நீங்க Solo travel செய்யும்போது இந்த 5 Apps அ Use பண்ணுங்க!

பெண்கள் இப்பொழுது தனியாக பயணம் செய்வது என்பது Trend ஆக மாறி வருகிறது. அப்படி செல்லும் பொழுது அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல Mobile Apps வளம் வந்து கொண்டிருக்கிறது. அவைகள் என்ன என பார்க்கலாம்!

author-image
Pava S Mano
New Update
Solo travelers

Image is used for representational purpose only

இளம் வயதினரிடம் அதுவும் பொதுவாக பெண்களிடம் இப்பொழுது தனியாக சுற்றுலா செல்வது என்பது மிகவும் பிரபலமாகி வருகிறது. அவர்கள் தனியாகவும் மற்றும் அவர்கள் தோழிகளுடனும் சேர்ந்து வெளிநாடு முதல் இந்தியாவின் பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும் அழகாக திட்டமிட்டு சென்று வருகின்றனர். அவர்கள் அதிகமான உற்சாக குழு பயணங்களும் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

Travel

சுற்றுலா துறையை பொருத்தவரை இன்று மிகவும் Trending ஆனா துறையாக மாறி வருகிறது. நீங்கள் ஆயிரம் பயணம் மேற்கொண்டு இருந்தாலும் ஒரு புது இடத்திற்கு செல்லும் பொழுது ஒரு பதட்டம் இருந்து கொண்டே தான் இருக்கும். இப்படி தனியாக சுற்றுலா செல்லும் நபர்களுக்கு அங்கு உள்ள சிறந்த உணவகங்கள் எங்கு இருக்கும் மற்றும் அவர்களைப் போல தனியாக சுற்றுலா வந்திருக்கும் நபர்கள் யார் என இந்த செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  • Travello

இது Travellers களுக்கான பிரத்தியேகமான App. இந்த செயலி ஆனது ஒரு சமூக வலைத்தளமாகும். அனைத்து வகையான சுற்றுலா மேற்கொள்ளும் நபர்களையும் இச்செயலின் மூலம் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். Backpackers தொடங்கி urban tourists வரை அனைவரும் இச்செயலியை பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

  • Tourlina

Advertisment

இது பெண்களுக்கு எனவே exclusive ஆக இருக்கும் ஒரு செயலியாகும். இதில் நீங்கள் செல்ல வேண்டிய இடம் மற்றும் சுற்றுலா தேதி பதிவு செய்துவிட்டால் அந்த செயலியை அந்த தேதியில் பயணிக்க போகும் மற்ற சுற்றுலா பயணிகளை உங்களுக்கு காட்டும். இதன் மூலமாக இருவரும் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ளலாம் மற்றும் சேர்ந்தே திட்டமிடலாம்.

  • Chefsfeed 

தனியாக சுற்றுலா செல்லும் பொழுது நமக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே எங்கு சென்று சாப்பிடுவது என்பதுதான். அப்படி திண்பாடுபவர்களுக்கான செயலி இதோ. இந்த செயலியில் உங்கள் அருகே உள்ள அனைத்து வகையான restaurants மற்றும் pubs ஐ தெரிந்து கொள்ளலாம்.

  • Backpackr

இந்த செயலி சுற்றுலா செல்லும் மற்ற  நபர்களை இணைக்க பயன்படுகிறது. இது ஒரே இடத்திற்கு பயணம் செய்யும் நபர்களை இணைக்க உதவுகிறது. மேலும் இதில் bonus points சேர்த்து அதனை நீங்கள் தங்கவிருக்கும் ஹோட்டல்களில் redeem செய்யும் வசதியும் உள்ளது.

  • SoloTraveller

Advertisment

இந்த செயலி உலகில் பெரும்பாலான solo travellers பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் நிஜ வாழ்விலே உங்களைப் போன்ற தனியாக சுற்றுலா செல்லும் நபர்களுடன் நண்பர்களாக இந்த செயலி ஒரு பாலமாக விளங்குகிறது. 

Travelling

இந்தியாவில் கேரளாவில் பெண்கள் சுற்றுலா செல்வதற்காக முன்னுரிமை அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு உகந்த செயலி ஒன்றை கேரளா அரசு உருவாக்கியுள்ளது. கேரளாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்களின் நலனையும் பாதுகாப்பையும் காப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆலோசித்து உகந்த நடவடிக்கையை கேரளா அரசு எடுத்து வருகிறது. பெண்களுக்கு என பிரத்தியேகமாக பல பேக்கேஜ்களை உருவாக்கி பல பெண்களை இதில் ஈடுபடுத்தவும் ஆயுதமாகியுள்ளனர். 

Advertisment

எங்கு சென்றாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பு அவர்கள் வாழ்கின்ற சமூகத்தால் மட்டுமே கொடுக்க முடியும். அது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்!

Suggested reading:

https://tamil.shethepeople.tv/news/important-things-to-know-about-solo-travelling

https://tamil.shethepeople.tv/society/work-from-home-opportunity-for-housewife

https://tamil.shethepeople.tv/society/things-about-love-marriage

https://tamil.shethepeople.tv/society/single-child-parenting-tips



solo travel