தொழில் முனைவர்கள் பல ரிஸ்க்களை எடுக்க கூடியவர்கள். அவர்கள் சமத்துவத்திற்காக கேள்விகளை எழுப்ப தயங்குவதில்லை, வித்தியாசமாக யோசிப்பவர்கள் மற்றும் உணர்ச்சிமிக்க கேள்விகளை எழுப்பக்கூடியவர்கள். அவர்களின் புதுமையான பொருட்கள், சேவைகள் மற்றும் தீர்வுகளுடன் பொருளாதாரத்தை உயர்த்தி வருகின்றனர். அவர்கள் லட்சியவாதியாகவும், அவர்களின் இலக்கை அடையும் பயணத்தில் மற்றவர்களையும் வளர்த்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக பெண்கள் தொழில் முனைவு மீது அதிக ஆர்வமும், ஈடுபாடும் காண்பித்து வருகின்றனர். பெண்கள் தொழில் முனைவராக வளர்ந்து வரும் போது அது பொருளாதாரத்தை பெரிய அளவில் உயர்த்துகிறது. Nykaa, Sugar Cosmetics, Slurrp Farms, VLCC மற்றும் பல நிறுவனங்கள் பெண்களால் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்த வெற்றி கதைகள்.
இருப்பினும் பெண்களின் தொழில் முனைவு பயணம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது. பெரும்பாலான பெண்களின் தொழில்கள் அவர்களால் தனிப்பட்ட முறையில் தொடங்கப்பட்டு, அவர்களே வழி நடத்துபவர்களாக இருக்கிறார்கள். IBEFஇன் படி பெண்களால் நடத்தப்படும் தொழில்கள் நன்றாக செல்கின்றனர். பெண்களுக்கு தொழில் முனைவு பற்றி சிந்திக்க கூடிய இயல்பு நிறையவே உள்ளது என்பதையும் அவர்கள் நிரூபித்து வருகின்றனர்.
பெண்கள் சந்திக்கும் சவால்கள்:
சமூகம்:
பெண்கள் தொழில் ஆரம்பிக்கும் போது "இது ஒன்றும் பொழுது போக்கு இல்ல, இது வணிகம்" என்று கூறுவது உண்டு. இது ஒருவரின் லட்சியமாகும். பல பெண்கள் துணி வியாபாரம் முதல் கார்டனிங் வரை அனைத்திலும் திறமைசாலியாக உள்ளனர். அது மட்டும் இன்றி ஒழுங்கமைப்பு, மூலப்பொருட்கள் தயாரிப்பது, வேலைக்கு ஆள் சேர்ப்பது, அவர்களுக்கு வேலைகளை பிரித்து தருவது, பேக்கேஜிங், வரவு செலவு பார்ப்பது, மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வது, டெலிவரி சர்வீஸ் அனைத்தையும் தனியாக பார்த்துக் கொள்ள நேரிடும். தினம் தோறும் ஏதோ ஒரு சவால் வரத்தான் செய்யும். அதில் வெற்றியும் உண்டு தோல்வியும் உண்டு.
பாலின பாகுபாடு:
பெண்கள் தொழில் தொடங்கும் போது அவர்கள் வீட்டிலேயே பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுகிறது. அவர்களின் தொழிலை ஒரு பொழுது போக்காக எடுத்துக் கொண்டு, வீட்டிற்கும், குழந்தைகளுக்கும் முக்கியத்துவத்தை தர சொல்கின்றனர். இது போன்ற பேச்சுகளை கடந்து ஒரு தொழிலை தொடர்ந்து செய்வதற்கு மனவலிமையும், உறுதியும் தேவைப்படுகிறது.
நிதி உதவி:
பணரீதியாக பெண்களுக்கு உதவிகள் குறைவாகவே வழங்கப்படுகிறது. பலர் பெண்களை நம்பி பணத்தை தருவதற்கு தயங்குகின்றனர், காரணம் அவர்கள் ஆண்களால் தான் அதை திருப்பி தர முடியும் என்றும் அவர்களுக்கு தான் இது போன்ற திறமைகள் இருக்கும் என்றும் நம்புகின்றனர். எனவே, பெண்களை தாழ்மையாக நினைத்து அவர்களுக்கு உதவி செய்ய மறுக்கின்றனர்.
பாக்கியலட்சுமி என்ற ஒரு தொடரில் கூட விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் தொழிலுக்கு நிதி உதவி கிடைக்காமல் போவதை நாம் பார்த்திருப்போம். அதேபோல் தான் இந்த சமூகத்திலும் ஆண்களின் துணை இல்லாமல் முன்னேற நினைக்கும் பெண்களுக்கு பணரீதியாக உதவிகள் குறைவாகவே கிடைக்கின்றன.
இது போன்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கான வழிகள்:
தற்போது பல பெண்கள் சிறு தொழில் செய்து வருகின்றனர். இது அவர்களுக்கு தொழில் முனைவு மேல் உள்ள ஆர்வத்தை காண்பிக்கிறது. அவர்களின் இந்த முயற்சியை தடுக்காமல் அவர்களை தாழ்வாக நினைக்காமல் அவர்களுக்கு உதவியான விஷயங்களை செய்ய வந்தால் நிச்சயமாக அவர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியும்.
பல துறைகளில் பெண்கள் நிறைய சாதனைகளை செய்து வருகின்றனர். அதனை பாராட்டுவது மூலம் மற்ற பெண்களுக்கு அது ஒரு ஊக்கமாக இருக்கக்கூடும். தொழில் முனைவர் என்பது நிறைய வேலைகளை செய்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். அதனால் ஒருவரை கற்றுக் கொள்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.
அரசாங்கமும் அதற்கேற்றது போல பாடங்கள் எடுப்பது மற்றும் பெண்களை ஆதரிக்க சட்டங்களை கொண்டு வருவது உதவியாக இருக்கக்கூடும். அதேபோல் பணரீதியாகவும் பெண்களை நம்பி உதவி செய்தால் நிச்சயமாக தொழில் முனைவராக முன்னேறி வருவர்.
இந்த சமூகம் பெண்களை எதிர்மறையாக இருப்பதை தவிர்த்து, அவர்களை ஆதரித்தால் அவர்களும் சுதந்திரமாக அவர்களுக்கு பிடித்த வேலையை செய்து முன்னேறுவர். அது நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரிய வளர்ச்சியை தரக்கூடும்.
Suggested Reading: சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தொழில் முனைவர் ஆகிவிட்டேன்
Suggested Reading: ஊர்மிளா தனது உணவுத் தொழிலை 77 வயதில் ஆரம்பித்துள்ளார்
Suggested Reading: Nykaa நிறுவனத்தின் நிறுவனர் மாணவர்களுக்கு கூறும் ஆலோசனை