Mommy Shots by Amrita - குழந்தை புகைப்படக் கலைஞரின் கதை

குழந்தைகளை புகைப்படம் எடுப்பது சுலபமான காரியம் அல்ல. சமூகத்தில் அதற்குப் பெரிய எதிர்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த துறையில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் அம்ரிதாவை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

Devayani
28 Feb 2023
Mommy Shots by Amrita - குழந்தை புகைப்படக் கலைஞரின் கதை

Image of Amrita

போட்டோகிராபி வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகளை படம் பிடிக்க உதவுகிறது. போட்டோகிராபியில் பல வகைகள் உள்ளது. ப்ராடக்ட், திருமணம், பேஷன், வனவிலங்கு போன்று பல வகையான போட்டோகிராபிகள் இருக்கிறது. நம் வாழ்க்கையில் கூட திருமணத்திற்கு முன்பும், திருமணம் ஆகும் போதும் அந்த தருணங்களை புகைப்படம் பிடிப்பது வழக்கமானது. ஆனால், பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போதும், குழந்தை பிறந்த உடனும் புகைப்படங்கள் எடுப்பது ஆபத்தானது என்ற நம்பிக்கை மக்களிடையில் பரவி உள்ளது. இந்த நிலை தற்போது மாறி வருகிறது. 

வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இதுபோன்ற போட்டோகிராபி இந்தியாவில் சில ஆண்டுகளாக தான் வளர தொடங்கியுள்ளது. குழந்தை புகைப்படம் எடுப்பதை பல ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்து தற்போது குழந்தை போட்டோகிராபி என்றாலே Mommy Shots by Amritha தான் முதலில் நினைவுக்கு வரும் அளவிற்கு வளர்ந்துள்ளார். 

யார் இந்த அம்ரிதா?

அம்ரிதா சென்னையில் பிறந்து, வளர்ந்து இருந்தாலும் அவரது பூர்வீகம் வட இந்தியா என்பதால் வீட்டில் இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையே அவர் வளர்ந்துள்ளார். சிறு வயதில் இருந்தே கலை துறையில் தனக்கென ஒரு வேலையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதனால் நடிப்பு, நடனம் என பல விஷயங்களை அவர் எக்ஸ்ப்ளோர்(explore) செய்தார். ஆனால் அவற்றை தொழிலாக அல்லது வேலையாக மாற்றும் பொழுது அவருக்கு கடினமாக இருந்தது. எனவே, கலை தொடர்பான நிறைய விஷயங்களை அவர் பரிசோதித்துப் பார்த்தார். கடைசியாக தான் அவர் போட்டோகிராபி என்ற ஒன்றை செய்யலாம் என முடிவெடுத்தார்.

mommy shots by amrita

ஒரு புகைப்படத்தில் எவ்வளவு விஷயங்கள் அடங்கி இருக்கிறது என்பதையும் அது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதையும் நினைக்கும் போது அதன் மீது அம்ருதாவிற்கு ஆர்வம் அதிகமானது. எனவே, 2014இல் புகைப்பட கலைஞராக முடிவெடுத்தார்.

புகைப்படம் எடுப்பதில் நிறைய வகைகள் உள்ளது. திருமணம், பேஷன், ப்ராடக்ட் என பல வகைகள் இருந்த நிலையில், வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்று நினைத்தார். அப்பொழுதுதான் வெளிநாடுகளில் பிரபலமாக இருக்கக்கூடிய குழந்தை போட்டோகிராபி(child photography) செய்யலாம் என முடிவெடுத்தார். இதற்கு முக்கிய காரணம் அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும், அதை போல் அவரிடம் நிறைய பொறுமையும் இருந்தது. எனவே, குழந்தைகளையும், புகைப்படத்தையும் இணைத்து இது போன்ற ஒன்றை செய்யலாம் என முடிவெடுத்தார்.

சந்தித்த சவால்கள்:

முன்பு கூறியது போலவே இந்தியாவில் பிறந்த குழந்தைகளை புகைப்படம் எடுக்கக் கூடாது போன்ற நிறைய விஷயங்கள் இருந்தது. மக்களும் அதை நம்பிக்கொண்டிருந்தனர். இவர் 2014லேயே இந்தத் தொழிலை ஆரம்பித்ததால் பலர் இப்படி புகைப்படங்கள் எடுப்பது தவறு என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இவரிடம் குழந்தை புகைப்படம் எடுத்த பெற்றோர்களும் அதை ஆன்லைனில் பதிவிட வேண்டாம் என்ற கோரிக்கையை விடுத்தனர். 

amrita child photographer

அதேபோல் 2014, 15இல் பிறந்த 15 நாட்களுக்குள் குழந்தையை புகைப்படங்கள் எடுக்க யாரும் விருப்பம் காட்டியதில்லை. ஆனால், தற்போது இந்த நிலை மாறி உள்ளது. பலர் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட குழந்தைகளின் வளர்ச்சியை புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்துக் கொள்கின்றனர்.

புகைப்படம் எடுப்பதற்கு முன்பு எப்படி தயாராகுவீர்கள்?

ஒவ்வொரு குழந்தையை புகைப்படம் எடுப்பதற்கு முன்பும் பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். பெற்றோர்கள் எந்த மாதிரியான புகைப்படங்களை எதிர்பார்க்கிறார்கள் போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல் தற்போது எது ட்ரெண்டாக உள்ளது என்பதையும் தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு புகைப்படங்களை எடுக்க வேண்டும். எல்லா புகைப்படமும் ஒரே மாதிரி இருந்தால் பார்க்க சுவாரசியமாக இருக்காது. எனவே, ஒவ்வொரு புகைப்படத்திற்கும் வித்தியாசங்களை காட்ட வேண்டும். அதேபோல் அழகிய தருணங்களையும் படம் பிடிக்க வேண்டும்.

amrita shots by amrita child photographs

இந்தத் தொழிலில் ஆர்வம் உள்ளவர்களுக்கான ஆலோசனை:

முதலில் பொறுமை வேண்டும். அதேபோல் குழந்தைகளின் மீது அன்பு வேண்டும். புகைப்படம் எடுப்பதற்காக நேரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுடைய சைக்காலஜி பற்றி அறிந்திருந்தால் குழந்தைகளுடன் எளிதாக பழகி அழகான புகைப்படங்களை எடுக்கலாம்.

மேலும் இவர் குழந்தைகளை மற்றும் கர்ப்பிணிகளை புகைப்படம் எடுப்பது பற்றியும் கற்றுத் தருகிறார். அதில் மிக முக்கியமாக குழந்தைகளை பாதிக்காத லைட்டுகளை பற்றியும் மாணவர்களுக்கு கற்று தருகிறார். இவர் பல பிரபலங்களுடன் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Suggested Reading: Rafflesia Illustration மூலம் பிரியதர்ஷினி இணையத்தை கலக்கி வருகிறார்!

Suggested Reading: Black Sheepஇன் இவள் சீரிஸ் உருவான கதை⁠⁠⁠⁠⁠⁠⁠

Suggested Reading: ஊட்டச்சத்து நிபுணர் தர்ஷினியின் பயணம்(dietition dharshini)

Suggested Reading: உடலுறவை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார் டாக்டர் நிவேதிதா

அடுத்த கட்டுரை