பெண்ணியம் நம்பிக்கைகளைக் கொண்ட ஒரு பெண் சம உரிமைக்கான குரல் கொடுக்கும் போதெல்லாம் அவள் ஆண்களை கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு பெண்ணாக முத்திரை குத்தப்படுகிறாள். இதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்கள் சிந்தனைகளை மாற்ற வேண்டிய நேரம் இது. ஏனெனில், பெண்ணியம் ஆண்களை கட்டுப்படுத்தவும், அடிமையாகவும் நினைக்கவில்லை, அது பெண்களை ஆண்கள் கட்டுப்படுத்தவும், அடிமையாகவும் விடாமல் தடுப்பது.
நம் சமூகத்தில் பாலின பாகுபாடு என்பது சகஜமான ஒன்று. இந்த பாகுபாடுகள் இல்லாமல் ஒரு சமூகத்தை மக்களால் நினைத்துப் பார்க்க முடியாது. என்றும் ஆண்களே ஆத்திகம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். இதனால், ஆண்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கின்றன. ஒருவேளை பெண்ணியத்திற்கு ஆதரவளித்தால் ஆண்களுக்கு அந்த சலுகைகள் கிடைக்காமல் போகும் என பயப்படுகிறார்கள். பெண்கள் இந்த உலகத்தை ஆள ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயமும் ஆண்களுக்கு ஏற்படுகிறது. ஆனால், அவர்கள் பெண்ணியம் எந்தவித பாகுபாடும், ஒடுக்கு முறையும் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க நினைக்கிறது என்று புரிந்து கொள்ள தவறுகின்றனர். ஆண்களும், பெண்களும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி இல்லாமல் சமமான மனிதர்களாக வாழ முடியாது என ஏன் இந்த சமூகம் நினைக்கிறது?
பெண்ணியத்தை சுற்றியுள்ள தவறான புரிதல்கள்:
குறிப்பாக உறவுகளுக்கு வரும்போது பெண்ணியம் அவர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. ஏனெனில், ஆண்கள் சொல்லுவதை பெண்ணியம் மேல் நம்பிக்கை கொண்ட ஒரு பெண் கேட்க மாட்டாள் என்று பயப்படுகின்றனர். ஆனால், அவர்கள் அந்தப் பெண் சம உரிமைக்காகவும், அவளை ஒடுக்குபவர்களின் எண்ணங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறாள் என்பதை யாரும் உணர்வதில்லை.
அதே மாதிரி பணியிடங்களில் பெண்களின் பணியிடங்கள் அதிகரிக்கும்போது ஆண்களின் எண்ணிக்கை குறைவதால் அவர்களுக்கு வேலையில்லாமல் போய்விடுமோ என அச்சப்படுகிறார்கள். பெண்கள் இதற்கு முன் ஆண்கள் பணிபுரிந்த இடங்களுக்கு வருவதை நிறைய ஆண்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் ஆண்கள் உண்மையாக தவறாக வழிநடத்தப்படுகிறார்கள். பெண்ணியம் ஆண்களின் நிறுவனத்தையோ அல்லது வாய்ப்புகளையோ பறிக்க விரும்பவில்லை. அது அதிகாரத்தையும், வாய்ப்புகளையும் சமமாக பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சமூகத்தில் பல்வேறு அம்சங்களில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்தது சமூக சமத்துவத்தை உருவாக்கும் முயற்சியாகும். இது பெண்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை வழங்குவதற்கான ஒரு முயற்சி மட்டுமே. பெண்ணியம் என்பது பெண்களை நச்சுத்தன்மை வாய்ந்த ஆணாதிக்க பிடியல் இருந்து விடுவிக்க நினைக்கும் ஒரு கூட்டணி என்பதை ஆண்கள் உணர வேண்டும். பாலியல் அடிப்படையில் ஒருவரை நடத்தாமல் ஆணையும், பெண்ணையும் சமமான மரியாதைடன் நடத்த வேண்டும் என்பதே பெண்ணியம். ஆணாதிக்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் உண்மையில் அவர்களின் நல் வாழ்விற்கு தீங்கு விளைவிக்கிறது என்று அவர்களுக்கு புரிவதில்லை.
ஆண்களுக்கு சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகள்:
ஆண்கள் காலங்காலங்களாக குடும்ப செலவிற்கு சம்பாதிக்க வேண்டும், பெண்களை அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், மற்ற ஆண்களுக்கு முன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் இது போன்ற ஆணாதிக்க எண்ணங்களின் மாட்டிக்கொள்கின்றனர்.
பெண்களுக்கு விதிக்கப்பட்டது போலவே ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண்கள் அழக்கூடாது, அவர்களை எப்பொழுதும் தைரியசாலியாக இருக்க வேண்டும், குடும்பத்திற்காக அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும், அவர்களுக்கு சமைக்க பிடித்திருந்தாலும் அல்லது மற்ற வேலைகளை செய்ய பிடித்திருந்தாலும் அதையெல்லாம் பெண்கள் வேலை என்று சொல்லி அவர்களை செய்ய விடாமல் தடுக்கிறது. இதுபோல ஆண்களுக்கும் இந்த சமூகத்தில் சில தடைகள் உள்ளன.
பெண்ணியத்தின் நோக்கம்:
பெண்ணியம் பெண்களுக்கான உரிமையை கூறுவது மட்டுமின்றி இதுபோல் ஆண்களுக்கு இருக்கும் சில விதிமுறைகளையும் உடைக்க நினைத்து சமத்துவத்தை பரப்ப நினைக்கிறது.
பெண்ணியம் எல்லா மனிதரும் பாலின பாகுபாடு, வேறுபாடுகள் இன்றி சமமாக வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் பாகுபாடுகளை தரைமட்டம் ஆகி சமத்துவத்தை உருவாக்கி நிலை நிறுத்துவது பெண்ணியத்தின் நோக்கமாகும். எனவே, ஆண்களே பெண்ணியத்தை அச்சுறுத்தலாக பார்க்காமல் அதை உங்கள் சொந்த வாழ்க்கையை மேம்படுத்த நினைக்கும் கருவியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்ணியம்(feminism) என்றால் என்ன? Abilashni(Kannammas Content)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்களின் மன அழுத்தத்திற்கான(depression) தீர்வுகள்