Advertisment

Wedding Functions- தயாராகுங்கள் சுலபமாக!

கல்யாண வீட்டார் கூட இவ்வளவு முறை கடைக்கு சென்று இருக்க மாட்டார்கள். ஆனால் கல்யாணத்திற்கு செல்லும் முன் நாம் துணிகளை தேர்ந்தெடுப்பதற்கும் நகைகளை வாங்குவதற்கும் மேக்கப் பொருட்கள் வாங்குவதற்கும் செல்லும் அலப்பறை இவ்வளவுதான் என்று இல்லை.

author-image
Pava S Mano
New Update
Function

Image is used for representational purpose only

கல்யாணம் பெண் கூட இவ்வளவு கவலைப்பட்டு இருக்க மாட்டார்கள். கல்யாணத்திற்கு செல்வதற்கு முன் கல்யாண பெண்ணை காட்டிலும் கல்யாணத்திற்கு வருகை தருவோர் செய்யும் ஆடம்பரமும் செலவும் அளவில்லாதது. ஒரு உறவினர் கல்யாணமும் நண்பர்கள் கல்யாணமும் வந்துவிட்டால் அதற்காக நாம் ஆரவாரமாக தயாராகிக் கொண்டிருக்கிறோம். ரிசப்ஷன் இருக்கு தனி ஆடை மற்றும் மேக் அப், திருமணத்திற்கு வேறு மாதிரி மேக்கப் என பல விஷயங்கள் ஒரு திருமணத்திற்கு செல்லும் முன் நம் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றை சுலபமாக இதோ இந்த வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

Advertisment

Instant skin care:

எந்த wedding function செல்லும் முன் இதை follow செய்யுங்கள். Oil Skin இருப்பவர்கள் ரிசப்ஷன் போன்ற கல்யாண வரவேற்பை attend செய்வதற்கு முன் அவர்கள் சருமத்தை இன்னும் பொலிவாக வைத்திருக்க இதை செய்யுங்கள். கற்றாழை ஜெல்லை எடுத்து அதில் காபி பவுடர் கலந்து நன்றாக முகத்தை ஸ்கிரப் செய்யுங்கள். ஒரு இருபது நிமிடம் கழித்து முகத்தை கழுவி விட்டு உங்கள் Makeup steps ஐ follow செய்யுங்கள். இதனால் உங்களின் சருமம் எப்பொழுதும் இருப்பதை விட சற்று அதிகமாக பொலிவாக இருக்கும். Dry skin இருப்பவர்கள் நான்கு டீஸ்பூன் பால் எடுத்துக்கொண்டு அதை cotton balls உங்கள் முகத்தில் இருக்கும் அழுக்கை எடுத்து விடுங்கள். பின் முகத்தை கழுவி விடுங்கள். இது natural Glowing agent ஆக உங்கள் முகத்தை பளபளக்க வைக்கும். 

ஆடைகள் அணிகலன்கள்:

Advertisment

Function

ரிசப்ஷன் இருக்கு எப்பொழுதும் Simple but grand ஆன ஆடைகளை தேர்வு செய்யுங்கள். சற்று மினுமினுக்கும் ஆடைகளை அணிந்து கொண்டால் அனைவரின் கண்ணும் உங்கள் மேல் தான் இருக்கும். அதேபோல் ஆடைகளில் வரும் நிறங்களுக்கு ஏற்ப அணிகலன்களை தேர்வு செய்து முன்னரே ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் புடவை கட்டுகிறீர்கள் என்றால் முன்னதாகவே Pre-pleating செய்து வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் திருமண வரவேற்புக்கு கிளம்பும்போது பதட்டத்தில் அந்த நேரம் சுலபமாக இருக்கும். மேலும் நீங்கள் என்ன வகை ஆடைகள் அணிகிறீர்களோ அதற்கு ஏற்ப Slippers உம் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

இப்பொழுதெல்லாம் நகங்களை கூட false nails கொண்டு அழகு படுத்துகிறார்கள். உங்கள் ஆடைகளுக்கு ஏற்ப மேட்சிங் ஆக நகங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

என்ன பரிசு கொடுப்பது?

Function

திருமணத்திற்கு ரெடியான பின் அவர்களுக்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று குழப்பம் நம்மிடத்தில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவர்கள் வருங்காலத்தில் உபயோகிக்கக்கூடிய ஒரு பொருளை நீங்கள் பரிசாக கொடுங்கள். உதாரணத்திற்கு அவர்கள் அறையில் வைக்க Lantern, Bean Bag போன்ற வீட்டு உபயோக பொருட்களை நீங்கள் கொடுக்கலாம். இல்லையென்றால் அவர்களிடமிருந்து முன்னரே இருவருடைய படங்களை வாங்கிக் கொண்டு customized gifts உம் பரிசாக அளிக்கலாம். உங்களுக்கு மிகவும் நெருக்கமான நபர் என்றால் அவர்களுக்கு உங்களால் முடிந்த Couple trip ஐ arrange செய்யலாம். இப்பொழுதெல்லாம் திருமணத்தில் dancers வந்து கலை கட்டுகிறார்கள். அவர்களுக்கு surprise அளிக்கும் வகையில் flashmob கூட ரெடி பண்ணலாம்.

Advertisment

எந்த விசேஷங்கள் வந்தாலும் சரி நீங்கள் தைரியமாக மற்றும் கூடே இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதில் தான் உங்களின் அழகு வெளிப்படுகிறது. மகிழ்ச்சியாக இருங்கள், அழகாக வாழ்த்துங்கள்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/society/mobile-apps-you-must-know-before-traveling-solo

Advertisment

https://tamil.shethepeople.tv/society/6-rules-all-dil-and-mil-should-follow

https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage

https://tamil.shethepeople.tv/society/importance-of-simple-wedding

Advertisment

 

Wedding Function
Advertisment