அழகுக்கலை நிபுணர் வசுந்தராவின்(Vasundhra) 33 ஆண்டு பயணம்

வசுந்தராவின் அழகு குறிப்பை பார்க்காமல் நம்மில் யாரும் இருந்திருக்க மாட்டோம். YouTube மக்களுக்கு பரிச்சயமாக தொடங்கிய காலத்தில் இருந்து இப்பொழுது வரை நிறைய பயனுள்ள தகவல்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
vasundhara

Image of Vasundhra

அழகுக்கலை நிபுணராக 33 ஆண்டுகள் அந்த துறையில் வலம் வந்து கொண்டிருக்கிறார். YouTube மக்களுக்கு பரிச்சயமாக தொடங்கிய பொழுது அழகு குறிப்புகள் தேடினால் வசந்த்ராவின் அழகு குறிப்பு வீடியோக்கள்தான் முதலில் வரும். மக்களுக்கு புரியும் வகையில் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஒருவரை இன்னும் எப்படி அழகுபடுத்திக் கொள்ளலாம் என்ற குறிப்புகளை வசுந்தரா மக்களுக்கு கற்று கொடுத்து கொண்டிருக்கிறார்.

Advertisment

வசுந்தராவின் பயணம் எப்படி தொடங்கியது?

பெண்கள் அனைவரும் படித்து முடித்து விடுகின்றனர். ஆனால் அதன் பிறகு என்ன செய்வது, எங்கு வேலை தேடுவது போன்ற விஷயங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரிவதில்லை. படித்து முடித்துவிட்டு நான்கு மாதம் வீட்டில் இருந்த அவருக்கு என்ன வேலை செய்வது, யாரை கேட்பது என்று எந்த ஒரு வழிகாட்டியும் இல்லை. அப்பொழுது செய்தித்தாளில் ஒரு விளம்பரத்தை பார்த்து அந்தக் கோர்ஸ் படிக்கலாம் என்று முடிவெடுத்தார். இந்த முடிவை அவரின் மாமியாரிடம் சொன்னபோது அவரும் அதற்கு ஒற்றுக்கொண்டார்.

அழகு கலை படிப்பதற்காக ஆறு மாத கோர்ஸில் அவர் சேர்ந்தார். சேர்ந்த இடத்தில் அவரின் ஆசிரியர் வித்யா நன்கு கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி இவரை நன்கு கவனிக்கவும் செய்தார். வசுந்தராவிற்கு இதில் நிறைய ஆர்வம் வந்தது . முக்கியமாக இவரின் ஆசிரியர் இவரிடம் நடந்து கொள்வது மற்றும் பாடம் எடுக்கும் முறை இவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இதனால் ஆர்வத்துடன் வசுந்தரா அனைத்தையும் கற்றுக் கொண்டார். 

Vasundhara The visible difference

கோர்ஸை முடித்தவுடன் இவரின் மாமனார் இதைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்லி தந்தால் உனக்கும் இது இன்னும் நன்றாக புரியும் என்று கூறினார். அப்பொழுது இவர் செய்தித்தாளில் அளித்த விளம்பரத்தை பார்த்து பக்கத்தில் இருந்த ஒரு பெண் இவரிடம் கற்றுக் கொள்வதற்காக வந்தார். வசுந்தரா அவர் கற்றுக் கொண்டதையும், அவருக்கு தெரிந்த அனைத்தையும் அந்த பெண்ணிற்கு கற்றுத் தந்தார். அதன் பிறகு அந்தப் பெண் சொந்தமாக ஒரு பார்லர் ஆரம்பித்தார். 

Advertisment

இதை எடுத்து வசுந்தராவும் ஒரு பார்லர் தொடங்கலாம் என முடிவெடுத்த பொழுது அவரின் புகுந்த வீட்டில் டி நகரில் அவர்களின் ஒரு வீடு இருக்கிறது என்றும் அதில் சொந்தமாக நாம் ஒரு பார்லர் ஆரம்பிக்கலாம் என்றும் கூறி ஆரம்பித்துள்ளனர்.

