியை தேடும் பொழுது கிடைத்த திருக்குறளை வைத்து கொலைக்காரனை கண்டுபிடிப்பது தான் கதை. அபிராமி வெங்கடாசலம் மிஸ் தமிழ்நாடு 2017 பட்டத்தை வென்றவர். மேலும் அவர் இந்த கதாபாத்திரம் பற்றியும் தனது பயணத்தில் இருந்த சவால்கள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார். அவர் கடந்து வந்த பயணம் பற்றி Shethepeople உடம் நடந்த நேர்காணலில் அவர் கூறுகிறார்.

Advertisment

"இந்த வலைத்தொடர் முதல் சீசன் 2019 வெளியானது. இது மக்களிடமிருந்து நல்ல வரவேற்பையும் பெற்றது. இன்றும் மக்கள் என்னிடம் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் கீதா என்ற கதாபாத்திரத்திற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக ஆர்வமாகவும் உள்ளனர். நானும் பார்வையாளர்களை போலவே இந்த படம் எப்போது வெளியாகும் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

இரு துருவம் முதலாம் சீசனில் உங்களுடைய ஸ்கிரீன் பிரசன்ஸ் மிகவும் குறைவாக இருந்தது. எனவே கீதா கதாபாத்திரம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்

கீதா கதாபாத்திரம் நான் நடித்த மற்ற கதாபாத்திரங்களை விட வித்தியாசமானது. அவள் அறிவானவள், ஒரு மனைவி மற்றும் ஒரு தாய். எனவே, நான் நிறைய உணர்ச்சிகளை கொண்டு வர வேண்டி இருந்தது. கதாநாயகியாக நடிப்பதை விட இந்த மாதிரியான கதாபாத்திரங்கள் நடிப்பு திறமையை மேற்கொண்டு வர உதவுகிறது. மேலும் இதில் நடித்தது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கிறது. இது கிரைம் திரில்லர் என்பதால் படம் பிடிப்பு நடந்த இடங்கள் பெரும்பாலும் புழுதிகளாலும், கொசுகளாலும் நிறைந்திருந்தது. எனவே, அதுவும் ஒரு சவாலாக இருந்தது. இருப்பினும் இது போன்ற நடிகர்கள் உடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது.

Advertisment

நேர்கொண்ட பார்வையில் சிறப்பாக நடித்திருந்தீர்கள். இதுபோன்ற சமூக கருத்துக்களுடைய படங்களை பற்றி உங்கள் கருத்து என்ன?

நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்கள் தாக்கத்தையும், நேர்மறையான மாற்றத்தையும் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சமூகத் திரைப்படங்கள் சங்கடமான மற்றும் சமூகத்தை சிந்திக்க தூண்டும் பிரச்சினைகளை தீர்க்கும் திறனை கொண்டுள்ளது. மக்களில் 80 சதவீத பேர் இது போன்ற பிரச்சனைகளை பார்த்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சமீபத்தில் கூட ஒரு நெரிசலான இடத்தில் ஒரு டீன்ஏஜ் பையனால் நான் ஹரஸ் செய்யப்பட்டேன். இது ஒரு முக்கியமான பிரச்சனை ஏனென்றால் இது எதிர்காலத்தை பற்றியது. நாம் எங்கு தவறாக போகிறோம் என்பதை பார்த்து அதை சரி செய்ய வேண்டும்.
உங்களின் மாடலிங் ஆங்கரிங் மற்றும் ஆக்டிங் இன் பயணத்தை பற்றி கூறுங்கள்

எனது கல்விக்கான நிதி உதவியை பெறுவதற்காக நான் மாடலிங் செய்ய தொடங்கினேன். நான் நடனத்தில் தான் கவனம் செலுத்தினேன். நடிப்பது என்பதை நான் யோசித்துப் பார்த்ததில்லை. நான் மாடலாக இருக்கும்பொழுது ஒரு நாளுக்கு முப்பது முதல் நாற்பது புடவைகளை மாற்ற வேண்டும், அதேபோல் முழு நாளும் ஹீல்ஸ் அணிந்து கொண்டே நிற்க வேண்டும். நிகழ்ச்சிகளை தொகுத்தது எனக்கு இந்த துறை எப்படி வேலை செய்யும் என்பதை புரிந்து கொள்ள உதவியாக இருந்தது. மேலும் நான் நிறைய மக்களை சந்தித்தேன். அது எனக்கு நிறைய அனுபவங்களை தந்தது. பிக் பாஸ் என்னை பார்வையாளர்களுடன் இணைத்த ஒரு தளமாகும்.
எனது திறமையும், வேலையும் அங்கீகரிக்கப்படாததால் நான் பலமுறை நம்பிக்கை இழந்து இருந்தேன். அது மட்டும் இன்றி எந்த தொழிலை விட்டு விடலாம் என்ற எண்ணமும் என்னிடம் இருந்தது. சரியான நேரத்தில், சரியான விஷயங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன். ஒரு நடிகையாக என்னை அடுத்த கட்டத்திற்கு தள்ளும் ஒரு நேரம் விரைவில் வருகிறது என்று நம்புகிறேன்.

