புத்தாண்டு வர சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் அதற்காக தயாராகி வருகின்றனர். குறிப்பாக புத்தாண்டு என்றாலே ரெசல்யூஷன் என்பது தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் ரெசல்யூஷன் எடுக்கும் பொழுது நாம் ஜிம்முக்கு செல்ல வேண்டும், ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும் இதுபோல விஷயங்களை தான் ரெசல்யூஷனாக எடுக்கிறோம். அதனால் இந்த முறை சிறிது வித்தியாசமாக உங்கள் உள்ளிருந்து நல்ல மாற்றத்தை கொண்டுவர உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள் விட்டுவிட்டு தைரியமாக செயல்பட வேண்டும் என்று ரெசல்யூஷனை எடுங்கள்.
நாம் அனைவரும் தாழ்வு மனப்பான்மை என்ற ஒரு புதிரில் மாட்டிக் கொள்கிறோம். இந்த தாழ்வு மனப்பான்மை அல்லது மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசனை நம் திறமைகளையும், நாம் நினைக்கும் விஷயங்களையும் செய்யவிடாமல் நம்மை தடுக்கிறது. ஆனால் மற்றவர்களுக்கு பயந்து, அவர்கள் என்ன நினைப்பார்கள் என்று நினைத்தோம் என்றால் நாம் நினைக்கும் விஷயங்களை நமக்கு பிடிப்பதை செய்யாமல் இருந்து விடுவோம். அப்படி இருப்பது நம்மை பெரிய அளவில் பாதிக்கக்கூடும்.
எல்லா சாதனையாளர்களும் ஏதோ ஒரு விஷயத்தில் இருந்து தான் தொடங்கி இருப்பார்கள். நாம் வெற்றியடையவில்லை என்றாலும் நமக்கு பிடித்ததை முயற்சி செய்திருக்கிறோம் என்ற ஒரு நிம்மதியாவது நமக்கு கிடைக்கும். இந்த நிம்மதி மட்டுமே பிற்காலத்தில் நமக்கு மன அமைதியை தரும்.
கோமாளி மற்றும் லவ் டுடே படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நான் எப்படி இருக்கிறேன் நீங்களே சொல்லுங்க? என்று கூறிய பொழுது கூட்டத்திலிருந்து ஒருவர், "கேவலமா இருக்க" என்று கத்தி இருப்பார். அதற்கு பிரதீப், "தேங்க்ஸ், இந்த கேவலமா இருக்க என்றது நான் சின்ன வயசுல இருந்து கேட்டுட்டு இருக்க ஒன்னு தான், என்ன புதுசுனா நான் இந்த மேடையில நிற்கிறது தான் புதுசு" என்று கூறியிருப்பார். இப்படி அவர் கூறியது வைரலான நிலையில் லவ் டுடே படம் ரிலீசுக்கு பிறகு மற்றொருவர் இது வைரலானதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டிருப்பார். அதற்கு பிரதீப், "சட்டையில ஒரு தடவ கரைப்பட்டா தான் ஐயோ அழுக்காயிருச்சுன்னு தோணும், என் சட்ட ஃபுல்லா கரை தான்" என்று கூறியிருப்பார்.
அதேபோல், நீங்கள் என்ன செய்தாலும் இந்த சமூகம் ஏதோ ஒன்று உங்களை கூறிக் கொண்டுதான் இருக்கும். நீங்கள் ஒரு முறை அந்த பயத்தை சந்தித்து விட்டீர்கள் என்றால் அதற்கு நீங்கள் பழகிக் கொள்வீர்கள்.
ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்பு அதல் இருக்கும் சவால்களை யோசித்துப் பாருங்கள். அப்படி அந்த சவால்களை யோசித்த பிறகும் உங்களுக்கு அந்த விஷயத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணமும், எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியமும் இருந்தால் வெற்றி உங்களுடையது. நீங்கள் அதில் இருக்கும் சவால்களை முன்பே கணித்திருப்பதால் அந்த சவால்கள் வரும் பொழுது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்காது. இதை நீங்கள் முன்பே எதிர்பார்த்து இருந்ததால் அதை எதிர்கொள்வதற்கான மனப்பான்மையும் உங்களிடம் இருக்கும்.
நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை வாய்ப்புகளாக பார்க்கத் தொடங்குங்கள். உங்கள் உழைப்புக்கேற்ற பலன் உங்களுக்கு கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் அனைவரிடமும் இருக்கும் ஒன்றுதான். இதனை யார் முறியடித்து முதல் படியை வைக்கிறார்களோ அவர்களே வெற்றியை நோக்கிய பயணத்தை தொடர்கின்றனர்.
நீங்கள் எப்பொழுது உங்களை தாழ்த்தி நினைக்காமல், மற்றவர்கள் கூறும் எதிர்மறையான விஷயங்களை மனதில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறீர்களோ அப்பொழுதே உங்கள் வெற்றி பயணம் தொடங்குகிறது. வெற்றி என்பதை பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்பதில்லை, அது மன நிம்மதியாக கூட இருக்கலாம். எனவே, இந்த ஆண்டிலிருந்து நேர்மறையான விஷயங்களை சிந்தியுங்கள். உங்களை விட யாரும் உயர்ந்தவரும் இல்லை, தாழ்ந்தவரும் இல்லை என்று எண்ணத்தை கொள்ளுங்கள். பேசுபவர்களால் பேச மட்டும் தான் முடியும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் செயலின் மூலம் அவர்களுக்கு பதிலளியுங்கள்.
Suggested reading: அழகுக்கலை நிபுணர் வசுந்தராவின் 33 ஆண்டு பயணம்
Suggested reading: பல ஆண்டுகளாக சமையல் குறிப்புகள் வழங்கி வரும் மல்லிகா பத்ரிநாத்
Suggested reading: தமிழ் நகைச்சுவை கன்டென்ட் கிரியேட்டர் ஜெனிபர்
Suggested reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம்(Raji Akka)