Sruthi Haasan ஒரு பிரபலத்தின் மகளாக இருந்தாலும் கூட தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டு பல பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். ஸ்ருதிஹாசன் சமீபத்தில் அளித்த நேர்காணலில் இருந்து அவர் கூறிய சில விஷயங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
பணரீதியான சுதந்திரம்:
"நான் 21 வயது இருக்கும் பொழுது சுதந்திரமாக இருப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறினேன். அப்பொழுதிலிருந்து நான் பணரீதியாக சுதந்திரமாக தான் இருக்கிறேன். யாருடைய உதவியையும் நான் கேட்டது இல்லை. அப்படி பார்க்கும் பொழுது எல்லாரையும் போல எனக்கும் பணரீதியாக நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தது. எனக்கு உதவி வேண்டும் என்றால் தந்தை இருக்கிறார். ஆனால், நான் அவரிடம் உதவி கேட்டது இல்லை. நான் தனியாகவே அதை சமாளித்து கொண்டிருக்கிறேன்". இந்த முடிவை எடுப்பதற்கு என்ன காரணம் என்று கேட்ட பொழுது "எனக்கு தெரியவில்லை அதுதான் எனக்கு சரி என்று தோன்றியது" என்று கூறினார்.
சமூகத்தில் மாதவிடாய் பற்றி பேசுவது அவசியமானது:
பெண்களின் மாதவிடாய் பற்றி பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று நான் கேட்கிறேன். இன்றும் சானிட்டரி பேட்கள்(sanitary pad) வாங்க சென்றால் அதை பேப்பரில் சுற்றி தான் தருகிறார்கள். நாம் ஏன் அதை பல ஆண்டுகளாக மறைத்துக் கொண்டிருக்கிறோம், அதுதான் என்னுடைய கேள்வி. ஏனென்றால், இது அனைத்து குடும்பத்திலும் அனைத்து பெண்களுக்கும் நடக்கும் ஒரு விஷயம். நான் பேசும் மற்ற விஷயங்களை விட இதைப் பற்றி பேசும்பொழுது தான் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதைப் பற்றி பேசுவது அவசியமானது. ஏனென்றால் நகரங்களை தாண்டி வெளியில் இருக்கும் மக்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் பற்றி தெரிவதில்லை. பல பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் பற்றியே தெரிவதில்லை. மாதவிடாயின் போது பிடிப்புகள்(cramps) ஏற்பட்டால் அதற்காக என்ன செய்ய வேண்டும் என்பதும் பல பெண்களுக்கு தெரிவதில்லை. அது அப்படித்தான் இருக்கும், தாங்கிக் கொள் என்று சொல்லும் விஷயம் அது அல்ல. பல சமயங்களில் அது மருத்துவர்களால் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக கூட இருக்கலாம்.
ஒருவர் எடுக்கும் முடிவுகள் பற்றி நாம் ஜட்ஜ்(judge) செய்யக்கூடாது:
மத்தவங்க லைஃப்ல என்ன நடக்குது, எதுக்காக அவங்க அந்த டெசிஷன் எடுத்து இருக்காங்க என்பதை பற்றி நான் ஜட்ஜ்(judge) செய்ய மாட்டேன். அவர்கள் அதை செய்கிறார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கையில் ஒரு காரணம் இருக்கும். நாம் அனைவரும் எமோஷனல்(emotional) ஆகவும் யோசிக்கிறோம், அதேபோல் பிராக்டிகல்(practical) ஆகவும் யோசிக்கிறோம். நானும் இந்த சமூகத்தினால் influence செய்யப்பட்டிருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் நானும் அதற்காக சில தியாகம் செய்து இருக்கிறேன். எப்பொழுதும் நாம் மற்றவர்களை ஜட்ஜ் பண்ணக்கூடாது. அவர்களுக்கு என்ன சரி என்று படுகிறதோ அதை அவர்கள் செய்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களினால் இன்று அனைவரும் அவர்களின் கருத்துக்களை பதிவிடுகின்றனர். அனைவரும் எளிமையாக அவர்களின் கருத்துக்களை பதிவிட முடிகிறது. இது ஆண்களுக்கு நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. சமத்துவத்தை பற்றியும் கருத்துக்களை பற்றியும் பேசினால் இரண்டும் வெவ்வேறானது. வாழ்க்கையில் நான் மிகவும் கௌரவமாகவும், கம்போர்ட்டபில்(comfortable) ஆகவும் பிறந்து வந்துள்ளேன். அதற்காக நான் தினமும் கடவுளுக்கு நன்றி சொல்லுவேன். பெண்களுக்கு படிப்பு மறுக்கப்படும் பொழுது, அவர்களுக்கு ஆரோக்கியம் பற்றியும், மாதவிடாய் பற்றியும் எந்த தீங்கும் இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற பொழுதுதான் சமத்துவத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களாக நாம் இதைப் பற்றி பேசி, உதவி தேவைப்படும் மற்ற பெண்களுக்கு உதவ வேண்டும்.
நான் இந்த குடும்பத்தில் பிறந்ததை அதிர்ஷ்டமாக நினைக்கிறேன். அவர்கள் பிரபலமாக இருப்பதனால் இதை சொல்லவில்லை. இருவருமே முற்போக்கு சிந்தனை உடையவர்கள் மற்றும் சுதந்திரமாக சிந்திக்க கூடியவர்கள். இந்த தகுதிகளுடன் தான் என்னையும், என் தங்கையையும் அவர்கள் வளர்த்தார்கள். பெண்களால் இதை செய்ய முடியாது என்று அப்பாவும், அம்மாவும் சொன்னதே இல்லை. அவர்கள் நீங்கள் எதை செய்வதாக இருந்தாலும் கடினமாக உழைத்து, உங்களால் முடிந்தவரை செய்யுங்கள் என்று தான் சொன்னார்கள். ஆனால், இந்த சமூகம் தான் பெண் என்பதால் இது போன்ற விஷயங்களை தருகிறது.
Suggested Reading: இலக்குகளை நோக்கி செல்ல நயன்தாரா கூறும் ஐந்து அறிவுரைகள்
Suggested Reading: சாய்பல்லவி கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்
Suggested Reading: சமந்தா கூறிய ஊக்குவிக்கும் வாக்கியங்கள்
Suggested Reading: குக் வித் கோமாளி (Kani)கனியின் வாழ்க்கையை மாற்றியது எது?