Advertisment

Yummy Tummy Aarthiயின் வாழ்க்கை பயணம்

இந்திய உணவுகள் மட்டுமின்றி வெளிநாட்டு உணவுகளின் செயல்முறையையும் தனது Yummy Tummy Aarthi Vlogs என்ற YouTube பக்கத்தில் பதிவிடுகிறார் ஆர்த்தி.

author-image
Devayani
New Update
yummytummyaarthi

Images are used from Aarthi's Instagram handle

சமையல் மீது உள்ள தீராத பற்றினால் அதையே தனது முழு நேர வேலையாக மாற்றி மக்களுக்கு இந்திய உணவுகளை கற்றுத் தருவது மட்டுமில்லாமல் வெளிநாட்டு உணவுகளையும் தமிழில் கற்று தருகிறார் ஆர்த்தி. 

Advertisment

சிறுவயதில் இருந்து சமையல் மீது ஆர்வம் கொண்ட ஆர்த்தி அவ்வப்போது வீட்டில் சில உணவுகளை செய்து பார்த்துக் கொண்டிருந்தார். கல்லூரி படிப்பை முடித்து வேலைக்கு சென்ற பொழுது அவர் சமைத்து எடுத்து செல்லும் உணவுகளை பார்த்து அனைவரும் அதன் செயல் முறையை கேட்டுள்ளனர். அப்பொழுது அவருடன் வேலை செய்தவர்கள் இப்படி ஒவ்வொருவருக்கும் உணவின் செயல் முறையை சொல்வதற்கு பதிலாக நீ அதை இணையதளத்தில் பதிவிட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளனர். இந்த காரணத்தினால் ஆர்த்தி Yummy Tummy என்று ஒரு blog ஆரம்பித்தார். தனக்கு தெரிந்த ரெசிபிகள், அவர் செய்து பார்க்கும் உணவுகளின் செயல்முறையை அதில் பதிவிட ஆரம்பித்தார். இப்படித்தான் அவரின் பயணம் தொடங்கியது.

yummytummyaarthivlogs

Blogging ஆரம்பித்த இரண்டு மூன்று வருடத்திற்குள் அவருக்கு திருமணம் ஆனது. திருமணம் ஆன பிறகு தான் அவர் சமைப்பதை தொழிலாக மாற்ற முடிவு எடுத்தார். அதனால் முழு நேரம் blogging மற்றும் vlogging என இரண்டிலும் கவனம் செலுத்தினார்.‌ குழந்தைகளுக்கான உணவு குறிப்புகளை பதிவிட்ட பொழுது இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

Advertisment

இந்திய உணவுகள் மட்டுமின்றி வெளிநாட்டு உணவுகளையும் இவர் செய்து காண்பிப்பதால் பலருக்கு அது பிடித்திருந்தது. இது போன்ற வெளிநாட்டு உணவுகளை அவர் நிறைய சமையல் புத்தகங்களின் மூலம் படித்து அதை வீட்டில் முயற்சித்து பார்த்து மக்களுக்கும் அதை தனது வீடியோக்களில் கற்றுத் தருகிறார். மேலும், சமையல் நிகழ்ச்சிகள், கடைகளில் மற்றும் வெளியில் எங்காவது சென்றால் அங்கு சாப்பிடும் உணவுகளையும் வீட்டில் செய்து பார்த்து அதையும் மக்களுக்காக பதிவிடுகிறார்.

yummytummyaarthi

ஆரம்பத்தில் இவர் தனது பிளாக்காக(blog) எடுக்கும் புகைப்படங்களை வீடியோவாக மாற்றி Yummy Tummy என்ற ஒரு ஆங்கில YouTube சேனலில் பதிவிட்டார். அதன் பிறகு தமிழில் ஒரு சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற ஆசையினால் Yummy Tummy Aarthi Vlogs என்ற தமிழ் YouTube சேனல் ஆரம்பித்து அதில் சமைப்பதுடன் மற்ற குறிப்புகளையும் இணைத்து vlog ஆக வெளியிட ஆரம்பித்தார்.

Advertisment

இவர் தமிழ் YouTube சேனல் ஆரம்பித்த பொழுது குழந்தைகள் இருந்ததால் முழுமையாக ஒரு சமையல் வீடியோவாக போடாமல் அதை vlogg ஆக மாற்றி அன்றாட வாழ்வில் ஒரு குழந்தை உள்ள வீட்டில் அம்மாக்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே பதிவிட ஆரம்பித்தார். இதுபோன்ற வீடியோக்கள் பதிவிடுவது எதார்த்தமாக இருந்ததால் மக்களும் அதை விரும்பிப் பார்க்க ஆரம்பித்தனர். பிறகு இதுபோன்ற வீடியோக்களே ஆர்த்தியின் அடையாளமாக மாறிவிட்டது.

இவர் மாஸ்டர் செஃப் தமிழிலும் பங்கேற்றுள்ளார். மேலும் Yummy Tummy என்ற ஒரு சமையல் புத்தகத்தையும் வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Advertisment

Suggested Reading: Amma samayal மீனாட்சியின் வாழ்க்கை பயணம்

Suggested Reading: Thaai Herbals தொழிலை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் Archana

Suggested Reading: குறைபாடு என்று மற்றவர்கள் கூறியதை தனது அடையாளமாக மாற்றினார் Ramya

Suggested Reading: MNC வேலையை விட்டு Thinai Organics ஆரம்பிந்த Saranya

Yummy Tummy Aarthi Yummy Tummy Aarthi Vlogs
Advertisment