"The Elephant Whisperers" என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று புதிய வரலாற்றை படைத்துள்ளது. சிறந்த ஆவண குறும்பட பிரிவில் ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது. இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்(Kartiki Gonsalves) மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா(Guneet Monga) ஆகியோர் விருதை பெற்றுள்ளனர்.
இயக்குனர் கோன்சால்வ்ஸ் தனது வெற்றி உரையின் போது மக்களுக்கும், உலகத்திற்கும் இடையிலான புனித பந்தம் மற்றும் சக உயிரினங்கள் பற்றி பேசினார். தனது வெற்றியுரையை "என்னுடைய தாய் நாட்டிற்காக" என்று கூறி முடித்தார்.
தமிழ்நாட்டின் முதுமலையில் அனாதையான யானைகள் மற்றும் அவற்றை தத்தெடுக்கும் குடும்பத்தைச் சுற்றியே இப்படம் உருவாகிறது. காயமடைந்த யானை குட்டியை பார்த்துக்கொண்டு வளர்க்கும் தம்பதியினருக்கும், அந்த யானைக்கும் இடையிலான பந்தத்தை அழகாக காட்சிப்படுத்தியுள்ளது இந்த ஆஸ்கரை வென்ற ஆவணக் குறும்படம்.
தயாரிப்பாளர் குனீத் மோங்கா, "இரண்டு பெண்கள் இதை செய்துள்ளனர், நான் இன்னும் நடுங்குகிறேன்" என்று இந்த மிகப்பெரிய வெற்றியின் மகிழ்ச்சியை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
விருதை பெற்ற பிறகு இந்த வரலாற்று நிகழ்வைப் பற்றி பேசிய மோங்கா "இந்தியாவை சேர்ந்த இரண்டு பெண்கள் இந்த உலக மேடையில் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கின்றனர்" என்று கூறினார்.
யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்?
- கார்த்திகி கோன்சால்வ்ஸ் மும்பையை சேர்ந்த ஒரு போட்டோ ஜானலிஸ்ட் மற்றும் ஃபிலிம் மேக்கர். இவரின் வேலைகள் அனைத்தும் வன உயிரினங்கள், இயற்கை, சுற்றுச்சூழல் என இவற்றை சுற்றியே இருக்கும்.
- இயற்கை வரலாறு மற்றும் சமூக ஆவணப் புகைப்படக் கலைஞர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரான இவரை சோனி ஆல்பா தொடருக்கான சோனி இமேஜிங் தூதராக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- The Elephant Whisperers இவரின் முதல் இயக்கமாகும்.
- வெற்றியை "தாய்நாடு இந்தியாவிற்கு" அர்ப்பணிப்பதற்கு முன் தயாரிப்பாளர் குனீத் மோங்காவின், அகாடமி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு கோன்சால்வ்ஸ் நன்றி தெரிவித்தார்.
- தனது வெற்றியுரையை ஆரம்பிக்கும் பொழுது "நான் இங்கு இயற்கைக்கும் நமக்கும் இடையிலான புனித பந்தத்தை பற்றி பேசுவதற்காக நிற்கிறேன்" என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
- மேலும், பழங்குடி மக்களையும், விலங்குகளையும் மையமாகக் கொண்ட ஆவண படத்திற்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு நன்றியும் தெரிவித்தார்.
முதுமலை தேசிய பூங்காவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம், பழங்குடியினரான பொம்மன் மற்றும் பெல்லி தம்பதியினரின் பராமரிப்பில் இருக்கும் ரகு என்ற யானைக்குட்டியின் கதையாகும். இது அவர்களுக்கு இடையே உருவாகும் பிணைப்பை மட்டுமல்ல, இயற்கையின் அழகையும் கொண்டாடுகிறது. The Elephant Whisperers டிசம்பர் 2022, Netflixஇல் வெளியிடப்பட்டது.
The Elephant Whisperers மட்டும் இன்றி கூடுதலாக, எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிளாக்பஸ்டர் RRRஇல் இருந்து உலகளவில் வைரலான ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆஸ்காரை வென்றுள்ளது.
Suggested Reading: Home Cooking Show வெற்றியின் காரணம்- Hema Subramanian
Suggested Reading: தனது நடிப்பினால் மக்களை மகிழ்விக்கிறார் ஸ்ரீமதி (Srimathi Chimu)
Suggested Reading: IT வேலையை விட்டு மக் கேக்ஸ்(Mug Cakes) ஆரம்பித்த ஸ்வேதா
Suggested Reading: கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறிய CWC ரித்திகா