விநாயகர் சதுர்த்தி என்பது வருடத்தில் ஒருமுறை அனைவராலும் கொண்டாட கூடிய ஒரு பண்டிகையாகும். இந்த நாளில் தான் விநாயகர் பிறந்ததாக கருதப்படுகிறது. September 19 அன்று விநாயகர் சதுர்த்தி ஆரம்பித்து September 23 இல் முடிவடைகிறது. தேவி பார்வதி தான் விநாயகரை சந்தனத்தால் உருவாக்கப்பட்டார் என்று நம்பப்படுகிறது. பார்வதி விநாயகரை காவலுக்கு விட்டுவிட்டு,குளிக்க சென்று விட்டார். சிவனுக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது. அங்கு வந்த சிவனை விநாயகர் உள்ளே விடாததால்,கோபப்பட்ட சிவன்,விநாயகரின் தலையை வெட்டினார். இதனால் கோபமடைந்த பார்வதி காளி அவதாரத்தை எடுத்தார். உண்மையை அறிந்த சிவ,ன் ஒரு குழந்தையின் தலையை, எடுத்து வர அவரின் ஆட்களுக்கு உத்தரவிட்டார். அவர்கள் சென்று ஒரு குட்டி யானையின் தலையை எடுத்து வந்தனர். சிவன் அந்த தலையை மனித உருவத்தில் இருக்கும் விநாயகருக்கு கொடுத்து உயிர் கொடுத்தார்.
எதற்காக கொண்டாடப்படுகிறது:
விநாயகர் புது பிறவியை எடுத்ததால் Vinayagar Chathurti கொண்டாடப்படுகிறது என்று அனைவராலும் கருதப்படுகிறது. இந்த நாளில் விநாயகரின் சிலையை அனைவரும் அவர்களின் வசதிக்கு ஏற்ப மூன்று ஏழு பத்து என நாட்களுக்கு வைத்திருப்பர். பின் அந்த சிலையை எடுத்து அடுத்த வருடம் விநாயகர் மீண்டும் வரவேண்டும் என்று தண்ணீரில் கரைத்து விடுவர். அந்த சில நாட்கள் விநாயகரை வைத்திருக்கும் பொழுது அவரை நன்றாக பூஜித்தால் நமக்குத் தேவையான செல்வம் வெற்றி மற்றும் நல்லவை நடக்கும் என இந்து தர்மம் கூறுகிறது.
சுவையான மோதகம்:
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மிகவும் பிடித்ததாக கருதப்படுவது கொழுக்கட்டை தான். அவை பால் கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை, இனிப்பு கொழுக்கட்டை, மோதக கொழுக்கட்டை மற்றும் கொழுக்கட்டை பாயாசம் என பல விதத்தில் பரிமாறப்படுகிறது. குழந்தைகளுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து சாப்பிடுவது மிகவும் விருப்பமாக இருக்கும். மேலும் விநாயகர் சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இந்த சீசனில் கொழுக்கட்டை மாவுக்கான விளம்பரங்கள் தான் அதிகமாக காணப்படுகின்றது. சுவையான மோதகங்களை விதவிதமாக செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
Seed Ganesha:
விதையினால் உருவாக்கப்பட்ட இந்த விநாயகர் சிலையை வீட்டில் பூஜித்து பின் நம் வீட்டில் உள்ள ஏதோ ஒரு செடிகளில் கரைத்து விடலாம். அது ஒரு புது செடியாகவோ மரமாகவோ வளர்ந்து இந்த பூமிக்கும் உதவும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் Seed Ganesha. சுற்றுச்சூழலை மனதில் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த மாதிரி விநாயகர் சிலைகளை வாங்கி பூஜிக்கலாம்.
உங்களால் முடிந்த உதவி:
விநாயகர் சதுர்த்திக்கு வீண் செலவு ஏதும் செய்யாமல், உங்களால் முடிந்த உதவியை ஏதோ ஒரு ஆஷ்ரமத்திற்கோ அல்லது முதியோர் காப்பகத்திற்கோ செய்யலாம். பண்டிகை அன்று அவர்களுக்கு உதவுவதால் உங்களுக்கு ஒரு நன்மை தானே! இல்லை என்றால் நீங்கள் தெருக்களில் தஞ்சமடைந்தோர் ஒரு வேலையோ அல்லது இரண்டு வேளையோ உணவு அளிக்கலாம். கருணையில் இறைவனை பார்க்கலாம் என்று சொல்வர். எனவே விநாயகர் சதுர்த்தியை யார் யாருக்கு எப்படி பிடித்திருக்கிறதோ அந்த விதத்தில் கொண்டாடி மகிழுங்கள்!
Suggested reading:
https://tamil.shethepeople.tv/society/things-you-should-teach-your-male-child-1347731
https://tamil.shethepeople.tv/society/how-to-be-a-happy-woman-1345974
https://tamil.shethepeople.tv/society/say-no-to-breakup-1344727
https://tamil.shethepeople.tv/health/7-yoga-poses-for-pcospcod-1345175