மனநல ஆரோக்கியம் என்பது நல்வாழ்விற்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஐந்து சாதாரண விஷயங்களை பின்பற்றி உங்கள் மன ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். இன்று நாம் மனரீதியாக எந்தெந்த விஷயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பார்ப்போம்.
1. நேர்மறையான எண்ணங்கள்:
"எண்ணம் போல் வாழ்க்கை' என்று பலர் சொல்லி நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மை. நாம் எதை சிந்திக்கிறோமோ, எதைப்பற்றி நினைக்கிறோமோ அதை பொறுத்தே நமது ஆற்றல்களும் செயல்படுகின்றனர். ஒரு வேலை உங்கள் எண்ணங்கள் நேர்மறையாக இருந்தால், நீங்கள் அதை நம்பினால் உங்களுக்கு நேர்மறையான விஷயங்களை நடக்கும். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை நேர்மறையாக பார்க்கத் தொடங்கினீர்கள் என்றால் எதிர்மறையான விஷயங்களில் கூட நல்லதையே நீங்கள் பார்த்து கற்றுக் கொள்வீர்கள். இது உங்களை மன அழுத்தம் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
2. மன அமைதி:
இன்று இருக்கும் காலகட்டத்தில் மன அமைதியைப் பெற சிறிது கடினமானதாக தான் இருக்கிறது. நாம் வாழும் வாழ்க்கை முறையும், செய்யும் வேலையும் பல சமயங்களில் நம் மன அமைதியை பாதிக்கிறது. மன அமைதியை பெற வேண்டும் எனில் நாம் முதலில் நம்மிலிருந்து மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு மேல் கூறியது போல் நேர்மறையான எண்ணங்கள் கூட உங்களுக்கு மன அமைதியை தரலாம். ஒவ்வொருவருக்கும் சில செயல்கள் அல்லது சில மாற்றங்கள் அவர்களுக்கு மன அமைதியை தரும். எனவே, நீங்கள் எதை செய்தால் மன அழுத்தம் இல்லாமல் இருப்பீர்கள் என்று நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
3. சுய அன்பு(Self Love):
பெரும்பாலும் நாம் மற்றவர்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கிறோமே தவிர நமக்கு நாமே அன்பாக இருக்க தவறுகிறோம். சின்ன சின்ன விஷயங்களில் கூட நாம் நம்மிடம் பேசிக் கொள்வதே வெறுப்பாக தான் பேசிக் கொள்கிறோம். உதாரணத்திற்கு ஒரு கண்ணாடியை பார்த்தால் நான் ஏன் இப்படி இருக்கிறேன், இந்த மாதிரி இல்லாம வேற மாதிரி இருந்தா நான் நல்லா இருப்பேன். இந்த மாதிரியான எண்ணங்கள் சுய வெறுப்பையே தருகிறது. அதனால் முதலில் மற்றவர்களிடமிருந்து அன்பை எதிர்பார்ப்பதற்கு முன், நம்மை நாமே காதலிக்க வேண்டும். இந்த அன்பு மட்டுமே எப்பொழுதும் மாறாமல் நம் சாகும் வரை நம்முடன் இருக்கும்.
4. பிடித்தது போல் இருங்கள்:
இந்த சமூகம் என்ன செய்தாலும் ஏதோ ஒன்று சொல்லிக் கொண்டுதான் இருக்கும். நீங்கள் இந்த சமூகம் கூறுவது போல அவ்வப்போது உங்களை மாற்றிக் கொண்டாலும் எதிர்மறையான கருத்துக்கள் வந்து கொண்டே தான் இருக்கும். அதனால் நீங்கள் எப்பொழுது உங்களை ஏற்றுக் கொள்கிறீர்களோ அப்பொழுதே பல நேர்மறையான மாற்றங்களை உங்கள் வாழ்வில் பார்க்க முடியும். யார் என்ன கூறுவார்கள் என்று பயப்படாமல் உங்களுக்கு பிடித்ததை, உங்கள் மனசாட்சிக்கு சரி என்று படுவதை செய்யுங்கள். கண்டிப்பாக அதற்கும் இந்த சமூகத்தில் இருந்து நிறைய கருத்துகள் வரும். ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களால் எப்போதும் எல்லாரையும் மகிழ்விக்க முடியாது. முதலில் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள், அதுவே போதுமானது.
5. உங்களுக்கான நேரத்தை ஒதுக்குங்கள்:
உங்களுக்கான தனிப்பட்ட நேரம் என்பது மிகவும் முக்கியமானது. அந்த நேரத்தில் எந்த கவலையும் இல்லாமல், நீங்கள் விரும்புவதை நீங்கள் செய்யலாம். அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நடனம், வரைவது, எங்காவது வெளியில் செல்வது அல்லது உறக்கமாக கூட இருக்கலாம். எனவே, தினமும் உங்களுக்காக இருக்கும் 24 மணி நேரத்தில் ஒரு அரை மணி நேரமாவது ஒதுக்கி, இந்த மொபைல் ஃபோன்களை விட்டு உங்களுக்கு பிடித்த வேறு விஷயத்தை செய்யுங்கள். இது கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சியையும், மன அமைதியையும் தரும்.
இந்த ஐந்துமே ஒருவரின் வாழ்க்கையில் மன அமைதியை பெற உதவும். எனவே, நீங்கள் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த நினைத்தால், உங்கள் லட்சியங்களை, இலக்குகளை அடைய நினைத்தால், முதலில் உங்களை நீங்கள் மேல் கூறிய ஐந்து விஷயங்கள் மூலம் மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த ஐந்தையும் நீங்கள் பின்பற்றினால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற கவலை இன்றி, தாழ்வு மனப்பான்மை இன்றி, உங்கள் லட்சியத்தை நோக்கி முயற்சிகளை செய்ய தொடங்குவீர்கள்.
Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)
Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி
Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)
Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content