Advertisment

வேலையை விட்டு எழுத்தாளரான Kavipriya

I don't wear Sunscreen, Dirty Martini போன்ற புத்தகங்களின் ஆசிரியரான கவிபிரியா அவரின் வாழ்க்கை பயணத்தை ஜோஷ் டாக்கில் பகிர்ந்து கொண்டார். அவர் தனது வேலையை விட்டு எப்படி எழுத்தாளர் ஆனார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Writer Kavipriya

Images of Kavipriya

MBA படித்துவிட்டு ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில்  இரண்டரை வருடம் வேலை பார்த்த கவிபிரியா மூர்த்தி அந்த வேலை அவருக்கு மகிழ்ச்சியை அழைக்கவில்லை என்பதை உணர்ந்து அதை விட்டு தனக்குப் பிடித்ததை செய்ய ஆரம்பித்திருக்கிறார். பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்கள் அனைவரும் திங்கட்கிழமை ஆனால் வருத்தமாகவும், வெள்ளிக்கிழமை எப்பொழுது வரும் எனவும் காத்துக் கொண்டு இருப்பார்கள். அப்படித்தான் கவிபிரியாவும் இருந்திருக்கிறார். அவர் செய்த வேலையில் அவருக்கு ஏதோ ஒன்று பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொண்டு ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட முடிவு எடுத்தார்.

Advertisment

அதன் பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனசோர்வும் ஏற்பட்டது. ஒரு நாள் அவரின் நண்பர்கள் அவரை அழைத்து பேசிக் கொண்டிருந்த பொழுது "நீ நன்றாக பேசவும், எழுதவும் செய்வாய் அல்லவா? நீ ஏன் blogging முயற்சித்துப் பார்க்கக் கூடாது? என்று கேட்டனர். அதன் பிறகு கவிபிரியா blogging ட்ரை பண்ணலாம் என அதை முயற்சித்து பார்த்தார். தனது பெயரில் ஒரு இணையதள பக்கத்தை தொடங்கி அதில் எழுத ஆரம்பித்தார்.

kavipriya writer

மேலும், பேஸ்புக்கின் மூலம் நிறைய ரைடர்ஸ் குரூப்பில்(writers group) இணைந்தார். அதில் எழுத்தாளர்கள் வேண்டும் என்ற போதெல்லாம் அவர் எழுதி கொடுத்தார்‌. அவரின் முதல் கட்டுரை 500 வார்த்தைகளை கொண்டது, அதற்கு அவரின் சம்பளம் 50 ரூபாயாக இருந்தது. அவர் முன்பு செய்து கொண்டிருந்த வேலையில் ஓரளவுக்கு நல்ல சம்பளம் பெற்றாலும் இந்த 50 ரூபாய் தந்த மகிழ்ச்சி அந்த வேலையில் அவருக்கு கிடைக்கவில்லை.

Advertisment

பிறகு தொடர்ந்து எழுத ஆரம்பித்தார். கிளைண்டுகளும்(client) அதிகரித்துக் கொண்டே இருந்தனர். அவருக்கு எது எழுத வரும், எது எழுத வராது என்பதை புரிந்து கொள்ள ஆரம்பித்தார். அவருக்கான ஒரு niche தேர்ந்தெடுத்தார். பெரும்பாலும் இவர் உறவுகள் பற்றியும், பெண்ணியம் பற்றியும் நன்றாக எழுதுவார் என்பதால் அதையே தனது niche ஆக வைத்துக் கொண்டார்.

ஒருமுறை இவர் எழுதி தந்த ஒன்று e-book ஆக Amazon Kindleஇல் வெளியானது. ஆனால், அது வேறொருவருடைய பெயரில் வெளிவந்தது இவருக்கு ஆதங்கத்தை தந்தது. தான் எழுதியதற்காக பணம் அளித்தாலும் அவரின் எழுத்துக்கள் வேறொருவரின் பெயரில் இருந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பொழுது இருந்துதான் அவருடைய உண்மையான எழுத்துப் பயணம் தொடங்குகிறது.

Dirty Martini Kavipriya⁠⁠⁠⁠⁠⁠⁠

Advertisment

பின்பு, தானே ஒரு புத்தகம் வெளியிடலாம் என முடிவெடுத்து, அதை எழுத ஆரம்பித்தார். மறுபடியும் மார்க்கெட்டிங் என்பது புதிதான ஒன்று என்பதால் அதிலும் எது சரி, எது தவறு என புரிந்து கொள்வதற்கு சில நாட்கள் எடுத்தது. ஒரு மூன்று வருடம் உழைப்பிற்கு பின்னாலே இவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்ற அங்கீகாரம் கிடைத்தது. அவருடைய முதல் புத்தகம் I Don't Wear Sunscreen என்ற தலைப்பில் வெளியானது.

ஆரம்பத்தில் அவருக்கு எழுதுவது பிடித்திருந்தாலும் அதை எப்படி அடுத்த நிலைக்கு எடுத்து செல்வது என்று எதுவும் தெரியாமல் இருந்தார்‌. ஆனால் இந்த பயணம் அவருக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தது. எழுத்தாளர்கள் எழுதும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அதை படிப்பவர்கள் அதனை எப்படி புரிந்து கொள்வார்கள் என்று தெரியாது. அதனால் அனைவருக்கும் புரியும்படி விஷயங்களை கூற வேண்டும். நாம் எழுதுவது நமக்கும் உண்மையாக இருக்க வேண்டும், மக்களுக்கும் புரியும்படி எழுத வேண்டும் என்று ஜோஷ் டாக்கில் அவர் பேசிய போது கூறினார். 

தற்போது இன்ஸ்டாகிராமில் addsomecurryleaves என்ற பக்கத்தின் மூலமாக திரைப்படங்களை பற்றியும், சில நிகழ்ச்சிகளை பற்றியும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

Advertisment

 

Suggested Reading: Thaai Herbals என்ற தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Archana

Suggested Reading: தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இலவச ஆலோசனை Nandhini - Entrepreneur

Advertisment

Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: Menopause சமயத்தில் தவிர்க்க வேண்டிய 6 உணவுகள்

inspiring story Kavipriya writer
Advertisment