Advertisment

உருவக் கேலிகளை கடந்து தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வரும் VJ Sri Vidhya

Thuglife Thalaivi என்ற Podcastஇல் ஊக்கவிக்கும் பெண்கள் அவர்களின் வாழ்க்கை கதையை பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த முறை அந்த நேர்காணலில் VJ ஸ்ரீவித்யா கலந்துகொண்டு அவரின் வாழ்க்கை கதையை பகிர்ந்து கொண்டார்.

author-image
Devayani
புதுப்பிக்கப்பட்டது
New Update
VJ Sri Vidhya

Images of VJ Sri Vidhya

கலாட்டா சேனலில் VJவாக பணியாற்றி வரும் VJ ஸ்ரீ வித்யா SheThePeople தமிழுடன் நடந்த ஒரு நேர்காணலில் அவரின் வாழ்க்கை பயணம் பற்றி பகிர்ந்து கொண்டார். RJவாக தொடங்கிய அவரின் பயணம் தற்பொழுது VJவாகவும், படங்களிலும் நடித்து வருகிறார். அவர் Thuglife Thalaivi என்ற பாட்காஸ்டில் பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

நீங்கள் RJவாக இருந்திருக்கிறீர்கள், VJவாக இருந்திருக்கிறீர்கள், படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் இந்த பயணம் எப்படி தொடங்கியது?

எல்லாருக்கும் தொலைக்காட்சியைப் பார்த்து நாமும் அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும்.‌ எனக்கும் அப்படித்தான். அந்த நேரத்தில் YouTubeஇல் கான்செப்ட் வீடியோக்கள் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது ஸ்மைல் சேட்டையுடன் ஆரம்பித்த இந்த பயணம் தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. சிறுவயதில் இருந்து தொலைக்காட்சியில் வரவேண்டும் என்ற ஆசை இருந்தது. யாராவது நம்மை பார்த்து எனக்கு உங்களை தெரியும் என்று சொல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. அப்படித்தான் இந்த பயணம் தொடங்கியது.

இந்தப் பயணத்தில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

Advertisment

நான் எங்கு சென்றாலும் எல்லோரும் “நீ குண்டா இருக்க” என்றுதான் சொல்லுவார்கள். நீ எல்லாம் எதுக்கு இத ட்ரை பண்ற என்று கேட்பார்கள். இதற்கு முன்பு நான் ஒரு காதல் உறவில் இருந்தேன். அப்பொழுது அந்த நபர் கூட "நீ எல்லாம் எதுக்கு இத ட்ரை பண்ற" என எதிர்மறையாக கூறினார். நிறைய பேர் நீ இதுக்கெல்லாம் சரியா இருக்க மாட்ட என்று கூறியிருக்கின்றனர். ஆரம்பத்திலிருந்து இது போன்ற வார்த்தைகளை தான் நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். இப்பொழுது நான் தமிழ் நன்றாக பேசுகிறேன். ஆனால் முன்பு எனக்கு அவ்வளவாக பேச வராது. அதற்கும் என்னை கலாய்ப்பார்கள். இப்படி நிறைய எதிர்மறையான விஷயங்களை நான் எதிர்கொண்டு இருக்கிறேன்.

VJ Sri Vidhya

வாழ்க்கையில் உங்களுக்கு எது திருப்பு முனையாக இருந்தது?

Advertisment

RJ தொசீலா நடத்திய ஒரு கிளாஸில் நான் சேர்ந்தேன். அவர் என் தமிழ் வார்த்தைகளில் இருந்து அனைத்தையும் மாற்றினார். எதெல்லாம் எனக்கு வராது என்று எல்லோரும் சொன்னார்களோ அதை எல்லாம் நான் அந்த இடத்தில் மாற்றிக் கொண்டேன். ஆறு மாதம் தொடர்ந்து நான் பயிற்சி எடுத்துக் கொண்டேன். நான் முன்பு சூரியன் FM வேலூர் ஆடிஷனுக்கு சென்றபோது என்னை செலக்ட் செய்யவில்லை. ஆனால், அதன் பிறகு நான் திருச்சி ஆடிஷனில் கலந்து கொண்டேன் அதில் என்னை தேர்ந்தெடுத்தார்கள். எங்கு நான் முதலில் தோல்வி பெற்றேனோ அதே இடத்தில் என்னை தேர்வு செய்தது மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.

