Advertisment

தொழில் தொடங்குவதற்காக ஆலோசனை தருகிறார் Sangeetha S Abishek

தனது பயணம், தொழில் தொடங்குவதற்கான ஆலோசனை, டிஜிட்டல் மார்க்கெட்டராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் போன்ற விஷயங்களை Thuglife Thalaivi என்று பாட்காஸ்டில் பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய விஷயங்களில் இருந்து சில குறிப்புகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
Digital marketer

Image of Sangeetha S Abishek

டி நகரில் SODME டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Sangeetha S Abishek. பல பிராண்டுகள் வளர்வதற்காக இவரும், இவரின் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஏஜென்சியும் உதவியுள்ளது. அவரின் இந்த பயணம் பற்றியும் தொழில் தொடங்குவதற்கான சில ஆலோசனைகளையும் Thuglife Thalaivi என்ற Podcastஇல் பகிர்ந்துள்ளார். அவர் கூறியவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisment

YouTubeஇல் தமிழில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் சொல்லி தரலாம் என்ற யோசனை எப்படி வந்தது?

மார்க்கெட்டிங் பற்றி கற்று தரும் தமிழ் YouTube சேனல்கள் அதிகமாக இல்லை.  YouTubeஇல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பற்றி தேடினால் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் தான் வரும். அப்போ தமிழில் இல்லை என்பதே ஒரு பெரிய இடைவெளி தான். தமிழர்கள் உலகம் முழுக்க இருப்பதால் ஆடியன்சும்(audience) நிறைய பேர் இருக்கிறார்கள். நமக்கு தமிழில் ஒரு விஷயத்தை சொல்லும் பொழுது அது இன்னும் நன்றாக புரியும். அப்பொழுது தான் மக்களாலும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். டிஜிட்டல் மார்க்கெட்டிங் டெக்னிக்கலான விஷயம் என்ற பயம் நிறைய மக்களுக்கு இருக்கிறது, அதை மீண்டும் ஆங்கிலத்தில் சொல்லி தந்தால் அது இன்னும் கஷ்டம் என நினைப்பார்கள். ஒரு விஷயத்தை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அது நமது மொழியில் தான் சொல்ல முடியும் என்று தோன்றியது. 

FB ads in tamil

Advertisment

யாரால் அதை எளிமையாக சொல்ல முடியும் என்றால் யார் ஒருவர் அதை அடிப்படையில் இருந்து தெரிந்து வைத்திருக்கிறார்களோ அவர்களாலே அதை எளிமையாக சொல்ல முடியும். நான் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பல வருடங்களாக செய்து கொண்டிருப்பதால் எனக்கு மிகவும் அடிப்படையான விஷயங்களை எப்படி புரிய வைக்க வேண்டும் என்று தெரிந்தது. அதனால், தமிழில் வீடியோக்கள் பதிவிட ஆரம்பித்தேன் அதற்கு மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

தொழில் ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

இப்போழுது தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் சுலபமாக செய்துவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ஏனென்றால், அதில் நீங்கள் நிறைய முயற்சிகள் எடுக்க வேண்டும். உங்களை நம்பி அந்த தொழிலில் வேலை செய்பவர்களுக்கும் நீங்கள் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் தொழில் செய்வது எளிது என்றும் விரைவில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடும் ஆரம்பிக்காதீர்கள். மக்களுக்கு ஏதாவது வேல்யூவை(value) உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு தொழிலை தொடங்குங்கள். அப்பொழுது தான் உங்களால் வளர முடியும். ஆரம்பிக்கும்போதே பெரிதாக வளர்ந்து விட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். எங்காவது ஒரு இடத்தில் உங்களுக்கு ஒரு திருப்புமுனை ஏற்படும் அதற்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டு இருங்கள். 

Advertisment

பெண்கள் அவர்கள் ஒரு நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, நல்ல மகளாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உங்கள் மனசாட்சிக்கு நீங்கள் நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக இருந்தால் போதும். மற்றவர்களிடமிருந்து நிறைய உதவி கேளுங்கள். தொழில் என்று வந்துவிட்டால் நிறைய உதவி தேவைப்படும்.

digital marketing

பெண்கள் வேலையையும், வீட்டையும் பாரத்துக் கொள்வதற்காக டிப்ஸ் கொடுங்கள்

Advertisment

இன்னும் நிறைய பேர் இது பெண்களுடைய வேலை, இது ஆண்களுடைய வேலை என்று சொல்கின்றனர். என்னை பொறுத்தவரை மகளிர் தினம் என்றாலே ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து அதற்கு பின் 10 கைகள் வைத்து அவர்கள் செய்யும் வேலையை போற்றுகின்றனர். ஆனால் பெண்கள் நிறைய வேலை செய்வதை போற்றக்கூடாது. பெண்களும் சாதாரண மனிதர்கள் தான். பெண்களுக்கு நிறைய வேலை செய்யும் சக்தி உண்டு என்று கூறுகின்றனர். அது  அப்படி அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். அதனால் உங்களால் என்ன முடியுமோ அதை மட்டும் செய்யுங்கள். மற்ற விஷயங்களுக்கு உதவி பெற்றுக் கொள்ளுங்கள். அனைத்தையும் தனி ஆளாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் உங்களால் தொழிலையும் நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது, வீட்டையும் ஒழுங்காக பார்த்துக் கொள்ள முடியாது. 

குடும்பம் என்றால் ஒருவர் மட்டும் கிடையாது. அப்பொழுது அனைவரும் சேர்ந்து தான் அந்த குடும்ப நலத்திற்காக உழைக்க வேண்டும். பெண்கள் மட்டும் தொடர்ந்து வேலைகளை செய்து கொண்டிருந்தால் அவர்களின் தொழிலும், வேலையும் பாதிக்கும். பெண்களுக்கு பத்து கை கிடையாது இரண்டே கை மட்டும் தான் இருக்கு, அதோட சேர்ந்து இன்னும் இரண்டு கை இருக்கிறது, அது கணவருடைய கைகள். அதனுடன் குழந்தைகளுக்கு இரண்டு கை இருக்கிறது. அதனால் குழந்தைகளையும் சுதந்திரமாக வளர்க்க வேண்டும். அதற்காக குழந்தைகளை கவனித்துக் கொள்ள கூடாது என்று அர்த்தம் அல்ல சின்ன சின்ன வேலைகளை, அவர்களுடைய வேலைகளை அவர்களையே செய்ய சொல்லி வளர்க்கலாம்.

இதுபோன்று பல பயனுள்ள தகவல்களை Sangeetha S Abishek அவர்கள் Thuglife Thalaivi என்ற podcastஇல் பகிர்ந்துள்ளார். அதனை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Advertisment

Click Here: SODME Digital Marketing Agency Founder - Sangeetha S Abishek | Marketing

Suggested Reading: திலகவதி - முதல் பெண் கட்டைக்கூத்து கலைஞரின் வாழ்க்கை பயணம்

Advertisment

Suggested Reading: பல தடைகளைத் தாண்டி சாதித்து வருகிறார் Muthamizh

Suggested Reading: சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாத கைவினைப் பொருட்களை விற்று வரும் Srimathi

Suggested Reading: மக்கள் விரும்பும் கன்டென்டுகளை பதிவிடும் ஸ்ரீநிதி(style with Srinidhi)

Sangeetha S Abishek SODME
Advertisment