தமிழில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிடும் பெண்கள்(Tamil YouTubers)

நகைச்சுவை பலரின் மன அழுத்தத்தை போக்குகிறது. அப்படி சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு மக்களை மகிழ்விக்கும் நான்கு பெண்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

Devayani
07 Mar 2023
தமிழில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிடும் பெண்கள்(Tamil YouTubers)

Image of the creators

பல திரைப்படங்களில் நீங்கள் கூர்ந்து கவனித்தால் நகைச்சுவை நடிகர்களை வெறும் உருவ கேலி செய்வதற்காக மட்டுமே வைத்திருப்பார்கள். நகைச்சுவை நடிகர்களின் திறமையை உபயோகிக்காமல் திரைப்படங்களில் அவர்களை வைத்து உருவக் கேலி செய்து அதை நகைச்சுவையாக மாற்றுகின்றனர். இதை பார்க்கும் மக்களும் அதை நகைச்சுவை என எடுத்துக்கொண்டு வாழ்க்கையிலும் மற்றவர்களை உருவ கேலி செய்வதை நகைச்சுவை என்று கருதுகின்றனர். 

இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் தற்போது பெரும்பாலும் ஆண்கள் தான் நகைச்சுவை நடிகர்களாக இருக்கின்றனர். எப்படி இருக்க சமூக வலைத்தளங்களில் நிறைய பெண்கள் அவர்களது நகைச்சுவையினால் மற்றவர்களை மகிழ்வித்து வருகின்றனர். மக்கள் விரும்பும் விஷயங்களை, மக்கள் அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி கொள்ள முடிகின்ற விஷயங்களை நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு மக்களை மகிழ்வித்து வரும் நான்கு காமெடி கன்டென்ட் கிரியேட்டர்ஸ் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீமதி சிமு:

srimathi

B.com படித்து முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தபோது இவருக்கு கிடைத்த வேலை பெரிய அளவில் அவரை திருப்தி படுத்தவில்லை. எனவே, அந்த வேலையை விட்டு MBA படிக்கலாம் என முடிவு செய்து நுழைவுத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்த பொழுது தான் YouTube சேனல் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் வந்தது. 
அப்பொழுதுதான் வாழ்வில் நடக்கும் விஷயங்களை வைத்து வீடியோக்களை பதிவிட தொடங்கினார். பிறகு தங்கச்சி சோதனைகள் என்ற இவரின் வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை பெற்றது. மேலும் இவரின் வீடியோக்களை மக்கள் ரசித்து பார்ப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் வித்தியாசமாக நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத விஷயங்களை கன்டென்டாக  செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.

Read more about: Srimathi Chimu

ஜெனி MJ:

Jenni MJ character shorts

கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு பேச்சுத் திறமை இருந்ததால் அப்பொழுதே ஜெனி ஹேக்ஸ் என்ற YouTube சேனலை ஆரம்பித்து hacksகளை பரிசோதிக்கும் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். பிறகு படித்து முடித்தவுடன் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்தார். அந்த வேலை மன அழுத்தமாக இருந்த காரணத்தினால் அதனை விட்டு YouTubeபில் முழு நேரமாக வீடியோக்களை பதிவிட தொடங்கினார். பிறகு Jenni MJ என்ற சேனலை தொடங்கி அதில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தார். அவர் எதிர்பார்த்ததை விட இந்த ஜெனி MJ என்ற சேனலுக்கு நிறைய பார்வையாளர்கள் கிடைத்தனர். 

பள்ளிகளில், நண்பர்கள் இடையில், வீட்டில் நடக்கும் எதார்த்தமான விஷயங்களை நகைச்சுவையாக மாற்றி தனது வீடியோக்களில் நடித்து பதிவிட்டு வருகிறார்.

Read more about: Jenni MJ

The Cheeky DNA:

The Cheeky DNA

சுபலட்சுமிக்கு மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதுமே இருந்தது. எனவே, The Cheeky DNA என்ற சேனலை ஆரம்பித்தார். இவர் ஆரம்பித்த காலத்தில் தான் மக்களுக்கு YouTube பற்றி தெரிய ஆரம்பித்தது. அதனால் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மற்றும் புது விதமான கன்டென்டுகளுடன் மக்களை மகிழ்வித்து வருகிறார். மேலும், இவர் Cheeky vlogs என்ற மற்றொரு YouTube சேனல் வைத்திருக்கிறார். அதில் பேஷன், லைஃப் ஸ்டைல் போன்ற வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். 

Read more about: Subhalaxmi - The Cheeky DNA

Simply Sruthi:

simply sruthi marriage⁠⁠⁠⁠⁠⁠⁠

ஸ்ருதி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு அசிஸ்டன்ட் ப்ரொபஷனாக சில நாட்கள் ஒரு கல்லூரியில் வேலை பார்த்து உள்ளார். பிறகு அந்த வேலையை விட்டு முழு நேரமாக YouTubeபில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட தொடங்கினார். இவர் படித்துக் கொண்டிருக்கும் போதே லைஃப் ஸ்டைல் பிரபோஷன்ஸ் என்ற YouTube சேனல் வைத்திருந்தார். அதை Simply Sruthi என மாற்றி அதில் நகைச்சுவை வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இவரின் ஷோபாமா  என்ற வேடம் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். 

Read more about: Sruthi

அடுத்த கட்டுரை