இந்தப் பயணத்தில் உங்களுக்கு ஆதரவாக யார் இருந்தார்கள்?

ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை என் அம்மா மற்றும் அப்பா எனக்கு பெரிய ஆதரவாக இருக்கிறார்கள். இந்த பயணத்தில் நான் இதை செய்யக்கூடாது என்று நிறைய பேர் என்னை விட்டு சென்று இருக்கிறார்கள். ஆனால் எனது பெற்றோர்கள் உனக்கு பிடித்ததை செய் என்று எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். கடந்த ஒரு ஆண்டாக என்னுடைய ஃபியான்சே(fiancé) சந்தோஷ் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருக்கிறார். நான் கலாட்டாவில் சேர்ந்த பிறகு டைமிங் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும். சில சமயம் FDFSக்கு அதிகாலையில் செல்ல வேண்டி இருக்கும், பிறகு ஆபீஸ் செல்ல வேண்டும், மற்ற வேலைகளை முடித்துவிட்டு இரவு தான் வீட்டிற்கு வருவேன். எனது வேலையை புரிந்து கொண்டு எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார். நான் சோர்வாக இருந்தாலும் என்னை அவர் ஊக்கவித்துக் கொண்டிருப்பார். இந்த ஒரு ஆதரவு இல்லையெனில் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருப்பேன். 

Advertisment

VJ Sri Vidhya images⁠⁠⁠⁠⁠⁠⁠

மீடியா துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஆலோசனை என்ன?

எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் நான் செய்ய மாட்டேன், அங்கு தான் செய்வேன் என்று எதையும் ஒதுக்க கூடாது. நான் ஆரம்பித்த போது சிறிய சேனல்களிளும் வாய்ப்பு தேடினேன். ஒரு சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் அதில் உங்கள் திறமையை எப்படி நிரூபிக்க முடியும் என்று பார்க்க வேண்டும்.

Advertisment

இன்று சமூக வலைத்தளம் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நான் ஆரம்பிக்கும் பொழுது சமூக வலைத்தளங்கள் பெரிதாக இல்லை. இன்று RJவாக வேண்டும் என்று விரும்புபவர்கள் podcast செய்யலாம். இது போன்ற நிறைய விஷயங்களை முயற்சித்து பார்க்கலாம். எதையும் விடாமல் அனைத்து வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பணரீதியாக சுதந்திரமாக இருப்பது எவ்வளவு முக்கியம்?

ரொம்ப முக்கியம். யாரையும் சார்ந்து இல்லாமல், சொந்தக்காலில் நிற்பது தான் கரெக்டான விஷயம் என்று அம்மா என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார். அது மிகவும் முக்கியமான ஒன்று. நாம் சுதந்திரமாக இருப்பது முக்கியம். ஆனால் எப்படி சுதந்திரமாக இருக்கிறோம் என்பது இரண்டாவது முக்கியமான விஷயம். சரியான முறையில் தான் இதை நாம் பயன்படுத்திக் கொள்கிறோமா? உங்கள் மனதிற்கே தவறு என்று தோன்றினால் அதை நீங்கள் செய்யக்கூடாது. உங்கள் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதை முதலில் செய்யுங்கள். மாதம் மாதம் உங்களுக்கென ஒரு வருமானம் வருவது மிகவும் முக்கியமானது. அப்பொழுதுதான் நீங்கள் விரும்பியதை யாரையும் எதிர்பார்த்து இல்லாமல் நீங்களே செய்து கொள்ளலாம்.

Advertisment

இதுபோன்று பல விஷயங்களை Thuglife Thalaivi என்ற Podcastஇல் VJ ஸ்ரீவித்யா பகர்ந்துள்ளார். அவர் பகிர்ந்து கொண்ட விஷயங்களை கேட்க கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.

Click Here: Follow your passion - VJ Sri Vidhya | Video Jockey | Actress

Suggested Reading: பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்(women rights)

Suggested Reading: பெண்கள் பிளாக்மெயிலை(blackmail)எப்படி கையாள வேண்டும்? வழக்கறிஞர் திலகவதி

Suggested Reading: பெண்ணியம் (feminism) என்றால் என்ன? Abilashni (Kannammas Content)

Suggested Reading: இந்த தலைமுறையினர் எதிர்கொள்ளும் மன அழுத்தங்கள்- Kannammas content

show anchor video jockey VJ Sri Vidhya
Advertisment