Advertisment

பேச்சாளர் பர்வீன் சுல்தானாவின்(Parveen Sultana) வாழ்க்கை பயணம்

பேச்சாளர் பர்வீன் சுல்தானா தனது பேச்சு திறமையினால் பலரை ஊக்குவித்து வருகிறார். அவரின் வாழ்க்கை பயணம் பற்றியும், அவர் கூறிய சில விஷயங்களை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
parveen sultana tamil speaker

Image of Parveen Sultana

சாதாரண ஒரு குடும்பத்தில் பிறந்த பர்வீன் சுல்தானாவிற்கு அதிக ஆசைகள் எதுவும் கிடையாது. நன்றாக படித்து வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர் இருந்தார். சிறு வயதில்  தந்தை உருது மொழியில் கவிதைகள் எழுதுவதைப் பார்த்து ரசித்த பர்வீன் சுல்தானாவிற்கு சிறுவயதிலிருந்தே மொழி மீது ஆர்வம் இருந்தது. இவர் தமிழ் வழி கல்வியில் பயின்றதால் தமிழ் மொழி மீது இவருக்கு அதிக ஈர்ப்பு இருந்தது.

Advertisment

பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு ஒரு கல்லூரியில் வேதியியல் படிக்கலாம் என சேர்ந்துள்ளார். ஆனால் அது அவருக்கு சரியான இடம் இல்லை என்று தோன்றி அதிலிருந்து விலக முடிவு எடுத்தார். பிறகு இதை வீட்டில் சொன்ன போது "அடுத்து நீ என்ன செய்யப் போகிறாய்" என்ற கேள்வியை கேட்டனர். அப்பொழுது விளையாட்டின் மீது ஆர்வம் இருந்ததால் ராணுவம், காவல்துறை போன்ற விஷயங்களில் சேர்த்து விடுங்கள் என்று கேட்டுள்ளார். அப்பொழுது அதற்கான நுழைவுத் தேர்வுகள் எல்லாம் முடிந்து விட்டது என்பதால் வேறு எதையாவது படிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது.

காயிதே மில்லத்தில் இவர் அட்மிஷனுக்காக சென்ற பொழுது எந்த துறையில் சேர வேண்டும் என்று கேட்டார். அப்பொழுது நான் யோசித்து சொல்கிறேன் என்று கூறிய பர்வீன் சுல்தானா வீட்டிற்கு வந்து சில நாட்களுக்கு பிறகு தந்தையிடம் தமிழ் இலக்கியம் படிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் என்று கூறினார். அவரின் தந்தை இதை படித்து விட்டு உன்னால் எப்படி ஒரு வேலை வாங்க முடியும், எப்படி பணம் சம்பாதிக்க முடியும் என்று கேட்டுள்ளார். ஏனென்றால், அவரின் சகோதர, சகோதரிகள் அனைவருமே அறிவியல், கணிதம் போன்ற துறைகளை தேர்ந்தெடுத்துள்ளதால், அவரின் தந்தைக்கு இந்த கேள்வி வந்துள்ளது.

parveen sultana motivational speaker

Advertisment

அதன் பிறகு தான் படித்தால் தமிழ் இலக்கியம் தான் படிப்பேன் என்று கூறி இளங்கலை பட்டம் பெற்ற பிறகு MA, UGC, P.hd என அனைத்திலும் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்ற தொடங்கினார்.

தமிழ் மொழியின் மீது பற்று கொண்ட இவர் கடின உழைப்பினால் மட்டுமே இவ்வளவு தூரம் வந்திருக்கிறார். தற்போது பலரை தன் பேச்சினால் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் பர்வீன் சுல்தானா சமூகத்திற்கும், தனி மனிதருக்கும் தேவைப்படும் விஷயங்கள் மற்றும் கருத்துக்களை தனது பேச்சின் மூலம் அளித்து வருகிறார்.

பர்வீன் சுல்தானா கூறிய சில விஷயங்கள்:

Advertisment

1. இந்த சமூகம் திணிப்பதற்காக நீங்கள் ஒரு விஷயத்தை செய்யக்கூடாது. உங்களுக்கு பிடித்த விஷயத்தை செய்தால் மட்டுமே மன மகிழ்ச்சி, மன நிறைவு, மன அமைதி கிடைக்கும் என்று அவர் ஜோஷ்டாக்கில் தனது வாழ்க்கை கதையை பற்றி பகிர்ந்துக்கொள்ளும் போது கூறினார்.

2. சாதாரணமாகவே ஒரு மனிதருக்கு நிறைய தடைகள் வரும். ஆனால் இந்த தடைகள் எதுவும் நம்மை தடுக்க முடியாத அளவிற்கு நாம் முன்னேற வேண்டும். படிப்பு என்பது வெறும் வேலை வாங்குவதற்கு மட்டுமல்ல, அதை போல் வேலை என்பது பணம் சம்பாதிப்பதற்கு மட்டுமல்ல,  வாழ்க்கை அனுபவத்திலிருந்து நமக்கு கிடைக்கும் அறிவு பணத்தைவிட மேன்மையானது.

motivational speaker parveen sultana⁠⁠⁠⁠⁠⁠⁠

Advertisment

3. சில சமயங்களில் நாம் நமக்கு பிடித்ததை சந்தை படுத்தாமல், சம்பாதிப்பதற்காக இல்லாமல், பிரபலமடைவதற்காக இல்லாமல், பாராட்டு பெறுவதற்காக இல்லாமல் செய்ய வேண்டும். அப்படி நமக்கு பிடித்ததை முழு மனதோடு செய்து வந்தால் அதனுடன் வளர்ச்சி, மேன்மை, செல்வாக்கு, புகழ், பணம் என அனைத்தும் கிடைக்கும்.

4. எந்த நேரத்திலும் விழிப்புணர்வோடும், ஒழுக்கத்தோடும், தன்னிலை அறிந்து பயணம் செய்கிறவர்கள் தோற்பதில்லை.

5. என்றும் தோற்பது தோல்வி அல்ல களத்தை விட்டு வெளியேறுவது தான் தோல்வி.

Advertisment

மொழி மீது உள்ள ஆர்வத்தினால் தொடங்கிய பர்வீன் சுல்தானாவின் இந்தப் பயணம் தற்போது பல லட்சம் மக்களை ஊக்கவித்து வருகிறது. இந்தப் பயணத்தில் அவருக்கு ஏற்பட்ட தடைகளை எல்லாம் தகர்த்தி மக்களை தனது அறிவூட்டும் பேச்சினால் கவர்ந்து உள்ளார். குறிப்பாக பெண்கள் வாழ்க்கையில் சோர்வோடு இருக்கும் பொழுது இவரின் பேச்சுகளை கேட்டால் புத்துணர்ச்சியாக இருக்கும்.

Suggested Reading: ஆட்டோ ஓட்டுநர் ராஜி அக்காவின் வாழ்க்கை பயணம்(Raji Akka)

Suggested Reading: டிசைனர் சிந்துவின் (Designer Sindhu) வாழ்க்கை பயணம்

Advertisment

Suggested Reading: என் வாழ்வில் பிடிவாதம் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியது - Saritha Jo

Suggested Reading: முதல் மாற்றுத்திறனாளி வழக்கறிஞர் - Karpagam Mayavan

Parveen Sultana tamil motivational speaker
Advertisment