உடனே மருத்துவரை சந்திப்பதற்கான பத்து அறிகுறிகள்

Devayani
07 Nov 2022
உடனே மருத்துவரை சந்திப்பதற்கான பத்து அறிகுறிகள்

Image used for representational purpose only

மகப்பேறு மருத்துவ நிபுணர்களை கர்ப்ப காலத்தில் மட்டும் பார்த்தால் போதும் என பலர் கருதுகின்றனர். பலர் பரிசோதனைகள் சங்கட்டமாக இருக்கும் என நினைத்து பயப்படுகிறார்கள். "மகளிர் மருத்துவ நிபுணரை பார்ப்பது நீங்கள் மோசமான பரிசோதனையை செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை" என்று டாக்டர் சுதேஷனா கூறுகிறார். பல நேரங்களில் கலந்து ஆலோசிப்பது, பேசுவது அல்லது வயிற்றில் ஒரு பரிசோதனையாக இருக்குமே தவிர நீங்கள் பயப்பட கூடிய அளவிற்கு பெரிதாக இருக்காது.

மேலும் அவர் 14 முதல் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மருத்துவ நிபுணரை பார்ப்பது சிறந்தது என கூறுகிறார். ஏனென்றால், சிறு வயதில் இருந்து விழிப்புணர்வுடன் உடலை கவனித்துக் கொள்வது அவசியம். அதுமட்டுமின்றி கீழே கூறப்பட்டுள்ள 10 அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களுக்கு இருப்பதாக நினைத்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.

1. வெள்ளைப்படுதல், வெளியேற்றத்தில் துர்நாற்றம்:

.உங்கள் அந்தரங்க பகுதியில் இருந்து ஒரு சிறிய அளவில் துர்நாற்றம் ஏற்பட்டால் அது சாதாரணமான ஒன்று. அதுவே கடுமையான துர்நாற்றம் வந்தால் அது தொற்று நோயை குறிக்கலாம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது

2. அசாதாரண வெளியேற்றம்:

வெளியேற்றம் எப்போதும் மாதவிடாய் முடிந்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் நின்றுவிடும். இதற்குப் பிறகு லேசான வெளியேற்றும் வரலாம். மாதவிடாய் முடிந்து மறு சுழற்சியின் நடுவில் தண்ணீரைப் போல வெளியேற்றம் வரும். பிறகு அதன் அளவு குறையும். இதுதான் ஒரு சாதாரண வெளியேற்ற சுழற்சி. இந்த முறையை பின்பற்றாத எந்த ஒரு வெளியேற்றமும் மருத்துவரை பார்க்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

3. சிறுநீர் கழிக்கும் போது அல்லது அதற்கு பிறகு எரிச்சல் அல்லது அரிப்பு ஏற்பட்டால்:

இந்த மாதிரியான அனுபவங்கள் புஞ்சை தொற்றுக்கான அறிகுறியாக இருக்கலாம். இது சிறுநீர் பாதை நோய் தொற்று (UTI) அல்லது பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று (STI) போன்றவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை சந்திக்கவும்.

4. ஒழுங்கற்ற மாதவிடாய்:
மாதவிடாய் சுழற்சி தொடங்கி மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்கற்ற மாதவிடாய் தொடர்ந்து இருப்பது நீங்கள் மகளிர் மருத்துவ நிபுணரை சந்திக்க வேண்டிய அவசியத்தை குறிக்கிறது. ஒரு ஒழுங்கான மாதவிடாயை பின்பற்ற மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம். இந்த நேரத்தை தாண்டிய எந்த ஒழுங்கின்மையும் ஹார்மோன் சமநிலையின்மையை குறிக்கிறது. 

5. பிற அறிகுறிகளுடன் ஒழுங்கற்ற மாதவிடாய்:
அதிகமான முகப்பரு, முகத்தில் நிறைய முடி வளர்வது, உடல் பருமன் மற்றும் அளவுக்கு அதிகமாக முடி உதிர்தல் இவை எல்லாம் ஹார்மோன் சமநிலையை குறிக்கிறது. இது போன்ற பிரச்சனைகள் அதிகமாக இருப்பதாக நீங்கள் கருதினால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

6. தாங்க முடியாத அளவிற்கு வலி:
60% இளம்பெண்களுக்கு மாதவிடாய் வலி இயல்பானது. ஆனால் அந்த வலி மாதவிடாய் வருவதற்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னால் அல்லது மாதவிடாய் முழுவதும் இருந்தால் அல்லது மாதவிடாய் முடிந்த பிறகும் இருந்தால் அதற்கு சிறப்பு பரிசோதனை தேவை. இது என்டோ மெட்ரியோசிஸாக இருக்கலாம்.

7. கட்டுப்பாட்டை மீறிய PMS:
மாதவிடாய் வலியை போலவே Premenstrual Syndrome உங்கள் அன்றாட செயல்பாட்டை பாதிக்கிறது. மாதவிடாய் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே அளவிற்கு அதிகமான மனநிலை மாற்றம் ஏற்படுகிறது என்றால் நிபுணரின் ஆலோசனை தேவைப்படுகிறது.

8. மாதவிடாய் தள்ளிப்போன பின்பு உடலுறவு கொள்வது:
கர்ப்பத்தை தவிர்ப்பதற்கு நீங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும் நீங்கள் கர்ப்பமாக வாய்ப்புகள் உள்ளது. இதை ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும் பெண்கள் அவர்களுக்கு வழக்கமாக மாதவிடாய் தவறுவது போல் இருக்கலாம் என சாதாரணமான நினைத்துக் கொள்ளலாம். எனவே, மாதவிடாய் தள்ளிப் போனால் மருத்துவரை அணுகி பரிசோதனை எடுத்துக் கொள்வது நல்லது.

9. உடலுறவு போது கடுமையான வலி:
உடலுறவின்போது கடுமையான வலி அல்லது உடலுறவு கொள்ள முடியவில்லை என்றால் தசைப்பிடிப்பு அல்லது தொற்றாக இருக்கலாம். சிறிய வெஜைனா அல்லது இது என்டோ மெட்ரியோசிஸ் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே நீங்கள் உடலுறவு கொள்ளும் போது தாங்க முடியாத அளவுக்கு வலி இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

வயிற்றில் வீக்கம், கனம் அல்லது வலியை உணர்ந்தால்:
இந்த அறிகுறிகள் கருப்பை நீர்க்கட்டி அல்லது நார்த்திசுக்கட்டியின் அறிகுறியாக இருக்கலாம். இந்த நிலைமைகள் பொதுவாக இளம் பெண்கள் அல்லது இளம் பருவத்தினரிடம் காணப்படவில்லை என்றாலும், அறிகுறிகள் ஏற்பட்டால், ஒரு மகப்பேறு மருத்துவ நிபுணரைப் பார்க்க வேண்டும்.

Read The Next Article