Advertisment

big boss abhirami

எதிர்மறையான விமர்சனங்கள் பற்றி உங்களுடைய கருத்துக்கள்

நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த புகைப்படம் வெளியான பிறகு மக்கள் நான் எடை கூடி இருப்பதை பார்த்துவிட்டு எனது உடம்பைப் பற்றி கருத்துகளை வெளியிட தொடங்கினர். இது கோவிடின் போது நடந்தது. அப்பொழுது மக்களுக்கு ஒருவரை காயப்படுத்தி மகிழ்ச்சியாக இருப்பது, சரியான விஷயத்தை யோசித்து செய்வதை விட முக்கியமாக இருந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன்.

Advertisment

ஆரம்பத்தில் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அப்பொழுது அனைவரும் வீட்டில் தான் இருந்தோம். அதனால் எடை கூடுவது அனைவருக்கும் ஏற்பட்ட ஒன்றுதான். ஆனால் ஒவ்வொரு முறையும் வேலைக்காக என்னை அழைக்கும் பொழுது, எனது எடை பற்றி தான் அனைவரும் கேட்டனர். அப்பொழுது எனது திறமையை விட எனது தோற்றத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இது பல நாட்களுக்கு நடந்தது என்பதால் அது கொஞ்சம் கொஞ்சமாக எனது உணர்ச்சிகளை பாதிக்க ஆரம்பித்தது. பிறகு நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

நான் ஒரு தைரியமான பெண்ணாக தான் இருப்பேன். இது என்னை பாதித்தது. அதனால் நான் வெளியே செல்லவும், தொலைபேசி அழைப்புகளையும் தவிர்க்க தொடங்கினேன். கண்ணாடி முன் நின்று நான் அழுதிருக்கிறேன். எனது வேலையை மாற்றிக் கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் எனது தாயும், சகோதரனும் தான் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்கள் நீ எப்படி இருக்கிறாயோ அதுதான் அழகு என்று கூறி நீ எடையை குறைக்க வேண்டும் என்றால் அது மக்கள் கூறுவதற்காக செய்யாமல் உனக்கு தோன்றினால் மட்டும் செய் என்று கூறினர். பிறகு அதே போல் நான் எனக்கு எப்பொழுது எடையை குறைக்க வேண்டும் என்று தோன்றியதோ அப்பொழுதே உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

பிறகு நான் இந்த ட்ரோல்களை மனதிற்கு எடுத்துச் செல்வதை நிறுத்தி விட்டேன். ஏனென்றால், அது என் உடலையும், மனதையும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதைப் பற்றி கவலைப்படுவது நேரத்தை வீணாக்குவது என்பதை நான் புரிந்து கொண்டேன். இதுபோன்று ட்ரோல் செய்பவர்கள் எனக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவர்கள் வந்து உதவப் போவதில்லை. எனவே, இவர்கள் கூறும் கருத்துகளுக்கு அழுவது தேவையில்லாத ஒன்று என்பதை உணர்ந்தேன்.‌ அனைவரும் அவர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே, மக்கள் ஒருவருக்கொருவர் நன்றாக நடந்து கொள்ள வேண்டும்.

Advertisment

உங்கள் ப்ராஜக்ட்டுகளை பற்றி கூறுங்கள்

தற்பொழுது நான் ஒப்புக்கொண்ட அனைத்து படங்களுக்கும் படப்பிடிப்பு முடிந்து விட்டது. அதற்கான வெளியீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.

Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்

Advertisment

Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?⁠⁠⁠⁠⁠⁠⁠

Suggested Reading: யார் இந்த Byju's இணை நிறுவனர் திவ்யா கோகுல்நாத்?

Suggested Reading: Digital Marketing பற்றி தமிழில் கற்று தருகிறார் Sangeetha S Abishek

Abhirami Venkatachalam iru dhuruvam
Advertisment