Advertisment

படிப்பை நிறுத்தி பெண்களை திருமணம் செய்த வைப்பது அநியாயம் - சரண்யா

பெண்களின் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்து வைப்பது தவறு என்றும் அது ஒரு பெண்ணின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்றும் சரண்யா பொன்வண்ணன் The Ramya Show-வில் பகிர்ந்து கொண்டார். அதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

author-image
Devayani
New Update
Saranya Ponvanan

Images are used for representational purpose only

நம் சமூகத்தில் திருமணம் என்ற ஒன்றை வைத்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கையையும் அவள் எப்படிப்பட்டவள் என்பதையும் தீர்மானிக்கின்றனர். சொல்லப்போனால் நம் சமூகத்தில் தனியாக வாழ்வதைவிட நஞ்சு வாய்ந்த ஒரு நபருடன் வாழ்வதையே மேல் என்று பெண்களை நம்ப வைத்து கொண்டு இருக்கின்றனர். 

Advertisment

VJ ரம்யா "The Ramya Show" என்று புதிதாக ஒரு பாட்காஸ்ட் ஆரம்பித்திருக்கிறார். அதன் முதல் விருந்தினராக சரண்யா பொன்வண்ணன் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் ஃபேஷன் டிசைனிங் கற்றுக்கொள்ள வந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை எடுத்துக்காட்டி, படித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை கூறினார். அவர் கூறிய விஷயம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சரண்யா பொன்வண்ணனிடம் ஃபேஷன் டிசைனிங் படிக்க வந்த ஒரு பெண் அவர் இஞ்சினியரிங் படித்துக் கொண்டிருக்கும் பொழுதே வீட்டில் திருமணம் செய்து வைத்துவிட்டனர் என்று கூறியதை பகிர்ந்து கொண்டார். மேலும் அதைத் தொடர்ந்து இது அநியாயம் என்றும் ஒரு பையனை முழுமையாக படிக்க வைக்கின்றனர், வேலைக்கு செல்ல ஆதரிக்கின்றனர். ஆனால் ஒரு பெண்ணை பாதி படிப்பிலேயே நிறுத்திவிட்டு நல்ல வரன் வருகிறது என்பதற்காக திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். அந்தப் பெண்ணும் திருமணத்தை ஒரு சாதனை என நினைக்கிறாள். ஆனால், திருமணம் என்பது நமது வாழ்க்கையில் நடக்கும் ஒரு விஷயம் அவ்வளவு தான். அது சாதனை கிடையாது. எது சாதனை என்றால் நாம் படிப்பது, வேலைக்கு செல்வது, பணம் சம்பாதிப்பது, கைத்தொழில் ஏதாவது கற்றுக் கொள்வது தான் சாதனை. அதேபோல் முதலில் இதை பெற்றோர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ayali marriage

Advertisment

இது போன்று இந்த சமூகத்தில் இந்த ஒரு பெண்ணிற்கு மட்டும் நடக்கவில்லை. இது போன்ற பல பெண்களை படிப்பை பாதியில் நிறுத்தி தான் திருமணம் செய்து வைக்கின்றனர். பெரும்பாலும் பெண்கள் 20 வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு வரன்கள் வர ஆரம்பிக்கிறது. பெற்றோர்களும் ஒரு நல்ல வரன் வந்தால் உடனே அந்த பெண்ணை திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்று நினைக்கின்றனர். ஒரு பெண்ணை திருமணம் செய்து வைப்பதுடன் அவர்களின் கடமை முடிந்து விடுகிறது என்று நினைக்கின்றனர். ஆனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் அவர்கள் நல்லது என்று நினைத்து செய்யும் இந்த விஷயம் எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள தவறுகின்றனர்.

சிறுவயதில் இருந்து பெண்களுக்கு திருமணத்தின் எண்ணங்களை விதைப்பதால் அவர்களும் அதுதான் வாழ்க்கையில் ஒரு சாதனை என்று நினைக்கின்றனர். ஒருவேளை பெண்கள் இதை எதிர்த்து பேசினால் அவர்களுக்கு இந்த சமூகம் பல பெயர்களை வைக்கிறது. எப்படி இருந்தாலும் கடைசியாக அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

திருமணம் செய்து கொள்வது தவறில்லை. ஆனால், திருமணம் என்பது ஒரு பெரிய பொறுப்பாகும். அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வருவதற்கு முன்பே திருமணம் செய்து வைப்பது பெரிய பிரச்சினைகளில் முடியும். வாழ்க்கையில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்பது நிச்சயமில்லாத ஒன்று. அப்படி இருக்கையில் இந்த உலகில் நமக்கு வாழ்நாள் முழுவதும் துணையாக இருக்கப் போவது நாம் மட்டுமே. அதனால் அனைவரும் வேலைக்கு செல்வதும் அல்லது அன்றாட வாழ்வுக்கு தேவையான பணம் சம்பாதிப்பதும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

Advertisment

Jaya Jaya Jaya Hey

உதாரணத்திற்கு, அந்தப் பெண்ணை நீங்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்து விடலாம், அவளும் படிப்பை விட திருமணம்தான் முக்கியம் என்று நினைத்து திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த கணவனுக்கு ஏதோ ஒன்று நிகழ்ந்தால் அந்தப் பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. அல்லது அவளின் வாழ்க்கைத் துணை நஞ்சு வாய்ந்த நபராக இருந்தால் அவளால் தைரியமாக அந்த உறவில் இருந்து வெளியே வரவும் முடியாத நிலை ஏற்படுகிறது.

சரண்யா பொன்வண்ணன் கூறியது போல் இதை பெற்றோர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களின் பிள்ளைக்கு நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அவளின் படிப்பிற்கும், வேலைக்கு செல்வதற்கும் தேவையான ஆதரவை அளிப்பது தான் சரியான முறையே தவிர திருமணம் செய்து வைத்தால் அவளை கணவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணம் தவறாகும்.

Advertisment

 

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)

Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

marriage Saranya Ponvannan
Advertisment