ஆரம்பத்தில் அனைத்து வேலைகளையும் வசுந்தரா தனியாக செய்து வந்தார். அதன் பிறகு தான் வேலைக்காக ஆட்கள் எடுக்க தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் மக்களின் வருகை குறைவாக இருந்தது. சில நாட்கள் யாரும் வராமல் கூட இருந்திருக்கிறது. அப்பொழுதெல்லாம் வசுந்தராவிற்கு கஷ்டமாக இருந்தது. அந்த சமயத்தில் அவரின் கணவர் தான் அவருக்கு ஆதரவாக இருந்துள்ளார். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் வருகை அதிகரித்தது. 

Vasundhara Beautician shows

வசுந்தரா அவரின் கிளையண்டுகள் இடம் மிகவும் அன்பாகவும், அக்கறையாகவும் பழகினார். அதனாலேயே அவரிடம் மீண்டும் மீண்டும் மக்கள் வரத் தொடங்கினர். 30 ஆண்டுகளாக இவரின் பார்லருக்கு வரும் மக்களும் இருக்கின்றனர் என்று ஒரு நேர்காணலில் கூறினார்.

Advertisment

இதற்கு இடையில் இவர் கற்றுக் கொடுக்கவும் செய்தார். மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் எனில் நமக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதற்காக இவர் தினமும் இவரின் தொழிலில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்து இருந்தார். நிறைய மாணவர்களும் வரத் தொடங்கினர்.

பிறகு ஒரு நாள் சன் டிவியில் இவரை சில அழகு குறிப்புகள் மக்களுக்கு சொல்லி தர வேண்டும் என்று அழைத்தனர். அப்பொழுது ஒரு சில காரணங்களால் தொகுப்பாளர் அங்கிருந்து கிளம்பி விட்டார். அதனால் வசுந்தராவே அந்த நிகழ்ச்சி முழுவதும் தனியாக பேசி, அழகு குறிப்புகளை வழங்கியுள்ளார். இவர் நன்றாக பேசியதால் மலரும் முட்டும் என்ற ஒரு குழந்தைகள் நிகழ்ச்சிக்கு இவரை தொகுப்பாளராக சன் டிவியில் இருந்து அழைத்தனர். 

the visible difference vasundhara

ஆரம்பத்தில் இதில் அவருக்கு ஆர்வமில்லை என்றாலும் பிறகு அதில் ஆர்வம் ஏற்பட்டு பல ஆண்டுகள் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்துள்ளார். அதன் பிறகு சன் டிவியில் ஒரு அழகு குறிப்புகள் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் இருந்தார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இந்த நிகழ்ச்சியை அவர் தொகுத்துள்ளார். இதன் மூலம் தினமும் நிறைய புதிய அனுபவங்களை பெற்றுள்ளார். 

Advertisment

மேலும் இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் பலரின் வாழ்க்கை மாறி இருக்கிறது என்பதால் மற்றவர்களுக்கு கற்று தருவது இவருக்கு பிடித்த விஷயமாக இருக்கிறது. வெளிநாடுகளுக்கு சென்றும் இவர் பாடங்கள் எடுத்துள்ளார். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் அதில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். அப்படி வசுந்தரா ஆரம்பிக்கும் போதும் உறவினர்களிடமிருந்து இந்த வேலைக்காக விமர்சனங்கள் வந்துள்ளது. ஒரு தொழில் ஆரம்பித்த காலகட்டத்தில் இது போன்று டிஸ்கரேஜ்மெண்ட்(discouragement) இருக்கத்தான் செய்யும் ஆனால் அதற்காக கவலைப்பட கூடாது என்று அறிவுரை கூறுகிறார். 

உங்களுக்கு ஒரு விஷயம் பிடித்திருக்கிறது என்றால் அதை சீரியஸாக செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இருப்பதை வைத்து சிறிதாக ஆரம்பித்து அந்த அனுபவத்தின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறுகிறார்.

Suggested Reading: சாதிக்க வேண்டும் என்ற வெறி சுகிதாவின்(sugitha) வாழ்க்கையை மாற்றியது

Advertisment

Suggested Reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம் (Raji Akka)

Suggested Reading: பெண்கள் செய்யக்கூடாத 6 விஷயங்கள்

Suggested Reading: தீபா அக்கா (Deepa CWC) சிரிப்புக்கு பின்னாடி இவ்வளவு சோகமா?

inspiring story Vasundhra the visible difference beautician